பிரவுசர் இல்லாமல் ஈ-மெயில் பயன்படுத்தலாம்.

இன்டர்நெட் தளங்கள் நமக்குப் பல்வேறு ஆன்லைன் சாதனங்களைத் தருகின்றன. இவற்றை ஆன்லைன் அப்ளிகேஷன் புரோகிராம்கள் என அழைக்கின்றோம். இவற்றை இன்டர்நெட் இணைப்பில் அந் தளங்களில் இருந்தவாறுதான் பயன்படுத்த முடியும். எடுத்துக் காட்டாக கூகுள் மெயில் நமக்கு இன்டர்நெட்டில் கிடைக்கும் ஆன்லைன் அப்ளிகேஷன்களில் பிரபலமானதும் அதிகம் பேரால் பயன்படுத்தப்படுவதும் ஆகும். இதனை ஒரு பிரவுசரைத் திறந்து அதன் மூலம் தான் பயன்படுத்த முடியும்.

இதற்குப் பதிலாக கூகுள் மெயில் மற்றும் இது போன்ற ஆன்லைன் அப்ளிகேஷன்களை இன்டர்நெட் இணைப்பில் பிரவுசர் இல்லாமல் தனியே ஒரு புரோகிராம் போன்று பயன்படுத்தும் வசதி கிடைத்துள்ளது. இவ்வாறு இதனை மாற்றித் தரும் புரோகிராம் ஒன்று இணையத்தில் கிடைக்கிறது. அதனை எப்படி இயக்கி இது போல டூல்களை அமைக்கலாம் என்று பார்ப்போம்.

இந்த புரோகிராம் பெயர் Mozilla Prism.இதனை இந்த முகவரியில் உள்ள தளத்திலிருந்து இறக்கிக் கொள்ளுங்கள். இது இலவசமாக வழங்கப்படுகிறது. அடுத்து அந்த தளத்தில் சிறிது ஸ்குரோல் செய்து அங்குள்ள கன்டென்ட் பாக்ஸில் Installer லிங்க் aஎன ஒன்று இருக்கும். இங்கு Latest Version பிரிவு கிடைக்கும். இதில் பல்வேறு பதிப்புகள் aதரப்பட்டிருக்கும். பல வகையான ஆப்பரேட்டிங் சிஸ்டங்களுக்கான மொஸில்லா பிரிஸம் புரோகிராமின் லிங்க் mகொடுக்கப்பட்டிருக்கும். அதிலும் Zip பதிப்பு மற்றும் நேரடியாக இயக்கக் கூடிய exe பைல்கள் கிடைக்கும். exe aபைலையே இறக்கிக் கொள்ளலாம். ஏனென்றால் ஸிப் பைலை விரித்து பின் இயக்கும் காலம் நமக்கு மிச்சமாகும். இந்த இன்ஸ்டலேஷன் பைலை உங்கள் டெஸ்க் டாப்பில் இறக்கிக் கொள்ளுங்கள்.

பின் உங்கள் டெஸ்க் டாப் சென்று இந்த பைலில் கிளிக் செய்து மொஸில்லா பிரிஸம் புரோகிராமினை இன்ஸ்டால் செய்து கொள்ளுங்கள். இன்ஸ்டால் செய்த பின் Start கிளிக் செய்து All Programs சென்றால் அங்கு இந்த புரோகிராம் பட்டியலில் இறுதியாக இருக்கும். இதனைக் கிளிக் செய்தால் பிரவுசர் இல்லாமல் இந்த புரோகிராம் இயக்கப்படும். இந்த வேளையில் இன்டர்நெட் இணைப்பில் இருக்க வேண்டும். மொஸில்லா பிரிஸம் புரோகிராமில் மேலாக ஒரு டெக்ஸ்ட் பாக்ஸ் வழங்கப்படும். இதில் நீங்கள் எந்த ஆன் லைன் டூலை (கூகுள் மெயில்) கம்ப்யூட்டர் புரோகிராமாக மாற்ற வேண்டுமோ அதன் தள முகவரியை (www.googlemail.com) டைப் செய்திடவும். பின் இங்குள்ள Name பாக்ஸில் இதனைப் புரிந்து கொள்ளும் வகையில் ஒரு பெயர் (Google Mail) வழங்கவும்.

இதன்
கீழாகப் பல வசதிகள் தேர்ந்தெடுக்க வழங்கப்பட்டிருக்கும். இவை எல்லாம் ஒரு பிரவுசர் வழியாகச் சென்றால் என்ன என்ன வசதிகள் இருக்குமோ அவை பட்டியலிடப்பட்டிருக்கும். உங்களுக்கு என்ன என்ன தேவையோ அவற்றிற்கான பாக்ஸில் டிக் அடையாளத்தை ஏற்படுத்தவும்.

பின் இதன் கீழாக இந்த புரோகிராமிற்கான ஷார்ட் கட் கீகள் எங்கெல்லாம் ஏற்படுத்தப்பட வேண்டும் என முடிவு செய்து ஆப்ஷன் தரலாம். டெஸ்க்டாப், குயிக் லாஞ்ச் பார் போன்ற இடங்களை முடிவு செய்திடலாம். இந்த புரோகிராமிற்கான ஐகானையும் நீங்கள் செலக்ட் செய்திடலாம். உங்கள் கம்ப்யூட்டரில் உள்ள சிறிய போட்டோக்களைக் கூட இதற்கு ஐகானாக வைக்கலாம்.

இனி இந்த புரோகிராமினை இயக்கிப் பார்க்கலாம். பிரவுசரிலிருந்து விலகி நீங்கள் ஏற்கனவே அமைத்த ஷார்ட் கட் ஐகான் மீது டபுள் கிளிக் செய்திடவும். வழக்கமான பிரவுசர் விண்டோவில் உங்கள் ஆன்லைன் அப்ளிகேஷன் திறக்காமல் தனி புரோகிராம் போல திறக்கப்படும். இதில் வழக்கமாக பிரவுசர் விண்டோவில் நம் கவனத்தைத் தேவையில்லாமல் இழுக்கும் தேவையற்ற பட்டன்கள் இருக்காது. இதனை வேர்ட், எக்ஸெல் போல ஒரு புரோகிராமாக இயக்கலாம். இதற்கான டேப் டாஸ்க் பாரில் இருக்கும்.

மொஸில்லா பிரிஸம் ஆன்லைன் டூலை தனி புரோகிராமாக உங்களுக்கு மாற்றிக் கொடுத்தாலும் வழக்கம் போல பிரவுசர் மூலமாகவும் நீங்கள் ஆன் லைன் டூலை இயக்கலாம். மொஸில் லா பிரவுசர் மூலம் உருவாக்கிய டூலை நீங்கள் தேவையில்லை என்றால் அன் இன்ஸ்டால் செய்து கொள்ளலாம். பிரிஸம் பயர் பாக்ஸ் அடிப்படையில் உருவானதால் பயர்பாக்ஸ் ஆட் ஆன் தொகுப்பு பயன்பாட்டினையும் இதில் இயக்கலாம். பிரிஸம் மூலம் உருவாக்கப்படும் ஆன் லைன் டூல்கள் எல்லாம் Web Apps என்ற போல்டரில் ஸ்டார்ட் மெனுவில் ஆல் புரோகிராம்ஸ் பிரிவில் தரப்பட்டிருக்கும்.

கருத்துரையிடுக

7 கருத்துகள்

  1. அவுட்லூக் மாதிரி mailclient பயன்பாடுகளும் இதைத்தானே செய்கின்றன. POP3 ஐ configure செஞ்சு பயன்படுத்தலாம்.

    பதிலளிநீக்கு
  2. உங்கள் தளம் geocities ல இருந்து எதையோ refer செய்யுது. அந்தத்தளங்களை மூடப்போறாங்களாம். எதை ரெஃபர் செய்றீங்களோ அதையெல்லாம் வேற சைட்டுக்கு மாத்திடுங்க

    பதிலளிநீக்கு
  3. @ தமிழ்நெஞ்சம்

    ஆமாம்.நானும் கேள்விப்பட்டேன்.தளத்தினுடைய வேகத்திற்காக‌ இந்த தளத்தினுடைய ஜாவாஸ்கிரிப்ட் பைல்கள் எல்லாத்தையும் geocities இல் தான் Upload செய்திருக்கிறேன். ஏற்கனவே கூகிளின் சேவையான Googlepages யும் மூடிவிட்டார்கள். எல்லாத்துக்கும் பொருளாதார நெருக்கடிதான் காரணம் போல.

    இந்தவருட இறுதியில்தான் மூடப்போகிறார்களாம் அதுவரைக்கும் பயன்படுத்துவோம்.

    பதிலளிநீக்கு
  4. Nice work, i alreday used outlook for this work, anyhow i read some comment below this articel (Tamil nenjam and MR.Kartik), completely no understand what they say????

    greeting..

    பதிலளிநீக்கு
  5. நானும் இவ் ஆட்ஓன்னை நிறைய நாட்களாக பயன்படுத்தி வருகிறேன்
    உபயோகமாகதொன்று

    பதிலளிநீக்கு
  6. Good One. I am getting to know so much useful information here which I don't see in any english blogs.

    பதிலளிநீக்கு