TopBottom

நம் வீட்டுக் குழாயின் முனிசிபல் வாட்டர் சப்ளை மாதிரி நம் இன்டர்நெட் இணைப்பின் வேகம் சற்றுக் குறைவாக இருந்தால் உடனே நமக்கு ணைப்பினைத் தரும் நிறுவனத்தை மனதிற்குள் திட்டத் தொடங்குவோம். ஆனால் இந்த திட்டுதலை முடித்த பின்னர் சற்று பொறுமையாக யோசிக்கலாம். குறை .எஸ்.பியிடம் இருக்கலாம். ஆனால் அந்த முடிவிற்கு வரும் முன் வேறு சிலவற்றை நம் பக்கமும் தேடலாம்.

நமக்கு வரும் கேபிள்களின் இணைப்பு விலகி இருக்கலாம். நம் வீட்டிற்கு வந்த குழந்தை மோடத்தின் ஸ்விட்சை மாற்றி இருக்கலாம். எனவே இந்த இணைப்புகள் எல்லாம் சரியாகப் பொருந்தி இருக்கின்றனவா என்று முதலில் பார்ப்பது நல்லது.

1.எப்போதும் உள்ளே வரும் கேபிள்கள் நேராக இணையும் வகையில் இருக்க வேண்டும். நீளமான கேபிளைப் பெற்று அதனை வட்ட வடிவத்தில் சுற்றி வைத்து இணைப்பு கொடுப்பது என்றுமே பிரச்சினைக்கு வழி வகுக்கும்.

மேலும் நெட் இணைப்பு தரும் கேபிள்கள் பெரும்பாலும் மின்சாரத்தைக் கொண்டு வரும் கேபிள்கள் மற்றும் தொலைபேசி கேபிள்கள் அருகிலேயே வரும்படி அமைக்கிறார்கள். இணைக்கின்ற இடங்களில் சிறிய அளவிலான கேபிள்களை இணைத்துவிட்டு விடுகின்றனர். இதன் மூலம் இணைப்பு கிடைத்தாலும் விரைவில் இவை விட்டுவிட வாய்ப்புகள் உண்டு. எனவே நேரம் மற்றும் சற்று கூடுதலான பணத்தை செலவழித்து இவற்றைச் சரியாக வைத்திருங்கள்.


2.உங்கள் இணைப்பு நிச்சயம் ஏ .டி.எஸ்.எல். வகை இணைப்பாகத்தான் இருக்கும். இந்த வகை இணைப்புக்கு ஒரு வீட்டுக்குள்ளாக சிக்னல் ஸ்பிளிட்டர் அமைத்திருப்பார்கள். இந்த சாதனம் உயர்ந்த நிலை அலைவரிசைகளில் வரும் சிக்னல்களை குறைந்த நிலை அலைவரிசையில் கிடைக்கும் டெலிபோன் சிக்னல்களைப் பிரித்துத் தருவது இதன் வேலை. உங்கள் போன் இணைப்பில் ஒன்றுக்கு மேற்பட்ட போன்களுக்கான பேரலல் இணைப்பு கொண்டிருந்தால் அது இந்த ஸ்பிளிட்டரை அடுத்தே இருக்க வேண்டும். முன்னால் இருக்கக் கூடாது.


3.வயர் இணைப்புகள் சரியாக இருப்பதனை உறுதி செய்த பின் சாப்ட்வேர் செட்டிங்ஸை சரி பார்க்கவும். பொதுவாக இதற்கு பலவகை ஆப்ஷன்ஸ் உண்டு. கம்ப்யூட்டருக்கும் மோடத்திற்குமான இணைப்பு சரியாக உள்ளதா என்று அறிய கமாண்ட் ப்ராம்ப்ட்டில் ping 192.168.1.1 கொடுத்து செக் செய்வது உண்டு. இந்த செயல்பாட்டில் இணைப்பிற்கான மெசேஜ் பாக்கெட்டுகள் சென்று வருவது உறுதி செய்யப்படும். இதிலேயே எம்.டி.யு.செட்டிங்ஸ் சரி பார்ப்பதும் உண்டு. MTU என்பது Maximum Transmission Unit ஆகும். உங்களுடைய கம்ப்யூட்டருக்குள் இன்டர்நெட்டிலிருந்து டேட்டா பாக்கெட்டுகளாகத் தொடர்ந்து வருகின்றன. இது உங்கள் கம்ப்யூட்டருக்கேற்றவகையில் இருக்க வேண்டும்.

பெரிய பாக்கெட்டாக இருந்தால் இணைப்பு இருக்கும். டேட்டா கிடைக்காது. சிறிய பாக்கெட்டுகளாக இருந்தால் அதிக நேரம் எடுக்கும். இந்த பாக்கெட் எந்த அளவில் இருக்க வேண்டும் என்பதனை உங்கள் கம்ப்யூட்டரின் ஆப்பரேட்டிங் சிஸ்டம் தான் முடிவு செய்கிறது. விண்டோஸ் இதனை 1,500 என செட் செய்கிறது. இது உங்கள் இணைப்பிற்கேற்ப சரியாக உள்ளதா என்பதனை பல அளவுகளில் சோதனை மேற்கொண்டு அந்த அனுபவத்தின் அடிப்படையிலேயே அமைக்கலாம்.

4.கீழ்க்காணும் வழிகளைப் பின்பற்றவும். நெட் கனெக்ட் செய்து கொள்ளுங்கள். பின் ஸ்டார்ட் ரன் டயலாக் பாக்ஸில் cmd என டைப் செய்து கமாண்ட் ப்ராம்ப்ட் பெறவும். இதில் ping www.google.com f 1 1472 என டைப் செய்திடவும். இதற்கான விடையாக "Reply from 72.14.235.99: bytes=1472 time=186ms TTL=52" என்பது போலவோ அல்லது இதற்கு இணையாகவோ வந்தால் அளவை அட்ஜஸ்ட் செய்திடத் தேவை இல்லை. இந்த பைட்ஸ் அளவை உங்களுக்கு இணைய இணைப்பு தரும் நிறுவனத்திற்கேற்றபடி குறைத்துக் கொள்ளலாம்.

படிப்படியாகக் குறைத்து வருகையில் எந்த வேல்யுவிற்கு சரியாக உள்ளதோ அதனை வைத்துக் கொள்ளலாம். இதனுடன் முதலில் 2 கூட்டி வைத்துக் கொள்ளுங்கள். இது சரியாக செயல்பட்டால் மேலும் 28 கூட்டவும். 28 என்பது ஐ.பி. மற்றும் ஐ.சி.எம்.பி. ஹெடர்களுக்கான கூட்டுத்தொகை. இனி வரும் எண்ணே உங்களின் சரியான MTU ஆக இருக்கும்.

5. டி.என்.எஸ். சர்வர்: அனைத்து பிராட்பேண்ட் இணைப்புகளும் உங்களுக்கு இணைப்பு தரும் நிறுவனத்தின் டொமைன் நேம் (Domain Name Server) சர்வரினைப் பயன்படுத்தும்படி செட் செய்யப்பட்டிருக்கும். இணைய இணைப்பில் இது முக்கிய பணியை மேற்கொள்ளும். உங்கள் இணைய முகவரியை வாங்கிக் கொண்டு அந்த தளத்திற்கான சரியான எண்ணைத் தரும் வேலையை இது மேற்கொள்கிறது. www.Google.com என நீங்கள் கொடுத்தால் இந்த பெயரை அத்தளத்தின் எண்ணாக 216.239.51.99 என மாற்றிக் கொடுப்பது இதன் வேலை. ஓர் இணைய தளத்தின் சரியான முகவரி இது போன்ற எண்களில் தான் இருக்கும். ஆனால் நம்மால் நினைவில் வைத்துக் கொள்ள முடியாது என்பதால் நாம் சொற்களில் வைத்துக் கொள்கிறோம்.

இந்த முகவரிக்கான எண்ணைக் கண்டுபிடிப்பதில் டொமைன் நேம் சர்வர் அதிக நேரம் (4 விநாடிகளுக்கு மேல்) எடுத்துக் கொண்டால் நமக்கு இன்டர்நெட் இணைப்பு பெறுவது மிகவும் தாமதமாகத் தெரியும். நம் இன்டர்நெட் இணைப்பிற்கான டி.என்.எஸ். சர்வரினைப் பொதுவாக மாற்றுவதில்லை. நிறுவனம் வழங்குவதனையே வைத்துக் கொள்கிறோம். ஆனால் மாற்ற வேண்டும் என எண்ணினால் நல்லதொரு வேகமாக இயங்கும் சர்வருக்கு மாற்றிக் கொள்ளலாம்.

6. நம் இணைப்பைப் பயன்படுத்தும் புரோகிராம்கள்: நம் கம்ப்யூட்டரில் பதிந்து வைத்திருக்கும் புரோகிராம்கள் நமக்குத் தெரியாமலேயே அவற்றை அப்டேட் செய்திட நம் இன்டர்நெட் இணைப்பைப் பயன்படுத்தும். பின்னணியில் இது நடைபெறும். மைக்ரோசாப்ட், ஐ–ட்யூன்ஸ், ஆண்டி வைரஸ் சாப்ட்வேர், குரோம், ஸ்கைப் என பலவற்றை இதற்கு உதாரணமாகக் கூறலாம். இவை பின்னணியில் இயங்குகையிலும் நம் இன்டர்நெட் வேகம் குறையும். இவை இயங்குவதனை அறிய டாஸ்க் மேனேஜர் விண்டோவினை கண்ட்ரோல்+ஆல்ட்+டெல் அழுத்திக் கண்டறியலாம். விரும்பினால் அவற்றின் இயக்கத்தை நிறுத்தலாம்.


7. கம்ப்யூட்டர் கிளீன்: உங்கள் கம்ப்யூட்டரில் பல வைரஸ்கள் அமர்ந்து கொண்டு தங்கள் பணியைத் தொடர்ந்து மேற்கொண்டிருந்தாலும் உங்கள் இன்டர்நெட் வேகம் மிக மிகக் குறையும். எனவே வைரஸ் சோதனையை அவ்வப்போது மேற்கொள்ளவும். ஆண்டி வைரஸ் தொகுப்புகளை அப்டேட் செய்து வைக்கவும்.


8. பிரவுசர் ட்யூனிங்: இப்போது புழக்கத்தில் உள்ள அனைத்து பிரவுசர்களும் தேவையற்ற விளம்பரங்களைத் தடுக்கும் வழிகளை மேற்கொள்ளும் வசதியைக் கொண்டுள்ளன. எனவே அவற்றைப் பயன்படுத்தி விளம்பரங்கள், அனிமேஷன்கள் குறுக்கிடுவதனைத் தடுக்கவும். மேலே சொன்ன அனைத்திலும் நீங்கள் உறுதியாக இருந்தால் இன்டர்நெட் தயங்குவதற்கு நீங்கள் காரணமாக இருக்க மாட்டீர்கள் என உறுதியாகச் சொல்லலாம்.

12 Comments

 1. malar Says,

  உங்கள் பதிவு உபயோகமாக இருந்தது.நன்றி

  அமீரகத்தில் pc to phone call கள் முழுதும் voip வேலை செயவில்லை hotspots போட்டு பேசுகிறார்கள் .அதுவும் தெரிந்தால் fine என்று பய முறுதுகிறார்கள் hotsposts குறிப்பட்ட நபர் தான் use பண்ணுகிறார்கள் என்று கண்டு பிடிக்க முடயுமா ? தற் சமயம் octro .net வழியாக பேசுகிறார்கள் .இதை எப்படி pc யில் பயன் படுத்துவது.

   
 2. Reply To This Comment
 3. Hickson Says,

  Very useful Post.
  Thanks Mate.

   
 4. Reply To This Comment
 5. நல்ல தகவலுக்கு நன்றி.

   
 6. Reply To This Comment
 7. very well post

   
 8. Reply To This Comment
 9. dear honey tamil,

  can guide how to attach tamizmanam in my blog?

  Last time I have but after change the blog layout I cannot attach.

   
 10. Reply To This Comment
 11. @ ரிஷி (கடைசி பக்கம்)

  இதை தமிழ்மணம் நிர்வாகிகளே தங்கள் பக்கத்தில் கொடுத்துள்ளார்களே??? இந்த‌ பக்கத்துக்கு சென்று அறியவும்.

   
 12. Reply To This Comment
 13. dear karthik,

  Thank for the needy help.

  I tried on the support page in classic version of tamizmanam and i can't find

  now tamizmanam tool bar working well.

  But toolbar is disturbing the title and page of my post.

  do u any solution?

   
 14. Reply To This Comment
 15. Karthik Says,

  @ @ ரிஷி (கடைசி பக்கம்)

  அப்படியே அந்த கருவிப்பட்டையை தமிழிஷ் கருவிப்பட்டைக்கு கீழே கொண்டுவந்து விடுங்கள்

   
 16. Reply To This Comment
 17. karthik,

  thank you for nice support now everything alright

  :-)

   
 18. Reply To This Comment
 19. chandra Says,

  how to get tamizh manam toolbar.

   
 20. Reply To This Comment
 21. @ chandra

  இந்தப்பக்கத்தை பார்க்கவும்
  http://www.tamilmanam.net/tamilmanam/toolbar/blogger.html

   
 22. Reply To This Comment
 23. shamshul Says,

  peace be upon u

  teally good

   
 24. Reply To This Comment
:a   :b   :c   :d   :e   :f   :g   :h   :i   :j   :k   :l   :m   :n   :o   :p   :q   :r   :s   :t

About Me

My Photo
Karthikan Karunakaran
View my complete profile

Twitter

  Twitter Updates

   follow me on Twitter

   Recent Comments