மூன்று சர்ச் இஞ்சின்களில் ஒரே நேரத்தில் தேடலாம்

சர்ச் இஞ்சின்களில் கூகுள் மிக உயரத்தில், அதிக எண்ணிக்கையில் வாடிக்கையாளர்களுடன் இருந்தாலும், கூகுள், யாஹூ மற்றும் பிங் ஆகிய மூன்றுமே அதிகமாக தேடலில் பயன்படுத்தப்படுகின்றன. ஆனால் நீங்கள் இவற்றிலும் எது சிறந்தது? எது அதிக பயன்தருவது என்று கேள்வி கேட்டால் அதற்கான சரியான பதிலைத் தருவது சிரமம். ஆனால் இன்னொரு சர்ச் இஞ்சின் உள்ளது. அது இந்த மூன்று சர்ச் இஞ்சின்களிலும் தேடி, தேடலுக்கான விடைகளை மொத்தமாக சேர்த்துத் தருகிறது. அதன் பெயர் பிளைண்ட் சர்ச்.

இதில் ஒன்றைத் தேடக் கொடுத்தால் மூன்று பிரிவுகளாகத் தேடி, ஒரே திரையில், அடுத்தடுத்து வரிசையாக முடிவுகளைத் தருகிறது. எத்தனை விநாடிகளில் இந்த முடிவுகள் கிடைத்தன என்ற தகவல் மேலாகத் தரப்படுகிறது. ஆனால் எந்த முடிவு, எந்த சர்ச் இஞ்சினிலிருந்து பெறப்பட்டது என்று முதலில் காட்டப்படுவதில்லை.

நாம் ஏதேனும் ஒரு முடிவில் கர்சரைக் கொண்டு சென்று அழுத்தியவுடன் மூன்று சர்ச் இஞ்சினும் அவற்றின் பெயருடன் காட்டப்படுகின்றன. எது விரைவாகத் தேடித்தந்தது என அப்போது அறியலாம். நல்ல வேடிக்கையான, ஆனால் பயனுள்ள தேடலாகும்.

தள முகவரி : இங்கே கிளிக் செய்யவும்

கருத்துரையிடுக

2 கருத்துகள்