TopBottom

இலவசமாக இமெயில் தரும் சேவையில் இன்று கூகுள் மெயிலின் இடத்தைப் பிடிக்க வேறு எந்த தளத்தினாலும் முடியவில்லை. அதிக பட்சம் சர்வரில் இடம் தருவதிலிருந்து அடிக்கடி ஏதேனும் புதிய வசதிகளைத் தொடர்ந்து இலவசமாக அளித்து வருவதால் பலரும் கூகுள் தளத்தில் தங்கள் இமெயில் அக்கவுண்ட்களை வைத்து இயக்கி வருகின்றனர்.

இது இலவசம் என்பதால் இந்த சேவை யை எந்த நேரமும் நிறுத்த கூகுள் நிறுவனத்திற்கு சுதந்திரம் உண்டு. கூகுள் நிறுவனத்திற்கு போட்டியாக உள்ள மற்ற நிறுவனங்கள் கூகுள் சர்வரை முடக்கிவிட்டால் என்ன செய்வது? ஏன், கூகுள் சர்வரிலேயே பிரச்சினை ஏற் பட்டு அது முடங்கிப் போய் நம் அக்கவுண்ட்கள் எல்லாம் காணாமல் போய்விட் டால்..?

நாம் கூகுள் சர்வரில் சேர்த்துவைத்த நம் மெயில்கள், அதன் இணைப்புகள் எல்லாம் காணாமல் போய்விடுமே. இப்போதே பலர் தங்கள் பைல்களைப் பத்திரமாகச் சேமித்து வைக்க தங்கள் அக்கவுண்ட்களுக்கு அட்டாச் செய்து அனுப்பி கூகுள் சர்வரில் வைத்துக் கொள்கிறார்கள்.

கம்பெனி ரகசிய ஒப்பந்தங்கள், கணக்கு வழக்குகள், பெர்சனல் கடிதங்கள் என கூகுள் சர்வரில் பலவகையான ரகசிய ஆவணங்கள் காக்கப்பட்டு வருகின்றன. இவை எல்லாம் சர்வர் இயங்காமல் போனால் நமக்குத்தானே நஷ்டம். அப்படியானால் என்ன செய்யலாம் என்கிறீர்களா?


கூகுள் மெயில்களை பேக்கப் எடுத்து உங்கள் சர்வரில் சேவ் செய்துவைக்க என ஒரு புரோகிராம் பைல் இணையத்தில் இலவசமாகக் கிடைக்கிறது.

இதனை முதலில் டவுண்லோட் செய்து பின் இன்ஸ்டால் செய்திடவும்.இன்ஸ்டால் செய்த பின்னர் புரோகிராம் லிஸ்ட்டில் இது இருக்கும் இடத்தைக் கண்டறிந்து இயக்கவும். கிடைக்கும் விண்டோவில் Gmail Login என்றுள்ள இடத்தில் கிளிக் செய்து அங்கு உங்கள் ஜிமெயில் முகவரியினைத் தரவும். கீழே பாஸ்வேர்ட் கேட்கும் இடத்தில் பாஸ்வேர்டைக் கொடுக்கவும். இதன் கீழே உங்களுடைய அஞ்சல்களை எங்கு சேவ் செய்திட முடிவெடுத்திருக்கிறீர்களோ அதைச் சுட்டிக் காட்டவும்.

அதற்கும் கீழாக எந்த தேதியிலிருந்து எந்த தேதி வரையில் உள்ள மெயில்களை சேவ் செய்வதற்கு தேதிகளை அமைக்கவும். உடன் நீங்கள் ஏற்கனவே சேவ் செய்வதற் கென குறியிடப்பட்ட டைரக்டரியில் இந்த மெயில்கள் அனைத்தும் சேவ் செய்யப்படும். நாட்களின் எண்ணிக்கை, மெயில்களின் அளவு ஆகியவை பொறுத்து இவை டவுண்லோட் ஆகும் கால நேரம் வேறுபடும்.

பேக் அப் ஆகும் போது இன்டர்நெட் இணைப்பு அறுந்து போனால், மீண்டும் இனைப்பு கிடைக்கும்போது ஏற்கனவே எதுவரை மெயில்கள் டவுண்லோட் செய்யப்பட்டதோ அந்த இடத்திலிருந்து மிச்ச மெயில்கள் பேக் அப் செய்யப்படும்.

கீழுள்ள ஏதாவது ஒரு முகவரியிலிருந்து தரவிறக்கி கொள்ளுங்கள்.

1.Softpedia : இங்கே கிளிக் செய்யவும்

2.
Brothersoft : இங்கே கிளிக் செய்யவும்

3.
Uptodown :இங்கே கிளிக் செய்யவும்

4.Google Solutions : இங்கே கிளிக் செய்யவும்

5.Slunecnice.cz : இங்கே கிளிக் செய்யவும்

Updated

இந்த மென்பொருளை பயன்படுத்தினால் எமது தகவல்கள் திருடப்பட்டுவிடுமோ என பயப்படுபவர்களும் இருக்கிறார்கள். அனால் இந்த மென்பொருள் கூகிளினால் பரிந்த்துரைக்கப்பட்ட மென்பொருளாகும் .

இதை எதிர்கொள்ள எனக்கு தோன்றிய யோசனைகள்.

1) ஜீ மெயிலில் இன்னொரு அக்கவுண்ட்டிற்கு அனைத்து மெயில்களையும் Forward செய்யும் வசதி உள்ளது. அதை ஆக்டிவேட் செய்து , ஜீ மெயிலுக்கு வரும் அனைத்து மெயில்களையும் இன்னொரு அக்கவுண்ட்டில் (ஹாட்மெயில் , யாஹூ...) சேமித்து வைக்கலாம்.

2) Outlook express , outloook போன்ற மென்பொருட்களில் POP வசதி மூலம் அனைத்து மெயில்களையும் பதிவிறக்கி வைத்துக்கொள்ளலாம்.

7 Comments

 1. great info !

   
 2. Reply To This Comment
 3. டthanx :)

   
 4. Reply To This Comment
 5. Simple method is to download in windows mail or even outlook rather than trusting a third party untrusted software

   
 6. Reply To This Comment
 7. SUBBU Says,

  ;)) super

   
 8. Reply To This Comment
 9. red mark vaarathu enna anna?
  please ithappatri thelivai sollavum

   
 10. Reply To This Comment
 11. //Simple method is to download in windows mail or even outlook rather than trusting a third party untrusted software//

  Outlook backupகிற்கு மாத்திரம். ஜிமெயில் ஊற்றிக் கொள்ளும் வரை அதை பயன்படுத்திக் கொண்டே இருக்கலாம். வாரம் ஒரு முறை Outlook கில் தரவிறக்கம் செய்து கொள்ளலாம்.

  அதாவது இணையத்தில் கிடைக்கும் வேறு மென்பொருட்களை பயன்படுத்தி, அவர்கள் நம்முடைய அனைத்து மின்னஞ்சல்கள் நாம் எழுதியவர்கள், நமக்கு எழுதியவர்கள் என்று அனைவருக்கும் Spam அனுப்பு துவங்கிவிட்டால் பிரச்சனை தானே.

   
 12. Reply To This Comment
 13. @ தர்ஷன் ' in ' DSHAN2009 NETWORK

  Red Mark!!! Where???

   
 14. Reply To This Comment
:a   :b   :c   :d   :e   :f   :g   :h   :i   :j   :k   :l   :m   :n   :o   :p   :q   :r   :s   :t

About Me

My Photo
Karthikan Karunakaran
View my complete profile

Twitter

  Twitter Updates

   follow me on Twitter

   Recent Comments