பயர்பாக்ஸ் 3.6 வெளியானது....!!!

பிரவுசர்களுக்கிடையேயான போட்டியில் தன் பயர்பாக்ஸ் நல்லதொரு இடத்தைப் பிடித்து வருவதனை மொஸில்லா நன்கு உணர்ந்துள்ளது. எனவே தான் எந்தவித ஆரவாரமும் ஆர்ப்பாட்டமும் இன்றி பல வசதிகளைத் தொடர்ந்து சேர்த்து வழங்கி வருகிறது.

பயர்பாக்ஸ் பிரவுசர் , பல புதிய வழிகளில் மேம்பாடு அடைய உள்ளது. மொஸில்லா தன் இணைய தளத்தில் இதனைத் தெரிவித்துள்ளது.இந்த மாற்றங்கள் இரண்டு நிலைகளில் ஏற்படுத்தப் படும். முதல் நிலை மாற்றங்கள் பயர்பாக்ஸ் பதிப்பு 3.7ல் இந்த ஆண்டின் நடுவில் தரப்படும். மற்ற மாற்றங்கள் அனைத்தும் பயர்பாக்ஸ் தொகுப்பு 4ல் ஏற்படுத்தப்படும்.

இந்தநிலையில் பயர் பாக்ஸின் புதிய பதிப்பான பயர்பாக்ஸ் 3.6 கடந்த்தவாரம் வெளியானது.சென்ற வாரம் வெளியா பயர்பாக்ஸ் 3.6 பதிப்பு , விண்டோஸ் 7 ஆப்பரேட்டிங் சிஸ்டம் தரும் சில புதிய வசதிகளுக்கு இணைந்து வடிவமைக்கப் பட்டுள்ளது. ஏரோ பீக், டாஸ்க்பார் தம்ப்நெயில் பிரிவியூ போன்றவற்றை இதற்கு எடுத்துக் காட்டுக்களாகக் கூறலாம். ஆனால் விண்டோஸ் 7 தரும் ஜம்ப் லிஸ்ட்டின் வசதிகள் பயர்பாக்ஸ் பதிப்பில் இல்லை.

குறிப்பாக இதனுடன் இயங்க முடியாமல் இருக்கும் சாப்ட்வேர் புரோகிராம்களால், பயர்பாக்ஸ் கிராஷ் ஆவது தடுக்கப்பட்டுள்ளது.பிரவுசரின் தோற்றத்தினை பயன்படுத்துபவர்கள் எளிதில் மாற்ற பெர்சனா என்ற டூலை மொஸில்லா வழங்கியது. இந்த தொகுப்பில் இன்னும் பல ஸ்கின்கள் தரப்பட்டுள்ளன. இப்போது பெர்சனாவில் ஒரே கிளிக் செய்வதன் மூலம் பயர்பாக்ஸ் தோற்றத்தினை மாற்றுவதற்கு வழி தரப்பட்டுள்ளது. வீடியோக்களை இயக்குகையில் முழு திரையிலும் பார்க்க வழி அமைக்கப்பட்டுள்ளது. இதனைப் பயன்படுத்து பவர்களுக்கு, பழசாகிப் போன, பயன்படுத்த முடியாத ப்ளக் இன் புரோகிராம்கள் குறித்த அறிவிப்பு வழங்கப்படுகிறது. ஆட் ஆன் தொகுப்புகள் புதிய பிரவுசர் தொகுப்பிற்கு ஏற்றவைதானா என்று அறிய ஆட் ஆன் கம்பாடிபிளிட்டி ரீடர் என்னும் புரோகிராம் டவுண்லோட் செய்து பயன்படுத்தும் வகையில் தரப்படுகிறது.

கம்ப்யூட்டரிலிருந்து பைலை பிரவுசரின் அட்ரஸ் பாரில் போட்டு திறக்க வழி செய்யப்பட்டுள்ளது.மொஸில்லா என்ன செய்ய வேண்டும் என்பதனை கூகுள் தந்த குரோம் பிரவுசர் சுட்டிக் காட்டியது. அதே போல குரோம் பிரவுசரில் இருந்த புதிய வசதிகளை பயர்பாக்ஸ் தரத் தொடங்கியது. பிரவுசர் யுத்தத்தில் பயர்பாக்ஸ், குரோம் பிரவுசரை எதிர் கொண்டாலும், ஓப்பன் சோர்ஸ் அமைப்பில் இரண்டும் ஒரே மாதிரியான செயல்பாட்டினையே மேற்கொண்டுள் ளன என்பது குறிப்பிடத்தக்கது. எச்.டி.எம்.எல். வசதியை புரோகிராமிங் மற்றும் டிஸ்பிளேவுக்கான வலிமையான சாதனமாகக் கொண்டு வருவதில் இரண்டும் செயல்படுகின்றன.
Notable Firefox 3.6 features include:

Available in more than 70 languages - get your local version.

Support for a new type of theme called Personas, which allow users to change

Firefox's appearance with a single click.

Protection from out-of-date plugins to keep users safer as they browse.

Open, native video can now be displayed full screen and supports poster frames.

Improved JavaScript performance, overall browser responsiveness, and startup time.

The ability for web developers to indicate that scripts should run asynchronously to speed up page load times.

Continued support for downloadable web fonts using the new WOFF font format.

Support for new CSS attributes such as gradients, background sizing, and pointer events.

Support for new DOM and HTML5 specifications including the Drag & Drop API and the File API, which allow for more interactive web pages.

Changes to how third-party software can integrate with Firefox in order to prevent crashes.
பயர்பாக்ஸ் 3.7 இந்த 2010 ஆம் ஆண்டின் நடுவிலும், பதிப்பு 4 அடுத்த ஆண்டிலும் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இவற்றில் அறிவிக்கப்பட்டதைக் காட்டிலும் கூடுதலாகப் புதிய வசதிகள் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தரவிறக்கம் செய்ய : இங்கே கிளிக் செய்யவும்

கருத்துரையிடுக

0 கருத்துகள்