TopBottom

மொபைல் போன் : பத்து பயனுள்ள தகவல்கள்

எழுதியவர் : Karthikan Karunakaran 30 May 2009

மொபைல் போன் வாங்கியவுடன் அதன் முழுப் பயனை மட்டுமல்ல அதனை ஒரு ஸ்டைலான போனாக அமைப்பதும் உங்கள் கையில் உள்ளது. அதற்கான பத்து அம்சங்களை இங்கே காணலாம்.

1. வால் பேப்பர் மற்றும் பேக் கிரவுண்ட்:

மொபைல் திரையில் வால் பேப்பர் என்பது அதன் தோற்றக் காட்சியாகும். இக்காட்சிப் படத்தின் மீதுதான் உங்களுக்கான தகவல்கள் காட்டப்படுகின்றன. பழைய கருப்பு வெள்ளை போனில் கூட இந்த வால் பேப்பரை அமைக்கலாம். போனில் தரப்பட்டுள்ள வால் பேப்பர்களைத்தான் நீங்கள் அமைத்துக் கொள்ள வேண்டும் என்பதில்லை. நீங்களே உங்களுக்குப் பிடித்தமான வால் பேப்பரை உருவாக்கி அமைக்கலாம். போட்டோஷாப் போன்ற படங்களை எடிட் செய்திடும் சாப்ட்வேர் புரோகிராம்களில் உங்களுக்குப் பிடித்த படத்தை எடிட் செய்து போன் திரைக்கேற்றவகையில் மாற்றி போனில் காப்பி செய்து வால்பேப்பர் மற்றும் பேக்கிரவுண்ட் காட்சியாகப் பயன்படுத்தலாம். இது உங்கள் போனுக்கு ஒரு தனித்தன்மையையும் உங்களுக்கு உங்கள் போன் உங்கள் வாழ்க்கையின் அங்கம் என்ற அடையாளத்தையும் கொடுக்கும்.

2. ஸ்கிரீன் சேவர்:

இதனைப் பொறுத்தவரை ஒன்று சொல்லியாக வேண்டும். ஸ்கிரீன் சேவர் அமைப்பது நல்லதாகத் தெரிந்தாலும் அது உங்கள் பேட்டரியின் திறனைத் தின்றுவிடும் என்பதே உண்மை. அதுவும் ஏதேனும் அனிமேஷன் உள்ளதாக இருந்தால் இன்னும் மோசம். இருந்தாலும் எல்லாரும் ஸ்கிரீன் சேவரை அமைத்துக் கொள்கின்றனர். பயனுள்ளதாக வேண்டும் என்றால் நேரம் மற்றும் தேதியினை அமைத்துக் கொண்டால் தன் ஓய்வு நேரத்தில் உங்களுக்கு நேரத்தைக் காட்டும் சாதனமாக மொபைல் அமைந்துவிடும். .GIF போன்ற அனிமேட்டட் பைல்களை இதற்குப் பயன்படுத்தலாம்.

3. தீம்ஸ்:

வண்ணங்கள் மற்றும் டிசைன்களை திரையில் காட்ட இந்த தீம்கள் பயன்படுகின்றன. தற்போது வெளியாகும் போன்களில் தீம்ஸ் இருந்தால் வால் பேப்பர் மற்றும் ஸ்கிரீன் சேவர்களுக்கான தேவை இல்லாமல் போய்விடுகிறது. சிம்பியன் சாப்ட்வேர் பயன்படுத்தப்படும் நோக்கியா மற்றும் சோனி போன்களுக்காகவே நிறைய தீம்கள் பலரால் உருவாக்கப்பட்டு பல இணையதளங்களில் கிடைக்கின்றன. இவற்றை இறக்கிப் பயன்படுத்தலாம்.

OwnSkin.com மற்றும் mobile9.com போன்ற தளங்கள் உங்களுடைய சொந்த தீம்ஸ்களை உருவாக்கிப் பயன்படுத்த உதவுகின்றன. மேலும் உங்கள் விருப்பத்திற்கிணங்க ஐகான்களைத் தேர்ந்தெடுத்துப் பயன்படுத்தலாம்.

4. ரிங்டோன்ஸ்:

சில நேரம் சிரிப்பு வரும் வகையிலும் சில நேரம் எரிச்சல் வரும் வகையிலும் மொபைல் போனை அமைத்திடலாம் என்றால் அது ரிங் டோன்ஸ் மூலம் தான். உங்கள் போனில் நிறைய மெமரி இடம் இருந்து எம்பி3 பாடல் பைல்களும் நிறைய இருந்தால் உங்களுக்குக் கொண்டாட்டம்; போனுக்குத் திண்டாட்டம். ஏனென்றால் இந்த பாடல்கள் நிறைய இடத்தைப் பிடித்துக் கொள்ளும் சமாச்சாரங்களாகும்.எனவே அடாசிட்டி போன்ற பாடலை எளிதாக எடிட் செய்திடும் சாப்ட்வேர் மூலமாக உங்களுக்குப் பிடித்த வரிகளை எடிட் செய்து சிறிய பைலாக மாற்றி ரிங் டோன்களாகப் பயன்படுத்துங்கள். www.freeringtones. uk.com என்ற தளத்தில் ரிங்டோன்கள் மட்டுமின்றி நீங்களே கம்போஸ் செய்திடவும் வசதி தரப்பட்டுள்ளது.

5. கேம்ஸ்:

அநேகமாக 99% போன்கள் ஏதாவது சில கேம்ஸ் களுடன் தான் வருகின்றன. தனியே இருக்கையில் அல்லது பயணம் மேற்கொள்கையில் மொபைலில் இருக்கிற கேம்ஸ் உங்கள் பொழுதைப் போக்க உதவும். ஆனாலும் கவனமாக இருக்க வேண்டும். பேட்டரி காலியானால் சிரமம்தான். எனவே அளவோடு பயன்படுத்த வேண்டும். ஒரு சில கேம்ஸ் ஜாய்ஸ்டிக் அதிகம் பயன்படுத்தும் வகையில் இருக்கும். இதனால் அதன் பயன்பாடு அதிகம் ஆனால் விரைவில் ரிப்பேர் ஆவது அந்த கீயாகத்தான் இருக்கும். எனவே அளவோடு விளையாடுவது நல்லது.

6. அப்ளிகேஷன்ஸ்:

ஒரு சில போன்களில் நிறைய அப்ளிகேஷன்களை லோட் செய்திடும் வசதி உண்டு. தீம்ஸ் மற்றும் கேம்ஸ் போக கேமராவிற்கான படங்கள் மற்றும் வீடியோக்களை எடிட் செய்திடும் வசதி தரும் அப்ளிகேஷன்கள், ஸ்டார் மூவி பிளேயர் போன்ற வீடியோ அப்ளிகேஷன்கள் ஆகியவை இவற்றில் சில. இவற்றில் சில காசு கொடுத்தால் மட்டுமே கிடைக்கும். எவற்றை வாங்கினால் உங்களால் பயன்படுத்த முடியும் என முடிவு செய்து அவற்றை இன்ஸ்டால் செய்து பயன்படுத்தவும்.

7. மொபைல் பேனல்கள்:

ஒரு சில மாதங்கள் பயன்படுத்திவிட்டு தூக்கி எறியும் விலையில் அநேகமாக அனைத்து போன்களுக்கும் பேனல்கள் கிடைக்கின்றன. கிறிஸ்டல் பேனல்கள் உங்களின் மொபைல் போன் அழகை வெளிச்சம் போட்டுக் காட்டுவதுடன் நன்றாகப் பாதுகாக்கவும் செய்கின்றன. உங்கள் மாடல் போனுக்கானதை மட்டுமே வாங்கிப் பயன்படுத்தவும். ரூ.40 விலை சொல்லப்படும் ஒரு கிறிஸ்டல் பேனலை எதிர்கடையில் ரூ.8க்கு வாங்கினேன். எனவே நன்றாக விலை விசாரித்து வாங்கவும். அதே போல திரைக்கு ஸ்கிராட்ச் ஆகாமல் இருக்க ஸ்டிக்கர்கள் விற்பனையாகின்றன. அவற்றையும் வாங்கிப் பயன்படுத்தலாம். திரை சேதமாகாமல் இருக்கும்.

8. கேர் பவுச் மற்றும் பர்ஸ்கள்:

கிறிஸ்டல் பேனல்கள் நன்றாகவும் பாதுகாப்பாகவும் இருந்தாலும் பலர் இடுப்பு பெல்ட்களில் மாட்டும் வகையிலான பவுச், கழுத்தில் தொங்கவிடும் பவுச், பெண்கள் விரும்பும் வகையில் எம்பிராய்டரி செய்யப்பட்ட பவுச்கள் எனப் பல இருக்கின்றன. இவற்றில் எந்தவகையான மேக்னடைஸ்டு சமாச்சாரம் இல்லாமல் பார்த்துக் கொள்ளவும். காந்த சக்தி சிறிது இருந்தாலும் அவை உங்கள் போனின் திரைக் காட்சியை சிதைப்பதுடன் பேட்டரியையும் சாப்பிட்டுவிடும்.

9. மற்ற கவர்ச்சி ஒட்டுகள்:

உங்கள் போனுக்கு அழைப்பு வந்தால் சிறிய வெளிச்சத்தை அழகாகக் காட்டி அழைக்கும் தொடுப்புகள் நிறைய மார்க்கட்டில் உள்ளன. ரூ.10 முதல் ரூ.30 வரை இவை கிடைக்கின்றன. சிலவற்றை போனின் பின்புறத்தில் ஒட்டி வைத்துக் கொள்ளலாம். கையில் பிடித்துச் செல்ல ஏதுவாக சில தொடுப்புகள் சிறிய கயிறுகளாகக் கிடைக்கின்றன. இவையும் பயனளிக்கும்.

10. புளுடூத் ஹெட்செட்:

உங்கள் போனில் புளுடூத் வசதி இருந்து அதிலிருந்து கிடைக்கும் ஆடி யோ சிக்னல்களும் அதற்கான ஸ்டீரியோ ஹெட்செட்டை அடையும் எனத் தெரிந்தால் புளுடூத் ஹெட்செட்டை வாங்கலாம். இந்த விஷயத்தில் கம்பெனிகள் அளிக்கும் ஹெட்செட்களையே வாங்கிப் பயன்படுத்துங்கள்.

4 Comments

 1. உபயோகமான பதிவு. வாழ்த்துக்கள்

   
 2. Reply To This Comment
 3. @ கவிதை காதலன்

  நன்றி

   
 4. Reply To This Comment
 5. Prabu Says,

  very useful to all.thank you....

   
 6. Reply To This Comment
 7. anthony Says,

  thank you for your impermation. its realy very useful one

   
 8. Reply To This Comment
:a   :b   :c   :d   :e   :f   :g   :h   :i   :j   :k   :l   :m   :n   :o   :p   :q   :r   :s   :t

About Me

My Photo
Karthikan Karunakaran
View my complete profile

Twitter

  Twitter Updates

   follow me on Twitter

   Recent Comments