TopBottom

அயன்-விமர்சனம்

எழுதியவர் : Karthikan Karunakaran 04 April 2009

நடிப்பு: சூர்யா, தமன்னா, பிரபு , ஆகாஷ் தீப் சைகல்

இசை: ஹர்ரிஸ் ஜெயராஜ்

தயாரிப்பு : ஏ.வி.எம்

இயக்கம்: கே.வி .ஆனந்த்

நிழல் உலகம் , கள்ளக் கடத்தல் , போதைப்பொருள் என்பவற்றை மையமாக வைத்து உருவாக்கப்பட்ட இப்படத்தை சன் பிக்சர்ஸ் வெளியிட்டுள்ளது.

சமூகத்தில் மிக உயர்ந்த நிலையில் உள்ள மனிதர்களுக்காக நிழல் உலகில் சர்வதே ரீதியில் கடத்தல் செய்பவராக பிரபு (தாஸ்). பிரபுவின் நண்பனின் மகனான சூர்யாவும் (தேவா) , கருணாசும் பிரபுவிடம் வேலை செய்கிறார்கள். சூர்யா தனது திறமையாலும் மாறு வேடங்களாலும் சுங்கத்துறையின் கண்ணில் மண்ணை தூவிவிட்டு பிரபுவிடம் தங்கம் , வைரம் , திருட்டு வீ .சிடி போன்றவற்றை கடத்தி கொண்டு வந்து கொடுக்கிறார்.

பிரபுவின் ஆரம்பகால முதலாளியின் மகனாக இன்னொரு கடத்தல்காரராக வில்லன் ஆகாஷ் தீப் சைகல் .பிரபு தங்களை விட முன்னுக்கு வந்தது பிடிக்காமல் பிரபுவையும் சூர்யாவையும் போலீசில் மாட்டிவிட்டு பிரபுவின் இடத்தை தான் பிடிக்க நினைக்கிறார். இதற்கிடையில் நடக்கும் விரோதம் , நட்பு , காதல் , துரோகம் , பாசம் தான் படத்தின் மீதிக்கதை. படம் ஆரம்பம் முதல் இறுதி வரை தொய்வின்றி செல்வது படத்தின் சிறப்பு. சென்னை , கொங்கோ , மலேசியா , தான்சானியா என படத்தின் கதைக்களம் பல இடங்களில் எடுக்கப்பட்டிருக்கிறது.

சூர்யா ஆரம்பம் முதல் இறுதிவரை தனது திறமையை வெளிப்படுத்தியிருக்கிறார். சண்டைக்காட்சிகள் ஆங்கில படங்களின் பாணியில் நம்ப முடியாத அளவுக்கு இருந்ததாலும் சூர்யாவின் சிக்ஸ் பேக் உடம்பு கைகொடுத்திருக்கிறது. பொருட்களை திறமையாக கடத்தும் போதும் ஆங்கிலத்தில் அதிகாரிகளிடம் உரையாடும் போதும் நகைசுவைகாட்சிகளிலும் காதல் காட்சிகளிலும் சூர்யா தனது பங்கை சிறப்பாக செய்திருக்கிறார்.

தமன்னா படத்தின் நாயகி அழகாக இருக்கிறார் . இவருடைய அழகு படத்துக்கு படம் ஏறிக் கொண்டே செல்கிறது. படத்தில் இவருடைய நடிப்பு பரவாயில்லை சூர்யாவுடனான காதல் காட்சிகளில் மட்டுமே தோன்றுவதால் நடிப்புக்கு பெரிதாக சந்தர்ப்பம் கிடைக்கவில்லை. பாடல் காட்சிகளில் மெழுகு பொம்மை போல இருக்கிறார். வில்லன் வீடுக்கு சென்று மைக்ரோ போன் வைக்கும் காட்சி சிறப்பாக இருக்கிறது. இயக்குனர் தமன்னாவை இன்னும் கொஞ்சம் நன்றாக பயன்படுத்தியிருக்கலாம்.

தெருவில் விளையாடிக் கொண்டிருக்கும் சிறுவர்களை திடீரென வந்த இராணுவம் சுட்டுக் கொன்றதும் உறவினர்கள் அந்த உடல்களை எடுத்துஸ் சென்றதும் மீண்டும் சில நொடிகளில் அங்கெ எதுவுமே நடைபெறாததுபோல மக்கள் சாதாரணமாக நடமாடுவது. அந்த கால் பந்தை இன்னொரு சிறுவன் எட்டி உதைத்து விளையாடுவது போன்ற கொங்கோவில் நடைபெறும் கொடுமைகளை ஒரே நிமிடத்தில் காட்டியிருப்பது இயக்குனரின் சிறப்பு.

படத்தின் பிளாஷ் பேக் காட்சிகளை ரீ-வைண்ட் செய்து காட்சிப் படுத்தியதில் ஒளிப்பதிவும் எடிட்ங்கும் நன்றாக இருக்கிறது. ஆபிரிக்காவின் மலைப் பிரதேசம் கொங்கோவில் நடைபெறும் சண்டைக்காட்சிகள் மலேசியாவில் நடைபெறும் கார் சேசிங் என்பனவற்றை பிரமாண்டமாக ஒலிப்பதிவு செய்து படத்துக்கு மேலும் பலம் சேர்த்திருக்கிறார் ஒளிப்பதிவாளர் எம்.எஸ்.பிரபு. பாடல் காட்சிகளிலும் பாலைவனம் , சிறிய செட்டை கூட பிரம்மாண்டமாக ஒளிப்பதிவு செய்திருக்கிறார்.

வில்லன் ஆகாஷ் தீப் சைகளின் நடிப்பு நன்றாக இருக்கிறது. போதைபொருள் கடத்தியதை தட்டிக்கேட்ட தந்தையை மாடியிலிருந்து தள்ளி கொல்லும்பொதும் மதனின் வயிற்றை கிழித்து ஹெராயினை எடுக்க சொல்லும் போதும் கொடுரமாக இருக்கிறார். சூர்யாவின் நண்பணாகவும் தமன்னாவின் அண்ணனாகவும் வரும் மதன் சூர்யாவிற்கு துரோகம் செய்யும் போதும் மீண்டும் மலேசியாவில் சூர்யாவின் நட்புக்காக ஏங்கும்போதும் வாழும் வரைக்கும் எப்படியும் வாழலாம் ஆனால் சாகும்போது நல்லவனாக சாக வேண்டும் என்று சொல்லும்போதும் நன்றாக நடிக்கிறார். இவர் கைதட்டு வாங்குவது ஒரு சோக காட்சியில்.

படத்தின் இசையமைப்பாளர் ஹர்ரிஸ் ஜெயராஜின் பின்னணி இசை நன்றாக இருக்கிறது. மஹதி, ஹர்ரிஸ் ராகவேந்திராவின் "நெஞ்சே நெஞ்சே" பாடலும் சின்மயி , பென்னியின் "பூவசமே..சுவாசமே " பாடலும் கார்த்திக்கின் "விழி மூடி யோசித்தால் "பாடலும் மீண்டும் மீண்டும் கேட்கலாம். இந்த மூன்று பாடல்களினதும் காட்சி அமைப்பும் நடனமும் ஒளிப்பதிவும் நன்றாக இருக்கிறது.
மற்றபடி "பள பள " பாடலில் சூர்யா தனது முன்னிய படங்களின் வேடங்களில் வருவது மாறும் பெண் வேடம் என்பன நன்றாக இருக்கிறது. நைட் கிளப்பில் நடக்கும் பாடல் காட்சி இளமை.

சுங்கத்துறை அதிகாரிகள் கவனிக்க வேண்டிய நிறைய விடயங்களை படத்தில் கூறியிருக்கிறார் இயக்குனர் கே.வி. ஆனந்த். படத்தின் இறுதியில் சூர்யா சுங்கத்துறை அதிகாரி பொன்வண்ணனுடன் சேர்ந்து தனது திறமையால் வில்லன் கடத்தும் பொருட்களை கண்டுபிடிப்பதும் இறுதியில் வில்லனை வீழ்த்தி சுங்கத்துறை அதிகாரியாக வேலைக்கு செர்வதுடன் படம் முடிகிறது.

அயன் மொத்தத்தில் நகைச்சுவை கலந்த ஆக்க்ஷன் படம் .அனைவரும் பொழுதுபோக்காக ரசிக்கும் படி கொடுத்திருக்கிறார் இயக்குனர்.

அயன் : கொடுத்த டிக்கட் காசுக்கு பயன்.

4 Comments

 1. Ramesh Says,

  valaippoovil padittha matra vimarsanangalai vida ungal vimarsanam arumai....

   
 2. Reply To This Comment
 3. Ramesh Says,

  valaiyil padittha matra vimarsanangalai vida ungal vimarsanam arumai......

  padam super. romba nal kalitthu tamilil koduttha kasukku thrupthi dharum padam.

   
 4. Reply To This Comment
 5. அவர் பேரு மதன் இல்லீங்க ஜெகன்

   
 6. Reply To This Comment
 7. அவர் பேரு மதன் இல்லீங்க ஜெகன்

   
 8. Reply To This Comment
:a   :b   :c   :d   :e   :f   :g   :h   :i   :j   :k   :l   :m   :n   :o   :p   :q   :r   :s   :t

About Me

My Photo
Karthikan Karunakaran
View my complete profile

Twitter

  Twitter Updates

   follow me on Twitter

   Recent Comments