ஜி-மெயிலின் மூன்று வகைகள்

இன்று உலக அளவில் இமெயில் பயன்படுத்தும் அனைவரும் ஜிமெயிலில் அக்கவுண்ட் வைத்து பயன்படுத்தி வருகின்றனர். அதனை மட்டுமே நம்பி இருப்போர் பெரும்பாலான எண்ணிக்கையில் உள்ளனர். அதனை அவ்வளவாகப் பயன்படுத்தாதவர்களும், ஜிமெயில் அக்கவுண்ட் ஒன்றை வைத்து எப்போதாவது பயன்படுத்தி வருகின்றனர். எனவே ஜிமெயில் சர்வீசஸ் திடீரென முடங்கிப் போனால், கம்ப்யூட்டர் பயன்படுத்துவோர் பதறிப் போய்விடுவார்கள்; அது சரியாகிக் கிடைக்கும் வரை புலம்பித் தவித்துவிடுவார்கள். ஆனால் கூகுள் மெயிலை வேறு சில வழிகளிலும் பெறலாம் என்பதைப் பலர் அறிந்திருப்பதில்லை. இங்கு அந்த வழிகளைக் காணலாம்.

கூகுள் மெயில் மூன்று வழிகளில் இயங்குகிறது. அவை ஸ்டாண்டர்ட், எச்.டி.எம்.எல். மற்றும் மொபைல் (standard, HTML and mobile) ஸ்டாண்டர்ட் வகையில் எர்ரர் காட்டப்பட்டு பிரச்னை இருந்தாலும், மற்ற இரண்டு வகைகள் இயங்கிக் கொண்டு தான் இருக்கும். பெரும்பாலான நேரங்களில் ஸ்டாண்டர்ட் வகை தான் சிக்கலில் மாட்டிக் கொண்டு நமக்குக் கிடைக்காமல் இருக்கும். எனவே அந்த வேளைகளில் எப்படி மற்ற வகைகளில் ஜிமெயிலைப் பெறலாம் என்று பார்க்கலாம்.

முதலாவதாக எச்.டி.எம்.எல். வகையில் சென்று பெறுவது. இதற்கு நீங்கள் செல்ல வேண்டிய இணைய முகவரி http://mail.google.com/mail/?ui=html இது ஸ்டாண்டர்ட் வகைக்கு மாற்றானதாக இருக்கும். படங்கள் ஏதுமின்றி மிகவும் சாதாரணத் தோற்றத்தில் கிடைக்கும். இந்த இணைய முகவரியை உங்கள் புக்மார்க் / பேவரிட் தளப் பட்டியலில் வைத்துக் கொண்டால், ஸ்டாண்டர்ட் ஜிமெயில் பிரச்னைக் குள்ளாகுகையில் இதனைப் பயன்படுத்தலாம்.

இரண்டாவதாக, கூகுள் மெயிலின் மொபைல் பதிப்பை நாடுவது. இது நம் மொபைல் போன்களுக்கானது. இதனை உங்கள் பெர்சனல் கம்ப்யூட்டரிலும் பெறலாம். இதனைப் பெற உங்கள் பிரவுசரின் அட்ரஸ் பாரில் m.gmail.com என டைப் செய்திட வேண்டும். இதன் வடிவமும் எலும்புக் கூடு போலக் காட்சி அளிக்கும். ஆனால் இது டெக்ஸ்ட் மட்டுமே காட்டுவதால், விரைவில் உங்கள் மெயில்கள் கிடைக்கும். இதனைப் பார்த்து நீங்கள் அசௌகரியப்பட்டால், ஐபோனுக்கான கூகுள் மெயில் தளத்தினைப் பெறலாம்.

தளமுகவரி : இங்கே கிளிக் செய்யவும்

இறுதியாக நமக்குக் கிடைக்கும் ஐகூகுள் ( i Google) வசதி. நீங்கள் i Google பயன்படுத்தாதவராக இருந்தாலும் அதன் தளத்தின் மூலம் ஜிமெயில்களைப் பெறலாம். இன்னும் சொல்லப் போனால், ஐ கூகுள் தளத்தில் மூலம் நீங்கள் உங்கள் ஜிமெயில் இன்பாக்ஸ் முழுவதும் காண முடியும். ஜிமெயில் மட்டுமே பயன்படுத்தும் அனைவருக்கும் ஐ கூகுள் மிகச் சிறந்த தளமாகும்.

தள முகவரி : இங்கே கிளிக் செய்யவும்

மேலே காட்டப்பட்டுள்ள நான்கு வழிகளிலும் நீங்கள் உங்கள் ஜிமெயிலைப் பெறலாம். சரி, இந்த நான்கு வழிகளிலும் பெற முடியவில்லை என்றால் என்ன செய்வது? உங்கள் டெஸ்க் டாப் மெயில் கிளையண்ட் புரோகிராம்களை நாடவேண்டியதுதான். போன்ற இமெயில் கிளையண்ட் புரோகிராம்களும் நமக்கு இந்த வகையில் உதவிடும். ஜிமெயில் சர்வரை இந்த புரோகிராம்கள் அணுகி, மெயில்களைப் பெற நிச்சயம் உங்களுக்கு இது உதவும். இதற்கு எப்படி செட் செய்வது என்ற வழியை கீழே உள்ள முகவரியில் உள்ள கூகுள் தளம் உங்களுக்குப் படிப்படியாக விளக்கும். எனவே ஜிமெயில் என்றைக்கும் எப்போதும் கை கொடுக்கும் என்பதே இன்றைய நிலை.

தள முகவரி : இங்கே கிளிக் செய்யவும்

கருத்துரையிடுக

4 கருத்துகள்

  1. நண்பரே, என்னுடைய ஹர்ட் டிஸ்க் வைரஸ் காரணமாக பார்மெட் செய்தபோது சிஸ்டத்தில் இருந்த சில முக்கிய பைல்களும் பார்மட் ஆகிவிட்டது அதனை திருப்பி கொண்டுவர ஏதேனும் சாப்ட்வேர் இருக்கிறதா?

    பதிலளிநீக்கு
  2. நான் ஜிமெய்ல் தண்டர் பேர்ட் உடன் உபயோகிக்கிறேன். ஒரு சிறந்த அனுபவம். மற்றவர்களுக்கும் இதை பரிந்துரைக்கிறேன். இதன் மூலம் நீங்கள் மெயில் ஆஃப்லைன் இல் கூட உபயோகிக்க முடியும். நன்றி.

    பதிலளிநீக்கு
  3. @ 2009kr

    ஆம் நண்பரே... இதனைப்பற்றி ஏற்கனவே பலத்தடவைகள் எழுதியிருக்கிரேன்....

    http://www.honeytamilonline.co.cc/2009/06/blog-post_16.html

    http://www.honeytamilonline.co.cc/2009/08/blog-post_2931.html

    பதிலளிநீக்கு