இணையத்தில் கிடைக்கும் பிழைச் செய்திகளும் காரணங்களும்

இன்டர்நெட்டில் வேக வேகமாக நாம் தேடும் தளங்களைப் பார்த்துக் கொண்டிருக்கையில் திடீரென வெப்சைட் லோடு ஆகும் என்று எண்ணிக் கொண்டிருக்கும் வேளையில் ஏதோ ஒரு எண்ணுடன் பிழைச் செய்தி காட்டப்படும். இது இன்டர்நெட் சமாச்சாரம் என்பதால் நாம் அதனைப் புரிந்து கொள்ள எந்த முயற்சியும் எடுக்காமல் மீண்டும் அந்த தளத்தினைப் பெறும் முயற்சியிலேயே இருப்போம்.

முதலில் வந்த அந்த பிழைச் செய்தி நீங்கள் முயற்சிக்கும் ஒவ்வொரு முறையும் காட்டப்படும். ஆனால் நாம் முதலில் காட்டப்பட்டது மாற்றப்படாமல் இருப்பதாக எண்ணிக்கொண்டு என்டர் தட்டி வெப்சைட் லோட் ஆகிறதா என்று பார்ப்போம். இத்தகைய பிழைச் செய்திகள் என்ன சொல்கின்றன என்று புரிந்து கொண்டு அதன்பின் தொடர்ந்து முயற்சி செய்வது குறித்து யோசித்து தொடர்வதே நல்லது.

400 Bad Request

நீங்கள் தேடவிரும்பிய தளத்தின் முகவரியைத் தவறாக டைப் செய்திருக்கலாம். நீங்கள் டைப் செய்த முகவரியிலிருந்து உங்கள் தேடல் குறித்து எந்தவிதமான செய்தியும் உங்கள் இணைய சர்வரால் எடுத்துக் கொள்ள முடியவில்லை.









பெரும்பாலும்
வெப்சைட்டின் முகவரியைத் தவறாக டைப் செய்திடும்போதுதான் இத்தகைய செய்தி கிடைக்கும். ஒருவேளை நீங்கள் டைப் செய்த முகவரியில் பெரிய மற்றும் சிறிய எழுத்துக்களைக் கலந்திருக்கலாம். அல்லது உங்களை அறியாமலேயே புள்ளிக்குப் பதிலாக கமா அடித்திருக்கலாம். எனவே இந்த செய்தி கிடைக்கையில் ஏற்கனவே டைப் செய்த முகவரியில் ஏதேனும் பிழை இருக்கிறதா என ஒருமுறைக்கு இரு முறை சோதனை செய்தபின் மீண்டும் முயற்சிக்கவும்.

401 Unauthorized Request









நீங்கள், உங்களுக்கு அனுமதியில்லாத வகையில் உங்கள் சர்வர் வழியாக ஒன்றைப் பெற முயற்சி செய்திருக்கிறீர்கள். இன்னும் சொல்லப்போனால் இன்டர்நெட் தளம் ஒன்றில் அல்லது தளத்தில் அத்து மீறி நுழைய முயற்சித்திருக்கிறீர்கள். அதனால் முயற்சியைக் கைவிடுதே நல்லது.

403 Forbidden














இது போன்ற பிழைச் செய்தி கிடைத்தால் அந்த தளத்தினுள் நீங்கள் சிறப்பு அனுமதி பெற்ற பின்னரே செல்ல முடியும். ஏதேனும் பாஸ்வேர்ட் தர வேண்டிய கட்டாயம் இருக்கலாம். எனவே உங்களுக்கு ஏற்கனவே இந்த தளம் குறித்து தெரிந்து நீங்கள் அனுமதி பெற்றிருந்தால் மட்டுமே இதனுள் செல்ல முயற்சிக்கவும்.

404 Not Found









நீங்கள் தேடும் வெப்சைட் அந்த தளத்தில் இல்லை. இது போல அடிக்கடி பல தளங்களுக்கான தேடல்களில் இந்த செய்தி கிடைக்கும். நீங்கள் தேடும் இணைய தளம் குறிப்பிட்ட சர்வரிலிருந்து நீக்கப்பட்டிருக்கலாம். அல்லது அந்த வெப்சைட்டிற்கு வேறு பெயர் அளிக்கப்பட்டிருக்கலாம்.

500 Internal error










இது நீங்கள் மேற்கொண்ட செயலினால் ஏற்படும் பிழைச் செய்தி. இணைய தளத்தில் நீங்கள் ஏதேனும் ஒரு படிவத்தில் உங்களைப் பற்றிய தகவல்களை அளித்திருக்கலாம். ஆனால் வெப்சைட்டால் அந்த தகவல்கள் சரியான முறையில் கையாள இயலவில்லை. இதனை தொழில் நுட்ப ரீதியில் CGI error என அழைப்பார்கள்.

503 Service Unavailable











நீங்கள் தேடும் வெப்சைட்டை தாங்கி இயங்கும் சர்வரை அதிக எண்ணிக்கையில் மக்கள் பார்க்க முயற்சிக்கையில் அல்லது அந்த வெப்சைட் வேறு பிரச்னையால் முடங்கிப் போயிருந்தால் அல்லது அந்த சர்வரின் கட்டமைப்பு அப்போதைய ஹிட்களைத் தாங்க முடியாமல் இருந்தால் இந்த பிழைச் செய்தி கிடைக்கும்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்