2009 தந்த சிறந்த பத்து இலவச புரோகிராம்கள்

சென்ற ஆண்டில் பல நூற்றுக்கணக்கான பயன்பாட்டு புரோகிராம்கள் இணையத்தில் புதிதாய்க் கிடைத்தன. பலவகையான பிரிவுகளில் இவை இருந்தன. மக்கள் தங்களுக்குத் தேவையானவற்றைத் தேடிப்பிடித்து டவுண்லோட் செய்து பயன்படுத்தினர்.

இருப்பினும் சில புரோகிராம்கள் அனைவருக்கும் தேவையானதாய் இருந்தன. மிக அதிக எண்ணிக்கையில் டவுண்லோட் செய்யப்பட்டதன் அடிப்படையில் கீழே உள்ள புரோகிராம்கள் பட்டியலிடப்பட்டுள்ளன. இவற்றில் ஏதேனும் உங்களுக்குத் தேவையானதாக இருந்தால் இப்போதும் டவுண்லோட் செய்து பயன்படுத்தலாம்.

1. விண்டோஸ் 7

ஆப்பரேட்டிங் சிஸ்டங்களில் விண்டோஸ், 2009ஆம் ஆண்டு பலநிலைகளில் மக்களைச் சென்றடைந்தது. ஏதாவது ஒரு வகையில் மிக அதிக எண்ணிக்கையில் டவுண்லோட் ஆன புரோகிராம் ஆக விண்டோஸ் 7 பதிப்பு இருந்தது. சோதனைப் பதிப்பாக பல நிலைகளிலும், இறுதிச் சோதனைப் பதிப்பாகவும் இது மக்களைச் சென்றடைந்தது. முதலில் ஜனவரியில் இதன் சோதனைத் தொகுப்பு கிடைத்தது. ஆனால் இதில் நிறைய பிரச்சினைகள் இருந்தன. எனவே உடனே திரும்பப் பெறப்பட்டது; மீண்டும் தரப்பட்டது.

அதிகமான எண்ணிக்கையில் மக்கள் இதனை டவுண்லோட் செய்திட முயற்சித்ததில் பிரச்சினை ஏற்பட்டு இதன் காலக் கெடு நீட்டிக்கப்பட்டது.அடுத்து மே மாதம் இதன் இறுதிச் சோதனை பதிப்பு தரப்பட்டது . இந்த விண்டோஸ் 7 சோதனைப் பதிப்பு தந்த அழகான தீம்களை மக்கள் டவுண்லோட் செய்து பயன்படுத்தத் தொடங்கினார்கள்.

தரவிறக்கம் செய்ய : இங்கே கிளிக் செய்யவும்

2. போர்ட்டபிள் உபுண்டு லினக்ஸ் (Portable Ubuntu for Windows)

லினக்ஸ் ஆப்பரேட்டிங் சிஸ்டம் தொடர்ந்து தன் ஆதரவாளர் எண்ணிக்கையைச் சென்ற ஆண்டில் உயர்த்தியது. இதனால் பல்வேறு பதிப்புகள் வெளியாயின. இவற்றில் அதிகம் டவுண்லோட் செய்யப்பட்ட சிஸ்டம் பைல் உபுண்டு லினக்ஸ் போர்ட்டபிள் எடிஷனாகும். கீழே உள்ள தளத்தில் இருந்து போர்ட்டபிள் எடிஷன் மிக அதிகமாக இறக்கப்பட்டு பயன்படுத்தப்பட்டது. விண்டோஸ் டெஸ்க்டாப்பிலேயே இதனைப் பயன்படுத்தலாம் என்ற வசதிதான் இதன் அடிப்படைக் காரணமாக இருந்தது.

தரவிறக்கம் செய்ய : இங்கே கிளிக் செய்யவும்

3. செவன் ரீமிக்ஸ் எக்ஸ்பி (Seven Remix XP)

விண்டோஸ் 7 பதிப்பு வெளியானவுடன், பலர் தங்களுக்கும் அந்த அனுபவம் வேண்டும் என விரும்பினார்கள். ஆனால் அவர்களிடம் இருந்த கம்ப்யூட்டர் ஹார்ட்வேர் அதற்கு இடமளிக்கவில்லை. இருப்பினும் விண்டோஸ்7 அனுபவத்தினை எக்ஸ்பி சிஸ்டத்திலேயே பெற்றுக் கொள்ளும் வகையில் வெளியான புரோகிராம் பலரின் கவனத்தைக் கவர்ந்தது. அதிகமான எண்ணிக்கையில் டவுண்லோட் ஆன புரோகிராம்களில் இதுவும் ஒன்று.

தரவிறக்கம் செய்ய : இங்கே கிளிக் செய்யவும்

4. நினைட் (Ninite )

விண்டோஸ் 7 வந்ததனால் உருவான பல பயன்பாட்டு புரோகிராம்களில் இதுவும் ஒன்று. ஆப்பரேட்டிங் சிஸ்டத்தினைக் கம்ப்யூட்டரில் மாற்றுகையில், ஏற்கனவே பயன்படுத்தி வந்த புரோகிராம்களையும் அதற்கான டிரைவர்களையும், மீண்டும் புதிய சிஸ்டத்தில் அமைப்பது பெரிய வேலையாக இருக்கும். மொத்தமாக அவற்றைத் தன்னிடத்தில் வாங்கிக் கொண்டுப் பின் புதிய சிஸ்டத்தில் அவற்றைச் சரியாகப் பதியும் வேலையை இந்த புரோகிராம் செய்கிறது. எத்தனை புரோகிராம்கள் இருந்தாலும் இதன் மூலம் மிக எளிதாக அவை அனைத்தையும் பதிந்துவிடலாம். எனவே தான் இது மிக அதிகமான எண்ணிக்கையில் டவுண்லோட் செய்யப்பட்டது.

தரவிறக்கம் செய்ய : இங்கே கிளிக் செய்யவும்

5. எக்ஸ்பி/விஸ்டாவில் விண்டோஸ் 7 ஷார்ட் கட்ஸ்

விண்டோஸ் 7 சிஸ்டம் வந்ததனால் ஏற்பட்ட இன்னொரு விளைவு இது. விண்டோஸ் 7 சிஸ்டம் தரும் ஷார்ட் கட் கீ தொகுப்புகள் ஏராளம். இதுவரை வந்த விண்டோஸ் சிஸ்டங்களில் உள்ள ஷார்ட் கட் கீகளைக் காட்டிலும் அதிகம். எனவே இவற்றைப் பயன்படுத்திப் பார்க்க விரும்பிய மக்களுக்காக இந்த புரோகிராம் வடிவமைத்துத் தரப்பட்டது. விண்டோஸ் 7 தரும் மிகச் சிறந்த ஷார்ட் கட் கீகளை, அதற்கு முன் வந்த விண்டோஸ் இயக்கங்களில் பயன்படுத்தும் வகையில் இந்த புரோகிராம் இயங்குகிறது.

தரவிறக்கம் செய்ய : இங்கே கிளிக் செய்யவும்

6. ஏவிஜி இலவச ஆண்ட்டி வைரஸ்

வைரஸ்கள் நாளுக்கு நாள் பலவகைகளில் பெருகியதால், கம்ப்யூட்டர் பயன்படுத்துபவர்கள் பலரும் நாடியது இலவச ஆண்ட்டி வைரஸ் புரோகிராம்களைத்தான். அந்த வகையில் அதிகம் டவுண்ட்லோட் ஆன புரோகிராம் ஏவிஜி 9 ப்ரீ புரோகிராம் . இதில் பல கூடுதல் வசதிகள் தரப்பட்டது இதன் சிறப்பாகும். அதிகம் பிரபலமான இலவச ஆண்ட்டி வைரஸ் இது.

தரவிறக்கம் செய்ய : இங்கே கிளிக் செய்யவும்

7. கூகுள் குரோம்

கூகுள் குரோம் பிரவுசர் வெளியாகி ஓராண்டு தான் ஆகியது. ஆனால் மிக அதிகமான எண்ணிக்கையில் டவுண்லோட் செய்யப்பட்ட பிரவுசராக இது தொடக்கத்தில் இருந்தே இடம் பெற்றது. இதனை டவுண்லோட் பயன்படுத்திப் பார்த்தவர்கள் இதன் வேகத்தைப் புகழ்ந்தனர். ஆனால் தொடர்ந்து பயன்படுத்தாமல் மீண்டும் பழைய பிரவுசருக்கே சென்றவர்கள் ஏராளம். இரண்டாம் பதிப்பு மே மாதமும், குரோம் 3 செப்டம்பரிலும் வெளியாகின.

தரவிறக்கம் செய்ய : இங்கே கிளிக் செய்யவும்

8. பயர்பாக்ஸ் ( Fire fox)

பிரவுசர் மார்க்கெட்டில் தொடர்ந்து நிலையாக மக்களைக் கவரும் பிரவுசராக பயர்பாக்ஸ் எடுத்து வருகிறது. இதன் பயர்பாக்ஸ் பதிப்பு 3.5, 2009 ஆம் ஆண்டில் பிரபலம் அடைந்தது. டவுண்லோட் செய்யப்பட்டதிலும் சாதனை படைத்தது. இதன் சார்பாக வெளியான ஆட் ஆன் தொகுப்புகள் இதன் இயக்கத்திற்கு வலு சேர்த்தன. அந்த வகையில் டவுண்லோட் செய்யப்பட்ட ஆட் ஆன் தொகுப்புகளும் அதிகம்.

தரவிறக்கம் செய்ய : இங்கே கிளிக் செய்யவும்

9. தண்டர்பேர்ட் 3 (Thunderbird 3)

மொஸில்லாவின் இன்னொரு மக்கள் அபிமான சாப்ட்வேர் இது. எளிமையான, பயன்படுத்த வேகமான இமெயில் கிளையண்ட் புரோகிராம் இது. இதன் பதிப்பு 3 அண்மையில் வெளியாகி அதிகமாக டவுண்லோட் செய்யப்பட்டு பயன்படுத்தப்பட்டு வருகிறது. இரண்டு ஆண்டுகளுக்கு முன்புதான் தண்டர்பேர்ட் பதிப்பு 2 வெளியானது. தற்போது வெளியாகியுள்ள பதிப்பு 3ல் பல புதிய வசதிகள் தரப்பட்டுள்ளன.

தரவிறக்கம் செய்ய : இங்கே கிளிக் செய்யவும்

10. கம்ப்யூட்டர் ரிப்பேர் கிட் (Computer Repair Kit)

கம்ப்யூட்டரில் ஏற்படும் பல்வேறு பிரச்சினைகளுக்குத் தீர்வு காண உதவும் புரோகிராம்களை இங்கு மொத்தமாக ஒரே புரோகிராமாகப் பெறலாம். இதன் பயன்தன்மை காரணமாகப் பலரால் டவுண்லோட் செய்யப்பட்டு பயன்படுத்தப்பட்டது.

தரவிறக்கம் செய்ய : இங்கே கிளிக் செய்யவும் அல்லது இங்கே கிளிக் செய்யவும்

கருத்துரையிடுக

7 கருத்துகள்

  1. tanx.
    but Computer Repair Kit is not available. do u have a online copy?

    பதிலளிநீக்கு
  2. when i click computer repair kit links, i unable to see the comupter repair kit. please send the correct link to us. thanks a lot.

    பதிலளிநீக்கு
  3. @ Anonymous


    please check links on posts or use the below link...

    http://www.megaupload.com/?d=E8PTG42A

    பதிலளிநீக்கு
  4. நன்றிகள் பல. மிகவும் பயனுள்ளதாய் இருந்தது.

    பதிலளிநீக்கு
  5. please check links on posts or use the below link...

    http://www.megaupload.com/?d=E8PTG42A

    downloaded........ thanks KarthiK

    பதிலளிநீக்கு