அடோப் பிளாஷ் பிளேயர் : புதிய பதிப்பு

அடோப் நிறுவனம் தன் பிளாஷ் பிளேயர் 9க்கான அப்டேட் 3, தன் இணைய தளத்தில் இலவசமாக இறக்கிப் பயன்படுத்த தயாராய் இருப்பதாக அறிவித்துள்ளது. இந்த புதிய அப்டேட் பைலில் H.264 என்னும் ஸ்டாண்டர்ட் வீடியோ சப்போர்ட் தரப்படுகிறது. இதனைத்தான் புளு ரே மற்றும் எச்.டி – டி.வி.டி. ஸ்டாண்டர்டாகப் பயன்படுத்துகின்றன. HEAAC ஆடியோ தொழில் நுட்பமும் இதனையே பயன்படுத்துகிறது. அனைத்து ஆப்பரேட்டிங் சிஸ்டங்களிலும் பிரவுசர்களிலும் அதிக ரெசல்யூசன் திறனுடன் காண இந்த அப்டேட் பைல் வழி தருகிறது.

இன்டர்நெட் டிவி காண்பதில் அடோப் பிளாஷ் தொழில் நுட்பம் பெரிதும் பயன்படுத்தப்பட்டு வருகிறது. அடோப் பிளாஷ் பிளேயர் மற்றும் அடோப் கிரியேட்டிவ் சூட் ஆகியவற்றில் H.264தொழில் நுட்பம் பயன்படுத்தப்படுவது, பல லட்சக்கணக்கான பிளாஷ் டெவலப்பர் களுக்குப் பெரிதும் உதவியாய் இருக்கும். மேலும் இப்போது இன்டர்நெட் வழியாக தங்களுக்குப் பிடித்த படங்களையும் வீடியோ காட்சிகளையும் பார்க்கும் பழக்கம் அனைத்து நாடுகளிலும் மக்களிடையே பரவி வருகிறது. அவர்களுக்கும் இந்த ஸ்டாண்டர்ட் தொழில் நுட்பம் இணைக்கப்பட்டிருப்பது மகிழ்ச்சியை த்தரலாம்.

அடோப் பிளாஷ் பிளேயர் 9 அப்ளிகேஷன் சாப்ட்வேர் விண்டோஸ், மேக் இன்டோஷ் மற்றும் லினக்ஸ் ஆப்பரேட்டிங் சிஸ்டங்களில் இயங்கும் வகையில் கிடைக்கிறது.

தரவிறக்கம் செய்ய : இங்கே கிளிக் செய்யவும்

கருத்துரையிடுக

0 கருத்துகள்