ஐ.பி.எல். சூதாட்டத்தை வெளிப்படையாக வளர்க்கிறது


தென் அப்பிரிக்காவில் நடைபெற்று வரும் .பி.எல். கிரிக்கெட்டில் ரசிகர்களுக்கு அறிமுகப்படுத்தப்பட்டுள்ள புதிய எஸ்.எம்.எஸ். விளையாட்டுப் போட்டி, அதாவது பந்துக்கு பந்து என்ன ஆகும் என்று கணித்து ரொக்கப்பரிசுகளை வெல்லும் போட்டி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதனை கண்டித்துள்ள மத்திய விளையாட்டுத் துறை அமைச்சர் கில், இது வெளிப்படையாக சூதாட்டத்தை ஊக்குவிப்பதாகும் என்று சாடியுள்ளார்.

வர்த்தக நலன்களுக்காக கிரிக்கெட் ஆட்டத்தை பயன்படுத்துவது கவலையளிப்பதாயுள்ளது என்று அவர் அறிக்கை ஒன்றில் தெரிவித்துள்ளார்.

இது போன்று பந்துக்கு பந்து என்ன நடக்கும் என்பதை கணிக்கும் போட்டிகளில் ரசிகர்களை ஈடுபடுத்துவது பற்றி கிரிக்கெட்டை அதன் ஆட்டத்திற்காக பார்த்க்து வரும் நிபுணர்கள், ரசிகர்கள் கவலை எழுப்பியுள்ளனர். இது மிகவும் மோசமான முன்னுதாரணமாகும்.

இது கிரிக்கெட்டில் சூதாட்டத்தை வளர்க்கும் ஒரு போக்காக பார்க்கபடும், இதனை அதிகாரபூர்வ கிரிக்கெட் அமைப்பு ஏற்கக் கூடாது, சூதாட்டம் சட்டபூர்வமாக உள்ள நாடுகளில் கூட இது போன்ற பந்தயங்கள் பணம் சம்பாதிக்கவும், தொலைக்காட்சி பார்வையாளர்கள் எண்ணிக்கையை அதிகரிக்கவும் செய்யப்படுகிறது.

கிரிக்கெட் என்பது இந்தியாவில் மற்ற விளையாட்டுகளின் குடும்பத்தில் ஒரு பகுதி அதன் தற்போதைய பணபலம் ஒரு போதும் அதனை மற்ற விளையாட்டுகளிலிருந்து தனிமைப் படுத்திக் கொள்ள முடியாது. இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் இத்தகைய செய்கை ஒரு தொத்து நோய் போல பிற விளையாட்டுக்களுக்கும் பரவும் அபாயம் உள்ளது. ஏற்கனவே .சி.சி. இது போன்ற கிரிக்கெட் தொடர்களினால் சூதாட்டங்கள் பெருகும் வாய்ப்பை அறிந்துணர்ந்துள்ளது.

.பி.எல். கிரிக்கெட்டில் இது போன்ற எஸ்.எம்.எஸ். பந்தயங்களை ஊக்குவிப்பதன் மூலம் சூதாட்டத்தை ஒரு புதிய வடிவத்தில் நடைமுறைப்படுத்தியுள்ளது .பி.எல். நிர்வாகம் என்று சாடியுள்ளார் கில்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்