சி.டி இல் காப்பி செய்யும் போது...


பைல்களையும் போல்டர்களையும் சிடியில் காப்பி செய்திட நாம் மேற்கொள்ள வேண்டிய வழிமுறைகளை இங்கு காணலாம்.

சிடி டிரைவில் எழுதப்படக் கூடிய காலியான சிடி ஒன்றை வைக்கவும். அடுத்து மை கம்ப்யூட்டரைத் திறக்கவும். எந்த பைல்களையும் போல்டர்களையும் காப்பி செய்திட வேண்டுமோ அவற்றைத் தேர்ந்தெடுக்கவும். ஒரு பைலுக்கு மேலாக செலக்ட் செய்திட வேண்டி இருந்தால் கண்ட்ரோல் பட்டனை அழுத்தி அந்த பைல்களை ஒவ்வொன்றாக ஒரு முறை கிளிக் செய்திடவும். அடுத்து File மெனு கிளிக் செய்து Folder Tasks என்ற பிரிவில் Copy this file, Copy this folder, or Copy the selected items என்பதில் உங்கள் தேர்வுக்கு உகந்த பட்டனைக் கிளிக் செய்திடவும்.

அடுத்து Copy Items டயலாக் பாக்ஸில் சிடி ரெகார்டிங் டிரைவினைக் கிளிக் செய்து பின் Copy கிளிக் செய்திடவும்.

மை கம்ப்யூட்டர் பிரிவில் சிடி ரெகார்டிங் டிரைவில் டபுள் கிளிக் செய்திடவும். விண்டோஸ் ஒரு தற்காலிக இடத்தை ஒதுக்கும். இங்கு தான் காப்பி செய்யப்பட வேண்டிய பைல்களை வைக்கப்படும். Files Ready to be Written to the CD என்ற பிரிவில் நீங்கள் தேர்ந்தெடுத்த பைல் அல்லது போல்டர் உள்ளதா என்று சரி பார்க்கவும். CD Writing Tasks பிரிவில் Write these files to CD என்பதில் கிளிக் செய்திடவும். அடுத்து விண்டோஸ் சிடி ரைட்டிங் விஸார்ட் ஒன்றைக் காட்டும். அதில் காட்டப்படும் கட்டளைகளைப் பின்பற்றவும்.

சிடியின் கொள்ளளவிற்கும் அதிகமான அளவில் உள்ள பைல்களை காப்பி செய்திட முயற்சிக்கக் கூடாது. தரமான சிடி ஒன்று 650 எம்பி வரை டேட்டாவினை வாங்கிக் கொள்ளும். சில உயர் ரக சிடிக்கள் 850 எம்பி வரை எடுத்துக் கொள்ளும்.

இந்த பைல்களை சிடியில் எழுதும் முன் கம்ப்யூட்டர் தற்காலிக இடத்தில் வைத்துக் கொள்ளும் என்று குறிப்பிட்டோம் அல்லவா? இந்த பைல்களின் அளவிற்கு ஹார்ட் டிஸ்க்கில் இடம் இருக்க வேண்டும். ஒரு ஸ்டாண்டர்ட் சிடிக்கு விண்டோஸ் ஹார்ட் டிஸ்க்கில் 700 எம்பி அளவிலான இடத்தை ஒதுக்கும். உயர் வகை சிடிக்கு 1 ஜிபி வரையில் இடம் ஒதுக்கப்படும்.

சிடியில் அனைத்து பைல்களும் காப்பி ஆன பின்னர் மீண்டும் சிடி டிரைவில் கிளிக் செய்து நீங்கள் தேர்ந்தெடுத்த பைல்கள் அனைத்தும் காப்பி ஆகிவிட்டனவா என்று பார்க்கவும்.

சிடி எழுதி முடித்தவுடன் சிடி ட்ரேயின் கதவு திறக்கப்பட்டு வெளியே எட்டிப் பார்க்கிறதா?இது உங்களுக்குப் பிடிக்கவில்லையா? அப்படியானால் இதனை மாற்றி செட் செய்துவிடலாம்.

My computer ஐத் திறக்கவும். சிடி டிரைவின் மீது ரைட் கிளிக் செய்திடவும். கிடைக்கும் மெனுவில் Properties கிளிக் செய்திடவும். Recording டேப் தேர்ந்தெடுத்து அதில் Automatically eject the CD after writing என்று உள்ள இடத்தில் உள்ள டிக் அடையாளத்தை நீக்கவும். ஓகே கிளிக் செய்து வெளியேறவும். இனி சிடியில் பைல்கள் எழுதி முடித்த பின்னர் நீங்களாக டிரைவைத் திறக்காமல் தானாக அது திறக்காது.

கருத்துரையிடுக

2 கருத்துகள்

  1. அண்ணா உங்கள் தம்பி தனது சேட்டைகளை இன்று முதல அரம்பிகேரன் .வாங்க வந்து பாருங்க .பாத்துட்டு உங்க கருத்த சொல்லிட்டு போங்க.

    பதிலளிநீக்கு
  2. சிடியில் பைல்கள் எழுதி முடித்த பின்னர் வேறு சிடியில் கம்பியூட்டரில் காப்பி or எழுத முடியாத வாறு எப்படி செய்வது.

    பதிலளிநீக்கு