பயர்பாக்ஸ் டவுண்லோட் மேனேஜர்

இணையத்தில் இருந்து நமக்குத் தேவையான புரோகிராம்கள் மற்றும் படங்களை நாம் பிரவுசர்கள் தரும் வசதி மூலம் டவுண்லோட் செய்கிறோம். பயர்பாக்ஸ் பிரவுசர் தரும் டவுண்லோட் வசதி சிறப்பாகவே உள்ளது. இருந்தாலும் டவுண்லோட் செய்வதில் நமக்கு வேகம் உட்பட பல வசதிகள் கிடைக்கும் வகையில் பல டவுண்லோட் மேனேஜர் புரோகிராம்கள் கிடைக்கின்றன. அவற்றில் ஒன்று DownThemAll என்னும் புரோகிராம் ஆகும். இதனைப் பயன்படுத்திப் பார்க்கையில் இதன் வேக மும், டவுண்லோட் செய்யப் பட வேண்டிய புரோகிராம் களை வரிசையாக வைத்து இறக்கும் லாவகமும், இடை யே நின்று போனால், விட்ட இடத்தில் இருந்து மீண்டும் டவுண்லோட் செய்திடும் வகையும் மிகவும் சிறப்பாக உள்ளது.

இந்த புரோகிராமினை வடிவமைத்தவர்கள், இது வழக்கத்தைக் காட்டிலும் 400% வேகத்தில் பைல்களை டவுண்லோட் செய்திடும் எனத் தெரிவித்துள்ளனர். அந்த அளவிற்கு வேகம் உள்ளதா என்று அறிய முடியவில்லை என்றாலும், வேகம் அதி வேகம் என்பதில் சந்தேகமே இல்லை. இந்த புரோகிராமில் தரப்பட்டிருக்கும் இன்னொரு ஆப்ஷன் மிகச் சிறப்பாக உள்ளது. ஓர் இணையப் பக்கத்தில் இருக்கும் ஒவ்வொரு லிங்க் அல்லது இமேஜ் ஆகியவற்றையும் இதன் மூலம் டவுண்லோட் செய்திட முடியும். அதனால் தான் இந்த பெயர் வழங்கப்பட்டுள்ளது. இந்த ஆப்ஷன் தேர்ந்தெடுக்கப்பட்டால் அந்த பக்கத்தில் உள்ள அனைத்தையும் அறிந்து கொள்கிறது. பின் பில்டர்கள் மூலம் நாம் நமக்குத் தேவையானதைத் தேர்ந்தெடுத்து அறிந்து கொள்ளலாம்.

எந்த பைல்கள் என்பதற்கு செக் பாக்ஸ் களைக் கொடுத்து ஆப்ஷன் கேட்கிறது. இதிலேயே டவுண்லோட் செய்வதற்கான புரோகிராம் மற்றும் படங் களுக்கு புதுப் பெயர் கொடுக் கலாம்; எந்த டைரக்டரியில் பதிய வேண்டும் என்பதனை உறுதி செய்திடலாம்; சப்டைரக்டரிகளை உருவாக்கலாம்; மேலும் இது போல பல வேலைகளை மேற்கொள்ளலாம். மேலும் இந்த இந்த பைல்களை குறிப்பிட்ட டைரக்டரிகளில் டவுண்லோட் செய்திடக் கட்டளை கொடுத்து விட்டு நகர்ந்து விடலாம். கம்ப்யூட்டர் அருகிலேயே இருக்க வேண்டும் என்பதில்லை.

பயர்பாக்ஸ் பிரவுசருக்கு இது ஓர் அருமையான தோழனாக இயங்குகிறது. மிகப் பெரிய அளவிலான பைல்களை டவுண்லோட் செய்வதற்கு இது சிறந்த துணையாக உள்ளது. இந்த புரோகிராமின் மேம்படுத்தப்பட்ட பதிப்பு 1.1.4 ஆகும். இது பயர்பாக்ஸ் பிரவுசரின் அண்மைக் காலத்திய பதிப்பான பயர்பாக்ஸ் 3.5 உடன் இணைந்து செயலாற்றுகிறது.

தரவிறக்கம் செய்ய : இங்கே கிளிக் செய்யவும்

கருத்துரையிடுக

2 கருத்துகள்