கூகிள் குரோம் பிரவுசருக்கான புதிய தீம்கள்

கூகுள் நிறுவனம் தன் குரோம் பிரவுசருக்குப் பல புதிய தீம் காட்சிகளை வெளியிட்டுள்ளது. சாதாரண அடிப்படையில் அமைந்த காட்சிகளிலிருந்து மேம்படுத்தப்பட்ட சில காட்சிகள் வரை இதில் கிடைக்கின்றன. மொத்தம் 29 டெம்ப்ளேட்டுகள் தரப்பட்டுள் ளன. இவை அண்மையில் வெளியான குரோம் பிரவுசர் பதிப்பு 3ல் பயன்படுத்த முடியும்.

இவற்றைப் பயன்படுத்த குரோம் பிரவுசர் சென்று, பின் இதன் காலரிக்குச் செல்ல வேண்டும். இங்கு தீம் ஒன்றைத் தேர்ந்தெடுத்து, கீழாக உள்ள டவுண்லோட் மேனேஜர் பேன் மூலமாக டவுண்லோட் செய்திடலாம். டவுண்லோட் செய்து முடித்தவுடன் “Apply Theme” என்பதில் கிளிக் செய்திட வேண்டும். உடன் தேர்ந்தெடுத்த தீம் கொண்டு குரோம் பிரவுசர் காட்சியளிக்கும். இதில் என்ன விசேஷம் என்றால், வழக்கமான மாற்றாத டிபால்ட் தோற்றத் தினை உடனடியாக பெர்சனல் ஸ்டப் என்றுள்ள லிங்க்கில் கிளிக் செய்து பெறலாம். இவ்வாறு தேர்ந்தெ டுத்த தீம் மற்றும் டிபால்ட் தோற்றம் என மாற்றிக் கொள்வது எளிதாகும்.

ஆனால் ஒன்றைப் புரிந்து கொள்ள வேண்டும். இவ்வாறு தீம் அமைப்பது குரோம் செயல்பாட்டின் வேகத்தைச் சற்று குறைக்கலாம். இன்னொரு விஷயத்தையும் கூற வேண்டும். பயர்பாக்ஸ் தரும் தீம் காலரியுடன் ஒப்பிடுகையில் இது மிகச் சாதாரணம். அதன் வகைகள் அதிகமானவை; அற்புதமானவை.

தள முகவரி : இங்கே கிளிக் செய்யவும்

கருத்துரையிடுக

2 கருத்துகள்

  1. http://us.i1.yimg.com/us.yimg.com/i/mesg/emoticons7/21.gifhey manநான் இந்த தகவலை என் வெப்சைட்டில் எளுதி ஒருமாசம் ஆகுது நீங்க இப்பத்தான் விர்றிங்களா hahahaha
    WWW.VANNITODAY.CO.CC HAHAHAHAHAhttp://us.i1.yimg.com/us.yimg.com/i/mesg/emoticons7/102.gif

    பதிலளிநீக்கு