வாழ்ந்தவர் வார்த்தைகளில் சரித்திரம்

சரித்திர நிகழ்ச்சிகளைப் பல கோணங்களில் நாம் கண்டிருக்கிறோம். படித்திருக்கிறோம். ஆனால் அந்த நிகழ்ச்சிகளில் பங்கெடுத்தவர்களின் சொற்கள் மூலமாக எப்படி அறிய முடியும். அமெரிக்காவில் இரட்டை கோபுரம் வீழ்ந்தது எப்படி? என்று வேண்டுமானால் அங்கு இருந்து மீண்டவர்களிடமிருந்து அறியலாம்.

முதல்
உலகப் போர் குறித்து தெரிய வேண்டும் என்றால்? அதற்கும் முந்தைய நிகழ்வுகள் ஏற்பட்ட போது வாழ்ந்தவர்களுக்கு எங்கே போவது? நியாயமான கேள்விதான்.

ஆனால் Eyewitness To History என்ற தளம் இது குறித்து எந்த தயக்கமும் இன்றி வாழ்ந்தவர்களின் சொற்களின் மூலம் சரித்திரம் என்பதனை தன் நோக்கமாக அறிவித்து தளத்தை நிர்வகிக்கிறது. ரோம் எரிந்த போது, பெர்லின் சுவர் இடித்த போது எனப் பல சரித்திர நிகழ்ச்சிகள் அப்படியே காட்டப்படுகின்றன. எப்படி என்பதை நீங்கள் அந்த தளத்திற்குச் சென்று காணலாம்.

இந்த சரித்திர நிகழ்வுகளுடன் ஒவ்வொரு வாரமும் சரித்திர முக்கியத்துவம் கொண்ட படம் ஒன்று காட்டப்படுகிறது. கேமரா கண்டுபிடித்த காலத்திலிருந்து சரித்திர நிகழ்வுகளின் படங்கள் இதில் காட்டப்படுகின்றன.

இதில்
இடம் பெறும் ஸ்நாப் ஷாட்களும் கருத்தாழம் கொண்டதாக இருக்கின்றன. 1899 லிருந்து சரித்திர நிகழ்வுகளின் ஒலிக் கோவைகளும் கிடைக்கின்றன. மனித இனம் ஏற்படுத்திய காலடித் தடங்கள் தெரிய இந்த தளத்திற்குச் செல்வது மிக மிக அவசியம்.

தள முகவரி : இங்கே கிளிக் செய்யுங்கள்

கருத்துரையிடுக

1 கருத்துகள்