கூகிளின் தற்போதைய நிலை...!!!

அமெரிக்காவில் இன்டர்நெட் பயன்படுத்துபவர்களில் 9 சதவிகிதம் பேர்,கூகுள் தரும் ஏதாவது ஒரு வசதியைத் தொடர்ந்து பயன்படுத்தி வருகின்றனர். இந்த சேவைகளில் முதன்மையானது அதனுடைய சர்ச் இஞ்சின், அடுத்ததாக யு–ட்யூப் மற்றும் அடுத்து பிற சேவைகள் வருகின்றன.

ஆனால்
இன்னும் சில நாடுகளில் கூகுள் சேவை மிக அதிகமாகவே பயன்படுத்தப்படுவதாக இது குறித்து தொடர்ந்து ஆய்வு நடத்திவரும் காம் ஸ்கோர் (ComScore) என்னும் நிறுவனம் அறிவித்துள்ளது.

அவ்வகையில் முன்னணியில் இருக்கும் நாடுகள் பிரேசில்; அடுத்ததாக, நம்புங்கள், இந்தியா. இந்த இரண்டு நாடுகளிலும் இன்டர்நெட் பயன்படுத்துபவர்கள் சராசரியாக ஒரு மணி நேரத்தில் 18 நிமிடங்கள் கூகுள் நிறுவன சேவையைப் பயன்படுத்துகின்றனர். கூகுள் சேவையில் 30 நிமிடங்கள் பிரேசில் நாட்டில் உள்ளவர்களாலும், 29 நிமிடங்கள் இந்தியாவில் உள்ளவர்களாலும் பயன்படுத்தப்படுகின்றன.

உலக அளவில் இந்த பயன்பாட்டு சதவிகிதம் 9.4 சதவிகிதம் மட்டுமே. கூகுள் நிறுவனத்தின் சோஷியல் இணைய தளமான ஆர்குட் மற்ற நாடுகளில் அவ்வளவாக வரவேற்பினைப் பெறவில்லை. ஆனால் இந்த இரண்டு நாடுகளிலும் சோஷியல் இணைய தளங்களில் முதல் இடத்தைப் பெற்றுள்ளன.

பிரேசில் நாட்டில் சர்ச் இஞ்சின் மூலம் மேற்கொள்ளப்படும் தேடல்களில் 90% கூகுள் மூலமே மேற்கொள்ளப்படுகின்றன. இந்தியாவில் இது 88%. 71% நேரம் குகூள் மேப் சேவையில் செலவழிக்கப்படுகிறது. இந்தியாவில் இது 64%. பிளாக்குகளில் பிரேசிலில் 43% செலவழிக்கப்படுகிறது. இந்தியாவில் இது 48% . இந்திய வெப் இமெயில் மார்க்கட்டில் கூகுள் நிறுவனத்தின் மார்க்கட் 50%. இந்தியாவும் பிரேசில் நாடும் உலகின் எதிர் எதிர் முனைகளில் இருக்கின்றன.

ஆனால் எப்படி இணையத்தைப் பொருத்தவரை இணையாக இருக்கின்றன என்ற கேள்வி எழலாம். இன்டர்நெட் பயன்பாட்டினைப் பொருத்தவரை இரண்டு நாடுகளும் ஒரே நேரத்தில் இணையாக வளரத் தொடங்கின. இவை வளரத் தொடங்கிய போதுதான், கூகுள் நுழைந்தது. எனவே அதனையே டிபால்ட் சாதனமாக இரு நாட்டில் உள்ளவர்களும் பயன்படுத்தத் தொடங்கினர்.

சீனாவில் கூகுள் இடம் பெறாமல் போனதற்கு அங்குள்ள தேடல் இஞ்சின் பைடு (Baidu)காரணம் ஆகும். சீன மொழியிலேயே இது தேடல் வசதிகளைத் தொடக்கத்தில் இருந்து தருகிறது. அதே போல ரஷ்யாவில் யான்டெக்ஸ் (Yantex) என்னும் தேடல் இஞ்சின் தான் பிரபலம். ஆனால் இன்டர்நெட் பயன்பாட்டில் இந்தியா உலக அளவில் ஏழாவது இடத்திலும், பிரேசில் ஒன்பதாவது இடத்திலும் உள்ளன. இந்த இரண்டும் தான் தற்போது இன்டர்நெட் பயன்பாட்டைப் பொறுத்தவரை வேகமாக வளர்ந்து வரும் நாடுகள். கூகுள் அமெரிக்காவில் தன் இடத்தை இன்னும் வளர்க்கலாம். வளர்ந்து மைக்ரோசாப்ட் நிறுவனத்திற்குத் தான் சரியான போட்டி என்பதனைக் காட்டலாம்.

கருத்துரையிடுக

1 கருத்துகள்