TopBottom

பழசாகிப் போன ஆப்பரேட்டிங் சிஸ்டங்கள்

எழுதியவர் : Karthikan Karunakaran 19 October 2009

கடந்த 30 ஆண்டுகளாக பெர்சனல் கம்ப்யூட்டர் பயன்பாடு இருந்து கொண்டு இருக்கிறது. அப்போது தோன்றிய சில ஆப்பரேட்டிங் சிஸ்டங்களில் இன்னும் சில பழக்கத்தில் உள்ளன. பலவற்றிற்கு குட் பை சொல்லி முடக்கிவிட்டோம். AmigaOS! போன்ற சிஸ்டங்களை வருத்தத்துடன் ஒதுக்கிவிட்டோம். சிலவற்றை (Adios, Windows Me!) கொஞ்சம் தள்ளித்தான் இருங்களேன் என்று காட்சிப் பொருளாக வைத்திருக்கிறோம். சிலவற்றை (MSDOS) கழுத்தைப் பிடித்து தள்ளாத குறையாகத் தள்ளி வாசலில் வைத்து எப்போதாவது ஒருமுறை பார்த்துக் கொள்கிறோம்.

தகவல்களைத் திரட்டி கம்ப்யூட்டரில் பயன்படுத்தப்பட்டு பழசாகிப் போன ஆப்பரேட்டிங் சிஸ்டங்கள் குறித்து இங்கே தகவல்கள் தருகின்றேன். முதலில் ஆப்பரேட்டிங் சிஸ்டம் என்பது நாம் அறிந்து கொள்ள வேண்டியது மட்டுமே. அதனை ஒருவர் விரும்புவது அவசியமில்லை. விண்டோஸ் இயக்கத்தில் விண் ஆம்ப் இயக்கம் அதிகமாக விரும்பப்படும். ஏனென்றால் அது வீடியோவையும் ஆடியோவையும் தருகிறது. ஆனால் விண்டோஸ் இயக்கத்தை யாரும் விரும்புவதில்லை. இருப்பினும் இதயம் துடிப்பது போல கம்ப்யூட்டர் இயங்குகையில் அதன் ஆப்பரேட்டிங் சிஸ்டம் இயங்கிக் கொண்டுதான் இருக்க வேண்டும். அதனை இயக்குபவர் அதனை விரும்புகின்றாரா என்ற கேள்விக்கு இடமில்லை.

சி.பி. பார் எம்

புரோகிராமிங் அப்ளிகேஷன்களை எளிதாக இயக்க ஒரு சிஸ்டம் தேவை என்று முயற்சித்த போது டிஜிட்டல் ரிசர்ச் நிறுவனத்தின் ஆய்வு கூடத்தில் பணியாற்றிய கேரி கில்டால் (Gary Kildall) சி.பி. பார் எம் (Control Program for Micro computers) என்ற ஒரு ஆப்பரேட்டிங் சிஸ்டத்தினை உருவாக்கினார். மைக்ரோ கம்ப்யூட்டர் பயன்பாடு அன்றிலிருந்துதான் தொடங்கியது.

பெர்சனல் கம்ப்யூட்டர் பயன்பாட்டில் ஒரு புரட்சியை இது தொடங்கி வைத்தது. வேர்ட் ஸ்டார் மற்று டிபேஸ் (WordStar and dBase)இதன் அடிப்படையில் இயங்கும்படி முதலில் தொடங்கப்பட்டன. டாட் ப்ராம்ப்ட் (நம் கட்டளையை வாங்க துடிக்கும் புள்ளி – இப்போதைய மவுஸ் கர்சர் போல) DIR கட்டளை இதோடு சம்பந்தப்பட்டவை தான். எட்டு கேரக்டர் மற்றும் மூன்று துணை கேரக்டர்களில் பைல் பெயர் என்பதுவும் இந்த சிஸ்டம் உருவாக்கிய வரைமுறைகள்தான்.

டாஸ் சிஸ்டம்

இன்றும் இயங்கும் டாஸ் ஆப்பரேட்டிங் சிஸ்டத்தின் பெரியப்பா இந்த சி.பி. பார் எம் தான் என்றால் அது மிகையாகாது. டாஸ் சிஸ்டம் மற்றும் ஆப்பிள் ஐஐ பல்லாண்டு பெர்சனல் கம்ப்யூட்டர் களை இயக்கியது.

டாஸ் இயக்கம் பல பெயர்களில் பல நிறுவனங்களால் வடிவமைக்கப்பட்டு பயன்படுத்தப்பட்டது. 1981ல் ஐ.பி.எம். கம்ப்யூட்டருடன் தரப்பட்ட PCDOS சிஸ்டம் மைக்ரோசாப்ட் நிறுவனத்தால் அதன் MSDOS சிஸ்டத்திலிருந்த் உருவாக்கப்பட்டது. இதனை QDOS என்றும் அழைத்தனர். 1987ல் வந்த எம்.எஸ். டாஸ் 3.3 பலரின் விருப்ப ஆப்பரேட்டிங் சிஸ்டமாக இருந்தது. அதன் பதிப்பு 4 வந்த பின்னரும் பலர் 3.3 பதிப்பையே பயன்படுத்தி வந்தனர்.

அத்தனை டாஸ் சிஸ்டங்களும் ஒன்றும் சாதாரண பயன்பாட்டிற்காக வந்தவை அல்ல. அதன் கட்டமைப்பில் புரோகிராம்களை அமைப்பது பெரிய சவாலாகவே இருந்து வந்தது. இன்னும் இது நம் ஆப்பரேட்டிங் சிஸ்டத்தில் உள்ளது. ஸ்டார்ட் அழுத்தி ரன் விண்டோவில் cmd எனத் தந்தால் டாஸ் இயக்கம் கிடைக்கும். இன்னும் பலர் பழைய ஞாபகம் வந்தால் பைல்களைக் கை யாள இதனைப் பய ன்படுத்துகின்றனர்.

மேக் சிஸ்டம் 1.1.

பதினாறு ஆண்டுகள் இந்த சிஸ்டத்தின் ஒன்பது பதிப்புகள் வெளியாகின. மேக் சிஸ்டம் வெகு வேகமாகப் பலரின் மதிப்புக்குள்ளானது. இதனைத் தொடர்ந்து வந்தது மேக் சிஸ்டம் 7. இந்த சிஸ்டத்தின் வாடிக்கையாளர்கள் தொடர்ந்து இதனை மலையாக நம்பி இன்றும் பயன்படுத்தி வருகின்றனர்.

அடியோஸ்அமிகாஸ் (Adios, Amigas)

ஒரே நேரத்தில் பல செயல்பாடுகளை மேற்கொள்வது இன்றைய பெர்சனல் கம்ப்யூட்டரின் அடிப்படை அம்சமாக இருக்கலாம். ஆனால் அதனை செயல்படுத்த முடியும் என முதலில் காட்டியவை இந்த ஆப்பரேட்டிங் சிஸ்டங்களே. ஆனால் அவ்வளவாக மக்களிடம் இவை எடுபடாத காரணத்தினால் சுட்டிக் காட்டிய சிஸ்டங்கள் என்ற பெயருடன் நின்று போனது. இருப்பினும் மேற்கு நாடுகளில் இன்னும் பலர் இதனைப் பயன்படுத்தி வருகின்றனர்.

கோலி ஜியோஸ் (Golly GEOS)

மேக் இன்டோஷ் சிஸ்டம் வந்து இரண்டு ஆண்டுகளுக்குப் பின், விண்டோஸ் நுழைந்த அந்த நேரத்தில் கலிபோர்னியா புரோகிராமர்களால் இந்த சிஸ்டம் வடிவமைக்கப்பட்டது. விரைவில் மிக அதிகமாகப் பயன்படுத்தப்படும் சிஸ்டங்களில் மூன்றாவது இடத்தைப் பிடித்தது. இருப்பினும் இந்த இயக்கத்தில் மெமரியைக் கையாள்வது, தொடர்ந்து வந்த அப்ளிகேஷன் சாப்ட்வேர்களுக்கு பிரச்சினையாக இருந்ததால் மக்கள் விண்டோஸ் பக்கம் சாயத் தொடங்கினர்.

பி .எஸ். (BeOS)

1991ல் ஆப்பிள் நிறுவனம் தன் பவர் பிசி சிஸ்டத்தை வெளியிட்டபோது பி இன்க் என்ற நிறுவனம் தன் ஆப்பரேட்டிங் சிஸ்டமாக பி ஓ.எஸ். சிஸ் டத்தை மேக் பிளாட்பாரத்தில் இயங்கும் வகையில் வெளியிட்டது. காலப் போக்கில் இந்நிறுவனத்தின் எதிர்பார்ப் புகள் நிறைவேறாமல் நிதிப் பிரச்சினயைச் சந்தித்த இந்நிறுவனம் இந்த சிஸ்டத்தை பாம் (Palm) நிறுவனத்திற்கு விற்றுவிட்டது. அதோடு இது மறைந்துவிட்டது எனலாம்.

விண்டோஸ் 95

அளவுக்கதிகமான ஒரு விற்பனை விளம்பரத்துடன் வெளியான சிஸ்டம் இது. இதன் விற்பனை யுக்தியைப் பின்னாளில் மார்க்கட்டிங் சுனாமி எனப் பலர் வர்ணித்தனர். முதல் முறையாக பயனாளர்களுக்கு எளிதான ஒரு கிராபிகல் சிஸ்டம் மைக்ரோசாப்ட் நிறுவனத்தால் வழங்கப்பட்டது. இது தொடர்ந்து முன்னேற்றமடைந்து இன்று உலகின் 85 சதவிகித கம்ப்யூட்டர்களில் பயன்படுத்தப்படும் சிஸ்டமாக இயங்கி வருகிறது. இதனைத் தொடர்ந்து வெளியான பல விண்டோஸ் ஆப்பரேட்டிங் சிஸ்டங்கள் மறக்கப்பட்டு இப்போது எக்ஸ்பி மற்றும் விஸ்டா மட்டுமே புழக்கத்தில் உள்ளன.

இன்றும் சில இடங்களில் இந்த பழைய சிஸ்டங்களுடன் இயங்கும் கம்ப்யூட்டர்களைக் காணலாம். எங்களுக்கு இது போதும் என டாஸ் மற்றும் வேர்ட் ஸ்டார் பயன்படுத்துபவர்கள் பலரை நான் சந்தித்திருக்கிறேன். இருப்பினும் வேகமாக மாறி வரும் கம்ப்யூட்டர் உலகில் பழைய சிஸ்டங்கள் பல மறக்கப்பட்டுத்தான் போகும் என்பது மாற்றமுடியாத நியதியாகும்.

0 Comments

:a   :b   :c   :d   :e   :f   :g   :h   :i   :j   :k   :l   :m   :n   :o   :p   :q   :r   :s   :t

About Me

My Photo
Karthikan Karunakaran
View my complete profile

Twitter

    Twitter Updates

      follow me on Twitter

      Recent Comments