TopBottom

தேவதைகளும் சாத்தான்களும்

எழுதியவர் : Karthikan Karunakaran 13 May 2009


ஹாலிவுட்டின் எவர் க்ரீன் கதைக் களஞ்சியம் பைபிள். நேரடியாகவோ மறைமுகமாகவோ பைபிள் கதைகள் வருடத்துக்கு பத்தாவது வந்து கொண்டேயிருக்கும்.

பைபிள் கதைகள் படமாகும்போது வாடிகனின் எதிர்ப்பை அல்லது வரவேற்பை அவை எதிர்கொண்டே ஆக வேண்டும். ஹாலிவுட் இயக்குனர் மார்ட்டின் கார்சஸியின் லாஸ்ட் டெம்டே­ன் ஆஃப் க்ரைஸ்ட் படத்தை வாடிகான் ஒப்புக் கொள்ளவில்லை. அது மோசமான படம் என விமர்சனம் செய்தது.

விளைவுஅவரது டாக்சி டிரைவர் போன்ற மகத்தான படைப்புகள் ஆஸ்கர் விருதுப் போட்டியில் புறந்தள்ளப்பட்டன. இறுதியில் வேறு வழியில்லாமல் இரண்டு வருடங்களுக்குமுன் அவரது டிப்பார்டட் படத்துக்கு சிறந்த இயக்குனருக்கான ஆஸ்கர் விருது அளித்தனர்.

வாடிகானால் மோசமான படம் என விமர்சிக்கப்பட்ட இன்னொரு படம் டாவின்சி கோட். இயேசு திருமணமானவர், அவருக்கு வாரிசுகள் இருக்கிறார்கள் என்ற நம்பிக்கை இன்றும் சில பிரிவினரிடையே இருக்கிறது.

இதனை ஆதாரபூர்வமாக சொல்ல முயன்றது டாவின்சிகோட். ‌கிறிஸ்தவ மத நம்பிக்கைக்கு எதிரான கருத்துகள் கொண்டிருப்பதாகக் கூறி படத்தை பல நாடுகள் தடை செய்தன. இந்தியாவிலும் தமிழ்நாடு உள்பட பல மாநிலங்களில் இந்தப் படம் தடை செய்யப்பட்டது.

இந்தப் படத்தின் தொடர்ச்சியாக வெளிவந்திருக்கிறது, ஏஞ்சல்ஸ் அண்டு டீமன்ஸ். ரோமில் நடந்த பிரிமியர் ஷோவில் படத்தின் ஹீரோ டாம் ஹங்க்ஸ் கலந்து கொண்டார். படத்தைப் பார்த்த ரோம் திருச்சபை, பாதிப்பில்லாத கேளிக்கை படம் என சான்றிதழ் வழங்கியிருக்கிறது.

தடை செய்யப்பட்டாலும் டாவின்சிகோட் உலகம் முழவதும் வசூலை வாரிக் குவித்தது. இந்தப் படம் அதனை முறியடிக்குமா என்பதுதான் தயாரிப்பாளர்களின் ஒரே கவலை.

0 Comments

:a   :b   :c   :d   :e   :f   :g   :h   :i   :j   :k   :l   :m   :n   :o   :p   :q   :r   :s   :t

About Me

My Photo
Karthikan Karunakaran
View my complete profile

Twitter

    Twitter Updates

      follow me on Twitter

      Recent Comments