TopBottom

நியூட்டனின் 3 ஆம் விதி - விமர்சனம்

எழுதியவர் : Karthikan Karunakaran 07 May 2009

டி.வி. சேனலில் பணியாற்றுபவர் ஷாயாலி. தெருவோரங்களில் அவர் நடத்தும் கேண்டி கேமரா காமெடி நிகழ்ச்சிகளில் எஸ்.ஜே.சூர்யா சிக்கி அவமானப்படுகிறார். இருவருக்கும் மோதல் ஏற்பட்டு காதலாகின்றனர்.

ஷாயாலி மீது டி.வி. சேனல் முதலாளி ராஜீவ்கிருஷ்ணாவுக்கு கண். எஸ்.ஜே.சூர்யா-ஷாயாலி திருமண ஏற்பாடுகள் நடக்கிறது. இருவரையும் பிரிக்க சதி செய்கிறார் ராஜீவ். போலீசை ஏவி பொய் வழக்கில் சூர்யாவை ஜெயிலில் தள்ளுகிறார். ஷாயாலியை பலாத்காரம் செய்கிறார். அதில் ஷாயாலி இறக்கிறார். அடியாட்களை வைத்து வீட்டுக்குள்ளேயே பிணத்தை தூக்கில் தொங்க விட்டு நழுவுகிறார். ஷாயாலி வைத்திருந்த கேமராவில் இக்காட்சிகள் பதிவாகிறது. அதை பார்த்து ஆவேசமாகும் சூர்யா பழி வாங்கும் படலத்தில் இறங்குகிறார்.

ராஜீவ் கிருஷ்ணா பதுக்கிய கறுப்பு பணத்தை வருமான வரித்துறையிடம் சிக்கி வைக்கிறார். காதலி இறந்த அதே நாளில் அவரை கொல்லப்போவதாக நாள் குறிக்கிறார். அது நிறைவேறுகிறதா? என்பது கிளைமாக்ஸ்....

எடை மிஷினில் ஒரு ரூபாய் நாணயம் போட “காண்டம்” பாக்கெட் கொட்ட பதறுவது.. ஓட்டலில் அதை ஷாயாலியிடம் காட்டி இம்சிப்பது... துணி தைக்க ஷாயாலி தேகத்தை தொடாமலே அணு அணுவாய் உற்று பார்த்து அளவு எடுப்பது... என “ஏ” ரகமாய் ஆரம்ப காட்சிகள் நகர்கின்றன.

பழி வாங்கும் படலத்துக்கு வந்ததும் இறுக்கமான முகத்துக்கு மாறுகிறார்.

இன்னும் இரண்டு மணி நேரத்தில் கொல்வேன் என ராஜீவ்கிருஷ்ணாவிடம் சவால் விட்டு சில நொடிகள் சேனல் ஒளிபரப்பை நிறுத்துவது... எதிர் ஓட்டல் ஜன்னல் வழியாக துப்பாக்கியால் சுட்டு மிரட்டி ராஜீவ்கிருஷ்ணாவை அண்ணா நகருக்கு வர வைத்து அங்கு பதுக்கி வைத்த கறுப்பு பணத்தோடு அதிகாரிகளிடம் சிக்க வைப்பது... என அதிர வைக்கிறார் எஸ்.ஜே.சூர்யா.

பீஸா டெலிவரி ஊழியராக டி.வி. சேனல் அலுவலகத்தில் நுழைந்து மாட்டிக்கொள்வதும்... பிறகு அங்கிருந்து தப்புவதும் “விர்...”

சூர்யா-ராஜீவ்கிருஷ்ணா நேருக்கு நேர் மோதும் கிளைமாக்ஸ் காட்சிகள் எக்ஸ்பிரஸ் வேகமாய் எகிறுகின்றன. கையில் குத்துப்பட்டு துப்பாக்கி பிடிக்க முடியாமல் நழுவி விழ ரவுடிகளிடம் கோரமாய் அடிபட்டு அலறும் போது பரிதாப பட வைக்கிறார். நெருப்பில் தோட்டாக்களை சூடேற்றி ராஜீவை கொல்வது புதுமை.

ஷாயாலி அழகூட்டுகிறார். முடிவு பரிதாபம். ராஜீவ்கிருஷ்ணா வில்லத்தனம் மிரட்டல். யுகேந்திரன் அடியாளாக வருகிறார்.

பழி வாங்கும் கதையை விறுவிறுப்பாக நகர்த்தியுள்ளார் இயக்குனர் தாய்முத்து செல்வன். வினய் இசை, ஆர்.சரவணன் ஒளிப்பதிவு பரபர சீன்களுக்கு உரம் ஏற்றுகின்றன.

3 Comments

  1. yarl Says,

    wow

    www.tamil.com.nu

     
  2. Reply To This Comment
  3. Greetings from Norway...!!!

     
  4. Reply To This Comment
  5. @ Shan Nalliah / GANDHIYIST

    Thank u Very Much!!!
    *+*+*+*+*+*+*+*+*+*

     
  6. Reply To This Comment
:a   :b   :c   :d   :e   :f   :g   :h   :i   :j   :k   :l   :m   :n   :o   :p   :q   :r   :s   :t

About Me

My Photo
Karthikan Karunakaran
View my complete profile

Twitter

    Twitter Updates

      follow me on Twitter

      Recent Comments