இணைய வெளியில் ஒரு மியூசிக் லாக்கர்

கம்ப்யூட்டர் டேட்டாக்களோடு போராடி தலையைப் பிய்த்துக் கொள்பவர்களுக்கு அவ்வப்போது மனதை இதப்படுத்துவது இசைப்பாடல்களே. கம்ப்யூட்டரை அவ்வள வாகப் பயன்படுத்தாவதர்களும் தங்களை ரிலாக்ஸ் செய்து கொள்ள கம்ப்யூட்டரில் தங்களுக்குப் பிடித்த இசையைக் கேட்க விரும்புகின்றனர். இதனால் எங்கெல்லாம் பாடல் பைல்கள் கிடைக் கின்றனவோ அவற் றை எல்லாம் அப்படியே காப்பி செய்து பெர் சனல் கம்ப்யூட்டர்களின் டிரைவ்களில் திணிக் கின்றனர். விளைவு என்ன? ஒரு கட்டத்தில் பாடல் பைல்களே கம்ப்யூட்டரின் ஹார்ட் டிரைவினை ஆக்ரமிக்க வேறு பைல்களுக்கு இடம் இல்லாமல் போகிறது.

பாடல்களை சிடியிலோ அல்லது டிவிடியிலோ சேமித்து வைக்கலாம். ஆனால் எங்கு சென்றாலும் அவற்றை எடுத்து செல்ல வேண்டும். அவற்றில் இருக்கும் பைல்களின் வாழ்வும் ஒரு குறிப்பிட்ட காலம் வரைதானே என்ற பயம் நம்மிடம் உள்ளது.

இந்த வேதனையைப் போக்க நமக்கு இணையத்தில் ஒரு தளம் உள்ளது. இந்த தளத்தில் உங்களைப் பதிந்து கொண்டால் இசைப் பைல்களை 25 ஜிபி வரை சேமித்து வைக்கலாம். அதுவும் எந்த கட்டணமும் செலுத்தாமலே. எனவே சிடிக்களைத் தூக்கிக் கொண்டு அலையாமல் எப்போது பாடல் வேண்டுமோ அப்போது இந்த தளம் சென்று பாடலை இறக்கி கேட்டு மகிழலாம். எந்த ஊரிலும் எந்த நாட்டிலும் உங்களுக்கான பாடல் கிடைக்கும் அல்லவா.

கீழே உள்ள தளம் சென்று உங்களுக்கென ஒரு அக் கவுண்ட்டை உருவாக்கி பின் நீங்கள் சேர்த்து வைத்த பாடல்கள் அனைத்தையும் அப்லோட் செய்யலாம். அதன் பின் எந்த இடத்திலிருந்தும் இந்த தளம் சென்று அங்கே உங்கள் யூசர் அக்கவுண்ட் மூலம் உங்கள் பாடல்களைப் பெறலாம். உங்கள் நண்பர்களிடன் இணைய வெளியில் இசை லாக்கர் ஒன்றை இலவசமாகக் கொண்டிருப்பதாக சொல்லிக் கொள்ளலாம். நண்பர்கள் நல்லவர்கள் என்றால் அவர்களுக்கும் உங்கள் யூசர் நேம் மற்றும் ஐ.டியைக் கொடுத்து பாடல்களைக் கேட்டு ரசிக்கச் சொல்லலாம். இந்த தளத்தின் பெயரில் எம்பி 3 என இருப்பதால் எம்பி 3 பாடல்களை மட்டும் தான் இது ஏற்றுக் கொள்ளும் என எண்ண வேண்டாம். அனைத்து வகை பார்மட்டுகளையும் இது ஏற்றுக் கொள்கிறது.

தள முகவரி : இங்கே கிளிக் செய்யுங்கள்

கருத்துரையிடுக

4 கருத்துகள்

  1. கக்கு-மாணிக்கம்

    மிகவும் நல்ல செய்தி அண்ணாத்த!! நன்றி !!!!

    பதிலளிநீக்கு
  2. ஹலொ கார்திக் உன்கள் தலம் அழகாகவும் இனிமையாகவும் இருக்கிறது அதன் பெயரைப்போல!!!

    பதிலளிநீக்கு
  3. @ raja

    @ Manickam

    உங்கள் கருத்துக்களுக்கு மிக்க நன்றி.

    பதிலளிநீக்கு