வர இருக்கும் மொபைல் ஆப்பரேட்டிங் சிஸ்டங்கள்

மொபைல் போன் நிறுவனங்கள் பல கூடுதல் வசதிகளை மேலும் தரும் வகையில் பல மொபைல் ஆப்பரேட்டிங் சிஸ்டங்களை வடிவமைத்து வருவதாக அறிவித்துள்ளன. அவை எப்படி இருக்கும்; என்ன என்ன வசதிகள் தரும் என்பன குறித்து இங்கு காணலாம்.

ஆப்பிள் போன் .எஸ்.3.0:

இந்த ஆண்டு வெளியான அறிவிப்புகளில் அனைவரும் மிகவும் ஆவலோடு எதிர்பார்த்துக் காத்திருப்பது ஆப்பிள் நிறுவனத்தின் .எஸ். 3.0 தான். போன் மற்றும் பாட் டச் சாதனங்களுக்கு ஏறத்தாழ 100 புதிய வசதிகளைத் தர இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கட், காப்பி மற்றும் பேஸ்ட், 2ஈக இணைந்த புளுடூத் இவற்றில் முக்கியமானவை ஆகும். தரப்பட இருக்கும் எம்.எம்.எஸ் வசதி மூலம் போட்டோ, போன் புக் குறிப்புகள், ஆடியோ மற்றும் இடக் குறிப்புகளுடன் கூடிய வீடியோ ஆகியவற்றை அனுப்பலாம்.

மெயில்களுக்குள்ளாகவும் பாட் பைல்களிலும் தேடல் வசதி, புதிய ஸ்பாட் லைட் சர்ச் மூலம் சொல் கொடுத்து தேடல் ஆகிய வசதிகள் தரப்பட உள்ளன. மேலும் சிஸ்டம் வைட் லேண்ட்ஸ்கேப் கீ போர்டு, சபாரி தொகுப்பிற்கான பாஸ்வேர்ட் பாதுகாப்புடன் கூடிய வசதி, வைபி இணைப்புள்ள இடங்களில் தானாக இணைப்பு பெறும் வசதி, அசைத்து பைல் மாற்றும் வசதி ஆகியவையும் தரப்படும். ஆப்பிள் நியூ மேப் இன்டர்பேஸ் பயன்படுத்தி கூகுள் மொபைல் மேப் சேவையினை இணைத்துக் கொண்டு பயன்படுத்தலாம்.


விண்டோஸ் மொபைல் 6.5 .எஸ்:

இந்த தொகுப்பு போனை இயக்கும் நம் விரல்களுக்கு பல வசதிகளைத் தரும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் புதியதாக மை போன் (My Phone) என்ற வசதி அறிமுகப்படுத்தப்படுகிறது. மொபைல் போனில் உள்ள தகவல்களை பாஸ்வேர்ட் மூலம் பாதுகாத்து இணைய தளத்தில் வைத்திடும் வசதி இது. எனவே நீங்கள் புதிய போனுக்கு மாறினால் இணைய தளத்திலிருந்து நொடிப் பொழுதில் உங்கள் பழைய போன் தகவல்கள் அனைத்தையும் ஏற்றிக் கொள்ளலாம். உங்களுடைய விண்டோஸ் லைவ் .டி. மூலம் மைபோன் வசதியைப் பயன்படுத்தி இணைய தள வசதியைப் பெறலாம். இந்த தளத்தினைப் போனில் பெற்று போனில் உள்ள பைல்கள் அல்லது பெர்சனல் கம்ப்யூட்டரில் உள்ள பைல்களைக் கையாளலாம்.

இந்த ஆப்பரேட்டிங் சிஸ்டம் மூலம் விண்டோஸ் லைவ் சர்வீசஸ் தருகின்ற லைவ் சர்ச், லைவ் மெசஞ்சர் ஆகிய வசதிகளைப் பெறலாம். இந்த சிஸ்டத்தில் டச் ஸ்கிரீன் வசதிகள் கூடுத லாக்கப்பட்டுள்ளன. போனை அசைத்து மேற்கொள்ளப்படும் செயல்பாடுகளை இதில் மேற்கொள்ளலாம். போன் லாக் செய்யப்பட்டிருந்தாலும் ஸ்கிரீனுக்கான லாக் ஸ்கிரீனைத் திறந்து அதில் உள்ள வசதிகளைப் பயன்படுத்தலாம். இந்த ஆப்பரேட்டிங் சிஸ்டத்தில் இன்டர்நெட் மொபைல் பிரவுசர் ஒன்று இணைக்கப்படவுள்ளதாக மைக்ரோசாப்ட் அறிவித்துள்ளது. இதன் மூலம் டெஸ்க் டாப் கம்ப்யூட்டர் ஒன்றில் கிடைக்கும் இணைய மற்றும் கம்ப்யூட்டர் அனுபவம் கிடைக்கும்.

பாம் தரும் வெப் .எஸ்:

பாம் (palm) நிறுவனம் அண்மையில் தந்துள்ள பாம் பிரி டச் ஸ்கிரீன் ஸ்லைடர் போனில் அதன் வெப் .எஸ். இணைக்கப்பட்டுள்ளது. இந்த ஆப்பரேட்டிங் சிஸ்டம் பல்வேறு பயன்பாடுகளை ஒருங்கிணைத்துத் தரும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதில் மல்ட்டி டச் வசதி தரப்பட்டுள்ளது. வழக்கம்போல மற்ற ஆப்பரேட்டிங் சிஸ்டங்கள் தரும் ஜி.பி.எஸ்., வைபி, 2ஈக இணைந்த புளுடூத் ஆகியவையும் இதில் தரப்பட்டுள்ளன.

ஆண்ட்ராய்ட் .எஸ்:

ஓப்பன் ஹேண்ட்செட் அலையன்ஸ் என்ற அமைப்பு ஏற்படுத்தப்பட்டு ஆண்ட்ராய்ட் .எஸ். வெளிவந்தது. இந்த ஆப்பரேட்டிங் சிஸ்டத்தின் வடிவமைப்பு தொழில் நுட்பங்கள் மற்ற டெவலப்பர்களுக்கு வழங்கப்படுகிறது.இதனால் பல இந்த ஆப்பரேட்டிங் சிஸ்டத்துடன் இணைந்து செயல்பட பல புரோகிராம்கள் வெளிவர இருக்கின்றன. எந்த புதிய டெக்னாலஜி வந்தாலும் அதனுடன் இணையும் அளவிற்கு இது வளைந்து கொடுக்கக் கூடிய ஆப்பரேட்டிங் சிஸ்டமாகும்.


பிழைகள் திருத்தும் வசதி, எம்.எம்.எஸ். இணைப்புகளையும் சேவ் செய்திடும் வசதி, புதிய ஜாவா ஸ்கிரிப்ட் இஞ்சின் இணைந்த செயல்பாடு, கட்டிங் அண்ட் பேஸ்டிங், தேடுதல் வசதியான பைண்ட் வசதி, கேமராவிற்கான வீடியோ ரெகார்டிங் ஆகியவையும் அளிக்கப்பட்டுள்ளன. பேசுவதைப் புரிந்து கொள்ளும் வசதியும் வர இருக்கிறது. டவுண்லோட் செய்வதில் இடை இடையே நிறுத்தி பின் விட்ட இடத்தில் இருந்து தொடரும் வசதியும் தரப்பட்டுள்ளது. இந்த ஆப்பரேட்டிங் சிஸ்டங்கள் அனைத்தும் தொடர்ந்து வடிவமைக்கப்பட்டு சீரமைக்கப்பட்டு வருகின்றன. இவை விரைவில் இந்திய போன்களில் கிடைக்கும் என்று எதிர்பார்க்கலாம்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்