அடாமிக் கிளீனர் ( Atomic Cleaner )

உங்கள் வீட்டில் எலிகளையும், பெரிய பூச்சிகளையும் வாழவிடுவீர்களா? இவை என்ன உங்களுக்கு மரணம் தரும் வகையில் காயப்படுத்தப் போகின்றனவா? இல்லையே, இருந்தாலும் ஏன் விரட்டுகிறோம். நம் அன்றாட வாழ்க்கைக்கு சிறு சிறு தொல்லைகள் தருகின்றன என்பதால் தானே. அதே போல்தான் நம் கம்ப்யூட்டரில் தேவை இல்லாமல் தங்கும் புரோகிராம்கள்.

இன்டர்நெட் பிரவுசிங் செய்திடுகையில் உருவாகும் கேஷ் பைல்கள், கேம்ஸ் விளையாடி முடித்த பின் சிஸ்டத்தில் தேங்கும் பைல்கள், போட்டோ மற்றும் வீடியோ பைல்களைக் கொண்டு மூவிகளை அமைக்கையில் இரட்டிப்பாகும் பாடல் மற்றும் படக் காட்சி பைல்கள் எனப் பலவகையான பைல்கள் தேவையில்லாமல் ஹார்ட் டிஸ்க்கில் இடம் பிடிக்கின்றன. ஹார்ட் டிஸ்க்கில் இடம் பிடிப்பது மட்டுமின்றி சிஸ்டம் இயங்குவதையும் இவை மந்தமாக்குகின்றன.

இவற்றை எப்படித்தான் நீக்குவது? எவை எவை நீக்கப்பட வேண்டியவை என்று கண்டறிவது? இதற்கான வழிகளை மிக எளிமையாகவும் எளிதாகவும் தருகிறது அடாமிக் கிளீனர் என்னும் புரோகிராம்.

தரவிறக்கம் செய்ய : இங்கே கிளிக் செய்யவும்

கருத்துரையிடுக

2 கருத்துகள்