கூகுள் மியூசிக் சர்ச்

ஆன்லைனில் பாடல்களுக்கான ஸ்டோர்களைத் தொடங்கி நடத்துவதில் இப்போது கூகுள் நிறுவனமும் சேர்ந்துள்ளது. இதற்கென ஓர் ஒப்பந்தத்தை மேற்கொண்டுள்ளதாக கூகுள் அறிவித்துள்ளது.

லாலா டாட் காம் ( Lala.com) மற்றும் மை ஸ்பேஸ் தொடர்புடைய ஐ லைக் (iLike) நிறுவனங்களுடன் இந்த ஒப்பந்தம் உருவாக்கப்பட்டுள்ளது. ஆன்லைனில் பாடல்களைக் கேட்டு வாங்குவதற்கான வழிகளை இவை மிக எளிதாக மாற்றி அமைத்துள்ளன.

கூகுள் வழங்கும் இந்த மியூசிக் சேவை ஒன்பாக்ஸ் (One Box) என அழைக்கப்படுகிறது. இந்த தேடல் மூலம் முதலில் உங்களுக்குக் கிடைக்க இருக்கும் பாடல் நீங்கள் தேடும் பாடல் தானா என்பதனை, அதனை இயக்கிப் பார்த்து அறிந்து கொள்ளலாம்.

மற்ற தளங்கள் இது போன்ற சோதனையாக பாடலைக் கேட்பதை 30 வினாடிகள் என வரையறை செய்துள்ள நிலையில், கூகுள் அதிக நேரம் தருவது தன் வாடிக்கையாளர்களைத் தொடர்ந்து அனைத்து வழிகளிலும் தன்னிடத்தே வைத்துக் கொள்ளும் முயற்சிகளில் ஒன்றாக கூகுள் மேற்கொள்கிறது என்று கூறலாம்.

தள முகவரி : இங்கே கிளிக் செய்யவும்

கருத்துரையிடுக

0 கருத்துகள்