விண்டோஸை வேகப்படுத்த 20 வழிகள் #2

விண்டோஸ் 95, 98, 2000, எக்ஸ்பி, விஸ்டா, விண்டோஸ் 7 எனப் பல நிலைகளில் ஆப்பரேட்டிங் சிஸ்டங்களை மைக்ரோசாப்ட் தந்தாலும், அவை இயங்கும் வேகம் இன்னும் அதிகமாக இருக்க வேண்டும், சிறிது கூடக் குறையக் கூடாது என்பதுதான் நம் விருப்பமாக எந்தக் காலத்திலும் உள்ளது.

ஒரு சில நடவடிக்கைகளை மேற்கொண்டால் நிச்சயம் ஆப்பரேட்டிங் சிஸ்டத்தினை புயல் வேகத்தில் இயங்க வைக்கலாம் என்பதே உண்மை. அந்த சில நடவடிக்கைகளை இங்கு காணலாம்.

சென்ற வாரம், மெதுவாக இயங்கும் விண்டோஸ், வேகத்தில் இயங்க அனைத்து வகை வழிகளாக நாம் என்ன செய்ய வேண்டும் என்பது குறித்து 20 வழிகள் தரப்பட்டன. மேலும் இருபது வழிகள் இந்த வாரம் தரப்படுகின்றன.

இந்த நடவடிக்கை குறித்த டிப்ஸ்கள், சிஸ்டம் வடிவமைப்பவர்கள், சிஸ்டம் அட்மினிஸ்ட்ரேட்டர்கள், நெட்வொர்க் அட்மினிஸ்ட் ரேட்டர் மற்றும் ஹெல்ப் டெஸ்க் வல்லுநர்கள் எனப் பலரிடம் திரட்டியவை. நீங்களும் இவற்றை முயற்சித்துப் பாருங்களேன்.

1. விஸ்டாவிலும், எக்ஸ்பியிலும் TeraCopy என்ற புரோகிராமைப் பயன்படுத்தி காப்பி செயல்பாட்டை மேற்கொண்டால், அதில் வேகம் கிடைக்கும். இது இலவசமாய் இணையத்தில் கிடைக்கிறது.

தரவிறக்கம் செய்ய : இங்கே கிளிக் செய்யவும்

2. எக்ஸ்பியில் 512 எம்பிக்கும் குறைவாகவும், விஸ்டாவில் 1 ஜிபிக்கும் குறைவாக ராம் மெமரி பயன்படுத்துவது சிரமத்தைத் தரும். இதனை அதிகரிக்கலாமே!

3. சிஸ்டம் ப்ராபர்ட்டீஸ் விண்டோ பெற்று, பெர்பார்மன்ஸ் டேப் கிளிக் செய்து அதில் Adjust for best performance"தேர்ந்தெடுக்கப்பட்டிருப்பதனை உறுதி செய்திடவும்.

4. எப்போதாவது விண்டோஸ் மீண்டும் ரீ இன்ஸ்டால் செய்யப் போகிறீர்களா? அப்படியானால் உங்கள் ஹார்ட் டிரைவ் சரியாக பார்ட்டிஷன் செய்யப்பட்டிருப்பதனை உறுதி செய்திடுங்கள். டிஸ்க்கில் உள்ள பைல்களை அழிக்காமலேயே, ஹார்ட் டிரைவை பார்ட்டிஷன் செய்யக் கூடியபுரோகிராம்கள் நிறைய இணையத்தில் கிடைக்கின்றன.

5. விண்டோஸ் இயக்கத்திற்கான டிரைவர் புரோகிராம்கள் அனைத்தையும் அவ்வப்போது அப்டேட் செய்திடவும்.

6. கண்ட்ரோல் பேனலைத் திறந்து அதில் Add or Removeஎன்ற பிரிவைப் பார்த்துப் பயன்படுத்தாத புரோகிராம்களை நீக்கவும்.

7.குறிப்பிட்ட கால இடைவெளியில் உங்கள் மவுஸ், கீ போர்டு, சிபியுவில் உள்ள சிறிய மின்விசிறிகள் மற்றும் பிற இடங்களில் உள்ள தூசு நீக்கிச் சுத்தம் செய்திடவும்.

8. உங்கள் ஹார்ட் டிஸ்க் 7200 ஆர்.பி.எம். சுழற்சிக்கும் குறைவான வேகத்தில் செயல்படுவதாக இருந்தால், உடனே குறைந்தது அந்த வேகத்தில் சுழலும் ஹார்ட் டிஸ்க்குக்கு மாறவும்.

9. அவ்வப்போது ஆண்ட்டி வைரஸ் கொண்டு உங்கள் டிஸ்க் முழுவதையும் சோதனை செய்திடவும். ஆண்ட்டி வைரஸ் தொகுப்பினை உங்கள் கம்ப்யூட்டரில் பதிந்து வைத்து இயக்க விருப்பமில்லை எனில், ஆன்லைனில் கிடைக்கும் இலவச புரோகிராம்களைப் பயன்படுத்தவும்.

10. இன்டர்நெட் பிரவுசர் மற்றும் விண்டோஸ் டாஸ்க்பாரில் தேவையற்ற டூல்பார்களை நீக்கவும். விஸ்டாவில் சைட் பாரினை பயன்படுத்தவில்லை என்றால் நீக்கலாம். இது தேவையற்ற இடத்தையும், சிபியுவின் செயல்பாட்டையும் எடுத்துக் கொள்கிறது.

11. விண்டோஸ் மற்றும் பிற புரோகிராம்களுக்கான ஷார்ட் கட் கீகளைத் தெரிந்து கொண்டு பயன்படுத்துவது நல்லது. அல்லது நீங்களே உங்கள் ஷார்ட் கட் கீகளை உருவாக்கிப் பயன்படுத்தலாம்.

12.நீங்கள் ஒரு கம்ப்யூட்டர் டெக்னீஷியனாக இருந்தால் உங்கள் ப்ராசசருக்கு ஒரு ஓவர்கிளாக் போடலாம். இதனை எப்படி போடுவது என்பதை கீழே முகவரியில் உள்ள தளத்திலிருந்து தெரிந்து கொள்ளுங்கள்.

தள முகவரி : இங்கே கிளிக் செய்யவும்

13. ஸ்கேன்டிஸ்க் அல்லது செக்டிஸ்க் பயன்படுத்தி உங்கள் ஹார்ட் டிரைவில் பேட் செக்டார் இல்லாமல் பார்த்துக் கொள்ளவும்.

14. உங்கள் கம்ப்யூட்டரில் பிளாப்பி டிரைவ், சிடி ராம் டிரைவ், யு.எஸ்.பி. போர்ட், ஐ.ஆர். போர்ட், பயர்வயர் போன்றவை தரப்பட்டுள்ளன. இவற்றில் பலவற்றை (எ.கா. பிளாப்பி டிரைவ், ஐ.ஆர். போர்ட், பயர்வயர்) நாம் பயன்படுத்துவதே இல்லை. உங்கள் பயாஸ் (BIOS)செட்டிங்ஸ் சென்று, பயன்படுத்தாதவற்றின் இயக்கத்தை நிறுத்தலாம்; இதனால் பூட் ஆகும்போது இவை சார்ந்த பைல்கள் லோட் ஆகாமல் இருக்கும். மேலும் இவற்றிற்கு செல்லும் மின்சக்தி மிச்சமாகும்.

15. சிலர் ரீசன்ட் டாகுமெண்ட் லிஸ்ட்டைப் பயன்படுத்தமாட்டார்கள். அவர்கள் இந்த வசதியை எடுத்துவிடலாம். ஏனென்றால் பெரிய லிஸ்ட்டில் இந்த பைல்கள் இடம் பெறுவது கம்ப்யூட்டர் இயக்கத்தினை மந்தப்படுத்தும்.

16.புரோகிராம்களை அன் இன்ஸ்டால் செய்திடுகையில் ரெவோ அன் இன்ஸ்டாலர் (Revo Uninstaller) போன்ற புரோகிராம்களைப் பயன்படுத்தவும். இவை அந்த புரோகிராம் சார்ந்த அனைத்து பைல்களையும் நீக்கிவிடும்.

தரவிறக்கம் செய்ய : இங்கே கிளிக் செய்யவும்

17. தற்போது பயன்படுத்தாத பிரிண்டர்கள், மொபைல் போன் மற்றும் எம்பி3 பிளேயர்களுக்கான டிரைவர்களை நீக்கவும்.

18. உங்கள் கம்ப்யூட்டரில் விஸ்டா மிகவும் மெதுவாக இயங்குகிறதா? எந்தவிதத் தயக்கமும் இன்றி எக்ஸ்பிக்கு மாறவும். அடுப்பு எதாக இருந்தால் என்ன, சோறு சீக்கிரம் வெந்தால் சரிதானே! லினக்ஸ் அல்லது மேக் சிஸ்டத்திற்கும் கூட மாறலாம்.

19. மிக மிக ஸ்லோவாக இயங்குகிறதா? தயங்காமல் ஹார்ட் டிஸ்க்கினை ரீ பார்மட் செய்திடவும். பைல்களைக் கவனமாக பேக் அப் செய்துவிட்டு, விண்டோஸ் சிஸ்டம் டிஸ்க் மற்றும் டிரைவர் பைல்களைத் தயாராக வைத்துக் கொண்டு இந்த வேலையை மேற்கொள்ளலாம்.

20. எரிச்சல் அடையும் அளவிற்கு, கம்ப்யூட்டர் மிக மிக மெதுவாக இயங்குகிறதா? இன்னொரு வழியும் உள்ளது. புதிய கம்ப்யூட்டர் ஒன்று வாங்கி, அனைத்துமே புதியதாக இன்ஸ்டால் செய்து பயன்படுத்துங்களேன்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்