கணணி முன் உட்கார முன்னர் சில யோசனைகள்

நாம் கணிப்பொறி முன் சரியாக அமர்ந்து கொள்ள வேண்டும். அப்படி அமர்ந்து கொள்ளாவிட்டால் கழுத்து, இடுப்பு, முதுகு, கைகள் போன்ற இடங்களில் வலி ஏற்படும். ஆகையால் நான் சொல்லுமாறு அமர்ந்து கொள்ளுங்கள். கழுத்து, இடுப்பு, கைகள், தேல்கள் போன்றயிடங்களில் வழி ஏற்பட்டால் உடன் வைத்தியரிடம் ஆலொசனை பெறவும்.

கணினி மேசையானது 65ல் இருந்து 70 செ.மீ உயரம் இருக்க வேண்டும். நாம் அமர்ந்தபின் நமது உடல் கால் பகுதியில் இருந்து 90டிகிரி இருக்குமாறு பார்த்துக் கொள்ள வேண்டும். அதாவது நன்கு நிமிர்ந்து உட்கார்ந்திருக்க வேண்டும். நமது கண்களுக்கும் திரைக்குமான இடைவெளி 50ல் இருந்து 60 செ.மீக்கு குறையாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். திரை வடிகட்டி(பில்டர்) பயன்படுத்துதல் நல்லது. 30ல் இருந்து 45 நிமிடத்துக்கு ஒருமுறை நம் பார்வையைத் திரையில் இருந்து அகற்றி தூரத்தில் உள்ள பச்சை மரங்களையோ, கொடிகளையோ காண வேண்டும். குறைந்தது 2முதல் 5 நிமிடத்துக்கு கண்களுக்கு ஓய்வு கொடுத்தபின் மீண்டும் திரையைப் பார்க்கலாம்.








*அதிக விசை கொடுத்து மவுசை பிடிக்காதீர்கள்..

*நேரடி வெளிச்சத்தில் அமர்ந்து பணிபுரிவதை தவிர்க்கவும்..

*தோள்களை இலகுவாக வைத்திருக்கவும், கைமூட்டுக்களை இலகுவாகவும், நேராகவும் வைத்திருக்கவும்.

*மணிக்கட்டுக்களை நீட்டி நேராகவும் மேசைக்கு இணையாகவும் வைக்கவும்.

*உங்கள் பர்வை மட்டத்தில் கொஞ்சம் கீழே இருக்குமாறு திரையை அமைக்கவும்.

*கழுத்தை கொஞ்சம் தாழ்த்தியே வைத்திருக்கவும், தலையை முன்னோக்கி நீட்டி இருக்கக்கூடாது.



*உங்கள் கண்களுக்கும் திரைக்கும் இடையே 60 சென்டி மீட்டர் இடைவெளி இருக்க வேண்டும்.

*ஒவ்வொரு அரைமணி அல்லது முக்கால் மணி நேரத்திற்கொரு முறை திரையிலிருந்து பார்வையை விலக்கி ஒரு வெற்று இடத்தை கொஞ்சம் நேரம் பார்க்கவும். அல்லது பச்சை மரங்களைப் பார்க்கவும்.

*முதுகினை எப்பொதும் இருக்கையில் சாய்ந்திருக்குமாறு அமரவும்.

*கால் பாதங்கள் தரையில்படும்படி இருக்கவும்.

*கொஞ்ச நேரத்திற்கு ஒரு முறை உட்கார்ந்திருக்கும் நிலையை மாற்றவும்.

*இரண்டு மணி நேரத்திற்குகொரு முறை சிறிது உலாவி வரலாம். வேலையிடத்தில் வேலை பார்ப்பவர்கள் வேறு எதாவது வேலைகளை பார்க்கலாம்.

*திரை : ஆன்டிகிளேர் திரைகள் திரையிலிருந்து வரும் கதிர்கள் நம் கண்களை பாதுகாக்கின்றது

*கீபோர்ட் பாவிக்கும் போது மணிக்கட்டை ஓய்வாக வைத்திருக்கவும். கீபோர்ட் பட்டன்களை மெதுவாக அழுத்தவும். அச்சு தட்டில் தூசிகள் படியாத வண்ணம் பாதுகாத்துக் கொள்ளவும்.

*மவுஸ் உள்ளங்கையின் பெரும் பகுதியை ஆக்கிரமிக்காதவாறு சிறிய மவுஸ்களை வாங்கவும். ஸ்க்ரோலிங் பட்டன் உள்ள மவுஸ் வாங்குவது சிறந்தது.

*இருக்கை, மேசைகள்: மலிவாக கிடைக்கின்றது என்பதற்காக முறையற்ற மேசை நாற்காலிகளை வாங்காமல் முதுகுக்கு ஏற்ற வகையில் தயாரிக்கப்பட்டவைகளை மட்டுமே பார்த்து வாங்கவும்.

கருத்துரையிடுக

6 கருத்துகள்

  1. அன்பு நண்பரே!!
    என் பதிவு ஒன்னு போட்டேன்!! தமிழ்மணத்தில் சேர்த்தும் விட்டேன்! ஆனால் தமிழ்மணத்தில் வரவில்லை. 1/2 மணிநேரம் முயற்சி பண்ணி முடியவில்லை!
    எவ்வளவு முயற்சி செய்தும் புது இடுகை காணப்படவில்லை என்றே வருகிறது!!!!
    பதிவுப்பட்டையிலும் அனுப்பு என்றே இருக்கிறது!
    இதை எப்படி சரி செய்வது?
    உதவி செய்க.
    தேவா..
    http://abidheva.blogspot.com/2009/03/blog-post_4562.html

    பதிலளிநீக்கு
  2. அன்பின் நண்பரே!!
    என் பதிவு ஒன்னு போட்டேன்!! தமிழ்மணத்தில் சேர்த்தும் விட்டேன் ஆனால் தமிழ்மணத்தில் வரவில்லை. 1/2 மணிநேரம் முயற்சி பண்ணி முடியவில்லை.. பதிவுப்பட்டை மாறாமல் அனுப்பு என்றே காட்டுகிறது!! கீழேயுள்ள பதிவில் பாருங்களேன்!!
    நன்றி<
    தேவா..

    http://abidheva.blogspot.com/2009/03/blog-post_4562.html

    பதிலளிநீக்கு
  3. @thevanmayam

    உங்களுக்கும் இப்படியா நடக்குது ,எனக்கும் இப்படிதான், என்னுடைய பல பதிவுகளும் தமிழ்மண‌த்தில் இணைக்கப்படாமலேயே சென்றுவிட்டன.பதிவை தமிழ்மணத்துக்கு அனுப்பிய பின்னரும் "அனுப்பு" என்ற option காண‌ப்படும்.இதை தமிழ்மணம் நிர்வாகிகளிடம் தான் அறிவிக்க வெண்டும்.

    admin@thamizmanam.com என்ற முகவரிக்கு உங்கள் குறைகளை தெரிவியுங்கள்.

    பதிலளிநீக்கு