பயர்பாக்ஸ் பிரவுசருக்கான பாதுகாப்பு மென்பொருட்கள்

இன்டர்நெட் பயன்படுத்துபவர்கள், குறிப்பாக பிளாக்குகள் அமைப்பவர்களிடையே, பயர்பாக்ஸ் பிரவுசர் தொகுப்பு மிக வேகமாக பிரபலமாகி வருகிறது. நம் விருப்பங்களுக்கு ஏற்றபடி அமைத்துக் கொள்ளக் கூடிய வசதி, பயன்படுத்த எளிமையான இன்டர்பேஸ், நம்பிக்கை தரும் இயக்க தன்மை ஆகிய இதன் சிறப்புகளே, பலரை இன்டர்நெட் எக்ஸ்புளோரரை விட்டு இதனைப் பயன்படுத்தத் தூண்டுகின்றன. அனைத்து இன்டர்நெட் பிரவுசர்களும் கட்டாயம் பாதுகாக்கப்பட வேண்டிய சூழ்நிலையில் உள்ளன. ஏதேனும் ஒரு வகையில் வைரஸ் புரோகிராம்கள் மற்றும் கெடுதல் விளைவிப்பதற்காகவே எழுதப்படும் புரோகிராம்கள் பிரவுசர் வழியாக வந்துவிடுகின்றன.

பொதுவாக ஏதேனும் ஒரு புரோகிராமினை டவுண்லோட் செய்கையில் அடிப்படை யில் ஒரு சில பாதுகாப்பு முறைகள் செயல்படுத்தப்படுகின்றன. ஆனால் இவை பழகிப் போனதால், கெடுதல் விளைவிக்கும் புரோகிராம்களை அனுப்புபவர்கள் இவற்றை மீறிச் செயல்படும் வகையில் அவற்றை வடிவமைத்து விடுகின்றனர். எனவே தொடர்ந்து பிரவுசரைப் பாதுகாக்கும் வகையில் நாம் அதனைப் பலப்படுத்த வேண்டியுள்ளது.

மொஸில்லாவின் பயர்பாக்ஸ் பிரவுசர், கம்ப்யூட்டரை, இது வைரஸ் போன்ற தீய செயல்களை மேற்கொள்ளும் தொகுப்புகளிலிருந்து பாதுகாக்கும் புரோகிராம்களை சப்போர்ட் செய்கிறது. அத்துடன் பயர்பாக்ஸ் பிரவுசருக்கென வடிவமைக் கப்பட்டுள்ள பல ஆட் ஆன் தொகுப்புகளும் கூடுதல் பாதுகாப்பு தரும் வகையில் உருவாக்கப்பட்டு கிடைக்கின்றன. இவற்றையும் பயர்பாக்ஸ் ஏற்றுக் கொள்கிறது.

வங்கிக் கணக்குகள் கையாளுதல், ஆன்லைனில் பொருட்களுக்கு ஆர்டர் செய்து வாங்குதல், அவற்றிற்குப் பணம் செலுத்துதல், சோஷியல் நெட்வொர்க் கிங்கில் நண்பர்களுடன் தொடர்பு கொள்ளல், கல்வி கற்றல் போன்ற பணிகளில் நாம் இன்டர்நெட்டினைப் பயன்படுத்துவதால், ஒரு பாதுகாப்பான சூழ்நிலை நமக்கு அவசியமாகிறது.மொஸில்லா பயர்பாக்ஸ் பிரவுசருக்குக் கூடுதல் பாதுகாப்பு தரும் வகையில் தரப்பட்டுள்ள ஆட்–ஆன் தொகுப்பு களிலிருந்து சிறப்பாகச் செயல்படும் சில தொகுப்புகளின் பட்டியல் இங்கு தரப்படுகிறது.

1.Adblock Plus

இந்த ஆட் –ஆன் தொகுப்பு வாரந்தோறும் ஏறத்தாழ 8 லட்சம் பேரால் டவுண்லோட் செய்யப்பட்டு பயன்படுத்தப்படுகிறது. பேனர்கள், விளம்பரங்களைத் தாங்கி வரும் பாப் அப் விண்டோக்களை முற்றிலுமாய்த் தடுக்கிறது.

இந்த தொகுப்பைப் பதிந்த பின்னர், ஏதேனும் பேனர் விளம்பரம் வந்தால், அதன் மீது ரைட் கிளிக் செய்திடுங்கள். கிடைக்கும் கான்டெக்ஸ்ட் மெனுவில் Adblock Plus என்பதனைத் தேர்ந்தெடுங்கள். அந்த பேனர் மீண்டும் ஒரு முறை அந்த கம்ப்யூட்டரில் டவுண்லோட் செய்யப்படமாட்டாது. அல்லது தொகுப்பை முதலில் பயன்படுத்தத் தொடங்குகையில் பில்டர் பயன்பாட்டினை இயக்கிவிட்டால் இது போன்ற பேனர் விளம்பரங்களை அண்டவிடாது.

தரவிறக்கம் செய்ய : இங்கே கிளிக் செய்யவும்

2.Better Privacy

பொதுவாக குக்கிகளால் நமக்கு சில நன்மைகள் இருந்தாலும், பல குக்கிகள் நம் கம்ப்யூட்டரை வேவு பார்க்கும் வேலைக்கே அனுப்பப்படுகின்றன. இவற்றை நம் பிரவுசிங் முடிந்த பின்னர் அழித்துவிடலாம். ஆனால் சில குக்கிகள் அழிக்கப்பட முடியாத வகையில் உருவாக்கப்பட்டு பதிக்கப்படுகின்றன. இவற்றை சூப்பர் குக்கிகள் என அழைக்கின்றனர். இவற்றிலிருந்தும் பாதுகாக்கும் வேலையை இந்த ஆட் ஆன் புரோகிராம் தருகிறது.இந்த பிளாஷ் குக்கிகளை எல்.எஸ்.ஓ. குக்கிகள் எனவும் அழைக்கின்றனர். இவை நம் கம்ப்யூட்டரில் எப்போதும் நிரந்தரமாக இருக்கும் வகையில் பதியப்படும். ஒரு குக்கியின் அளவு 100 கேபி. வழக்கமான சாதாரண குக்கியின் அளவு 4 கேபி மட்டுமே. இந்த குக்கிகளை பிரவுசர்கள் அறிவதில்லை. எல்.எஸ்.ஓ. குக்கிகளை பிரவுசர்களாலும் அழிக்க முடிவதில்லை. இந்த வகை குக்கிகள் சிஸ்டத்தில் பதிந்து வைக்கப்பட்டுள்ள தகவல்களை எளிதாகப் பெற்று, நாம் அறியாமலேயே மற்ற கம்ப்யூட்டருக்கு அனுப்பும் தன்மை கொன்டவை.

பிளாஷ் குக்கிகள் எப்போது சென்ட்ரல் சிஸ்டம் போல்டரில் தான் பதியப்படுகின்றன. எனவே இவை நீக்கப்படாது. நீக்குவதும் சிரமம். Better Privacy புரோகிராம் ஒவ்வொரு முறை நீங்கள் பிரவுசரை மூடும்போது, இவை அனைத்தையும் நீக்கிவிடுகிறது. அல்லது ஒவ்வொரு பிளாஷ் குக்கியாக இந்த புரோகிராம் மூலம் பெற்று அவற்றை நீக்குவதா, வைத்துக் கொள்வதா என நீங்கள் தீர்மானிக்கலாம்.

தரவிறக்கம் செய்ய : இங்கே கிளிக் செய்யவும்

3. No Script

இணையத்தில் எந்த வகையில் நம்மை அழிக்கும் புரோகிராம்கள் வரும் என்று சொல்ல முடியாத வகையில் பல வகை புரோகிராம்கள் உள்ளன. இவற்றில் ஸ்கிரிப்ட் என்பதுவும் ஒன்று. இதிலிருந்து பாதுகாக்கும் வழிகளை இந்த ஆட் ஆன் தொகுப்பு தருகிறது.

2006 ஆம் ஆண்டின் சிறந்த புரோகிராமாக இது விருது பெற்றது. பிரவுசருக்கான சரியான பாதுகாப்பினைத் தருகிறாது. இந்த புரோகிராம் ஜாவா, ஜாவா ஸ்கிரிப்ட் போன்றவற்றை நாம் அனுமதிக்கும் நேரத்தில், அனுமதிக்கும் தளங்களில் இருந்து வந்தால் மட்டுமே இயங்க வைக்கும்.

தரவிறக்கம் செய்ய : இங்கே கிளிக் செய்யவும்

4. WOT Web of Trust

இணையப் பயன்பாட்டின் போது, நம்முடைய கம்ப்யூட்டருக்குள் நம் அனுமதியின்றி சிலர் ஊடுருவி, பெர்சனல் தகவல்களைத் திருடும் புரோகிராம்களை இன்ஸ்டால் செய்திட முயற்சிப்பார்கள். இது போன்ற முயற்சிகள் மேற்கொள்ளப்படுகையில் இந்த புரோகிராம் நமக்கு எச்சரிக்கை கொடுக்கும்.

ஆபத்து நிறைந்த இணைய தளங்களுக்கு நீங்கள் செல்கையில் இது பலத்த எச்சரிக்கையினைத் தரும். ஓர் இணைய தளம் ஸ்பேம் மற்றும் மால்வேர்களை அனுப்ப முயற்சிக்கையில் இந்த புரோகிராம் அந்த செயலை மோப்பம் பிடித்து அறிந்து உடனே எச்சரிக்கை கொடுத்து, நம்மை அந்த தளத்தின் இணைப்பைத் துண்டித்துக் கொள்ளச் சொல்லும். இந்த புரோகிராமில் பல லட்சம் தளங்களின் தன்மை குறித்த தகவல் பதியப்பட்டுள்ளது.

தரவிறக்கம் செய்ய : இங்கே கிளிக் செய்யவும்

5.Stealther

நாம் இணையத்தில் உலா வருகையில், தகவல்களைத் தேடுகையில், இமெயில் களைப் பெறுகையிலும் அனுப்பும்போது நம் இணையப் பயணம் குறித்த பல தடயங்கள் உருவாக்கப்படுகின்றன. பிரவுசர் ஹிஸ்டரி, குக்கீஸ், டிஸ்க் கேஷ், பைல் ஹிஸ்டரி, படிவங்களில் தரப்படும் தகவல்கள் என இவை பலவகைப்படுகின்றன. இது போன்ற எந்த தடயமும் இல்லாமல் இந்த புரோகிராம் பார்த்துக் கொள்கிறது. இந்த புரோகிராம் நாம் பிரவுசரை இயக்கியவுடன் தானும் இயங்கி தடயங்களை ஏற்படுத்தும் புரோகிராம் பகுதிகளைத் தற்காலிகமாக நிறுத்தி வைக்கிறது.

தரவிறக்கம் செய்ய : இங்கே கிளிக் செய்யவும்

6. Roboform Toolbar

நாம் பயன்படுத்தும் பாஸ்வேர்ட் களைப் பாதுகாப்பாக வைத்துக் கொள்ள இந்த புரோகிராம் உதவுகிறது.பாஸ்வேர்ட்களை நினைவில் வைத்து நாம் அவற்றை முறையாகவும் தவறின்றிப் பயன்படுத்தவும் உதவுகிறது.

தரவிறக்கம் செய்ய : இங்கே கிளிக் செய்யவும்

7. Key Scrambler Personal

நாம் பயன்படுத்தும் பாஸ்வேர்ட்கள் மற்றும் பிற முக்கிய தகவல்களை, நாம் அறியாமலேயே நம் கம்ப்யூட்டர் களுக்குள் அமர்ந்து அறியும் புரோகிராம் களில் ஒரு வகை கீ லாக்கர் என்பதாகும். இவை நாம் அழுத்தும் கீகளைப் பதிவு செய்து பின் இதனைப் பதித்தவருக்குத் தரும். இன்டர்நெட் மையங்கள் மற்றும் அலுவலகங்களில் உள்ள பொது கம்ப்யூட்டர்களில் சிலர் இவற்றைப் பதிந்து வைத்துப் பயன்படுத்துவார்கள். ஏன், நம் கம்ப்யூட்டர்களில் பிறரை அனுமதித்தால், நம் அனுமதியில்லா மலேயே அவர்கள் இந்த வேவு பார்க்கும் வேலையை மெற்கொள்ளலாம். இத்தகைய கீ லாக்கர்கள் புரோகிராம்களிலிருந்து நம்மைப் பாதுகாக்கிறது இந்த Key Scrambler Personal புரோகிராம்.

தரவிறக்கம் செய்ய : இங்கே கிளிக் செய்யவும்

பிரவுசர் பாதுகாப்பு என்பது நாம் கட்டாயம் மேற்கொள்ள வேண்டிய ஒரு தடுப்பு வழியாகும். அப்போதுதான் நாம் நிம்மதியாக இணையத்தைப் பயன்படுத்த முடியும்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்