யு.எஸ்.பி.சேப்லி ரிமூவ் ( USB Safely Remove )

விண்டோஸ் சிஸ்டத்திலேயே யு.எஸ்.பி. போர்ட்களில் இணைக்கப்படும் சாதனங்களை எடுத்திட சேப்லி ரிமூவ் வசதி தரப்பட்டுள்ளது. இருப்பினும் பல தேர்ட் பார்ட்டி புரோகிராம்கள் இதற்கென வடிவமைக்கப்பட்டு நமக்கு இணையத்தில் கிடைக்கின்றன.USB Safely Remove என்ற அந்த புரோகிராமின் புதிய பதிப்பு 4.1 தற்போது வெளியாகியுள்ளது.

இதில் என்ன புதிதாய் இருக்கிறது என்று பார்க்கலாமா!

1. இந்த புரோகிராமில் இருந்த ஆட்டோ ரன் வசதி மேம்படுத்தப்பட்டுள்ளது. எந்த சாதனத்தை யு.எஸ்.பி. போர்ட்டில் இணைத்தாலும் அதில் உள்ள தேர்ட் பார்ட்டி புரோகிராம் ஒன்றினை இயக்கும் வகையில் செட் செய்திடலாம். இதனைப் பயன்படுத்தி எக்ஸ்புளோரர் புரோகிராமினை இயக்கலாம். அல்லது பைல் மேனேஜரை இயக்கி என்ன என்ன பைல்கள் இருக்கின்றன எனப்பார்க்கலாம்.

2. யு.எஸ்.பி.யில் இணைக்கப்பட்டுள்ள சாதனத்தை நீக்கும் முன் அதில் உள்ள பைல்களை ஆட்டோ பேக் அப் எடுக்கும் வகையில் செட் செய்திடலாம்.

3. எக்ஸ்டெர்னல் டிரைவ் என்றால் அதனை இணைக்கும்போதே ஆண்ட்டி வைரஸ் புரோகிராம் சோதனை செய்திடும் படி அமைக்கலாம். இதே போல பல செயல்பாடுகளை செட் செய்திடலாம்.

யு.எஸ்.பி.யில் இணைத்த சாதனம் எந்நிலையில் உள்ளது என்று அறிய பல்வேறு ஐகான்கள் காட்டப்படுகின்றன. இணைக்கப்பட்டுள்ள சாதனங்கள் அனைத்தும் இயக்கத்தில் உள்ளனவா என்று காட்டப்படும். போர்ட்டில் சாதனங்களே இல்லை என்றாலும் ஐகான் மூலம் தெரிந்து கொள்ளலாம். இணைக்கப்பட்ட ஒரு சாதனத்தின் இயக்கம் நிறுத்தப்பட்ட பின்னர் அது நீக்கப்படவில்லை என்றால் காட்டப்படும். இதன் பயன்பாடுகள் குறித்து மேலும் அறிய மேலே தரப்பட்டுள்ள இணைய தளத்தினையே காணவும்.

தரவிறக்கம் செய்ய : இங்கே கிளிக் செய்யவும்

பிரதான தளம் : இங்கே கிளிக் செய்யவும்

கருத்துரையிடுக

3 கருத்துகள்

  1. உங்கள் இடுகைகளைத் தொடர்ந்து வாசித்து வருகிறேன்.
    கணிணி சம்பந்தமாக நீங்கள் தரும் தகவல்கள் மிகவும் நன்றாக இருக்கின்றன. தொடருங்கள் இந்த நல்ல பணியை. :)

    பதிலளிநீக்கு
  2. நல்ல பயனுள்ள தகவல்
    நீங்கள் கணனிகள் சம்பந்தமாக நல்ல பதிவுகள் எழுதுகிறிர்கள் இன்னும் தொடர்ந்து எழுத என்னுடைய வாழ்த்துகள்

    பதிலளிநீக்கு
  3. ey;y gaDy;y nra;jpfs; mwpe;Njd; nuhk;g ed;wp ed;wp ed;wp ed;wp ed;wp ed;wp ed;wp ed;wp ed;wp

    பதிலளிநீக்கு