யு–ட்யூப் இல் தரவிறக்கம் செய்ய இலகுவான வழி !!!

வீடியோ படங்களுக்கு யுட்யூப் ஓர் அருமையான தளம். நம் படங்களையும் அங்கு அப் லோட் செய்து உலகிற்குக் காட்டலாம். ஆனால் இவற்றை நாம் டவுண்லோட் செய்ய முடியாதபடி, யு ட்யூபில் இவை இடம் பெறுகின்றன. ஆனாலும் புரோகிராமர்கள், யு-ட்யூப் தளத்தில் உள்ள வீடியோ படங்களை டவுண்லோட் செய்திட பல புரோகிராம்களை இலவசமாகத் தந்து வருகின்றனர்.

கூகுள்
தேடல் தளம் சென்று "youtube video download" என டைப் செய்தால் போதும்; இந்த புரோகிராம்கள் கிடைக்கும் தளங்களின் பட்டியல் கிடைக்கும். இவற்றை இன்ஸ்டால் செய்து, வீடியோ படங்களை நம் கம்ப்யூட்டரில் காப்பி செய்து இயக்கலாம். ஆனால் இவற்றில் பலவற்றில் ஏதேனும் ஒரு சிக்கல் இருக்கும். 60 சதவீதம் படம் மட்டுமே வரும். முழுவதும் வேண்டும் என்றால் பணம் கட்டச் சொல்வார்கள். அல்லது விளம்பரங்கள் படத்தின் குறுக்கே ஓடும்.

இவை எதுவும் இன்றி மிக எளியமுறையில், கட்டுப்பாடு எதுவும் இன்றி, யு ட்யூப் படங்களை டவுண்லோட் செய்வதற்கான குறிப்பு ஒன்றினைக் காண நேர்ந்தது. அது மிக எளிதான தாகவும், சிக்கலற்றதாகவும் உள்ளது. நீங்கள் செய்ய வேண்டியதெல்லாம், எந்த யு–ட்யூப் தளத்திலிருந்து வீடியோ படம் வேண்டுமோ அங்கு செல்லவும். இயக்கிப் பார்த்து அது தான் உங்களுக்குத் தேவையா என உறுதி செய்து கொள்ளவும். இப்போது அதன் இன்டர்நெட் வெப்சைட் முகவரி விண்டோ செல்லவும். எடுத்துக் காட்டாக அந்த முகவரி கீழ்க்கண்ட படி இருப்பதாக வைத்துக் கொள்வோம்.


http://www.youtube.com/watch?v=CCiuMFXS0og

இதில் youtube என்ற சொல்லில் ‘y’ என்பதற்குப் பதிலாக 3 என டைப் செய்து என்டர் தட்டவும். முகவரி கீழ்க்கண்டபடி மாறும்.

http://www.3outube.com/watch?v=CCiuMFXS0og

அவ்வளவு தான்; நீங்கள் வேறு ஒரு டவுண்லோட் தளத்திற்கு எடுத்துச் செல்லப்படுவீர்கள். அங்கு இந்த வீடியோ படத்தை எந்த வகை பைல் வடிவில் வேண்டும் என ஒரு திரை கிடைக்கும். இதில் எம்பி4 அல்லது எப்.எல்.வி. என இரண்டு சாய்ஸ் இருக்கும். எது உங்களுக்குத் தேவையோ, அந்த ஆப்ஷனில் கிளிக் செய்தால் உடனே சில நிமிடத்தில் வீடியோ படம் டவுண்லோட் செய்யப்படும். பின் அந்த வீடியோவினை எப்போது வேண்டுமானாலும் இயக்கிப் பார்க்கலாம். இதில் என்ன வேடிக்கை என்றால், இந்த தள ரசிகர்களுக்கு பேஸ்புக்கில் ஒரு கிளப் உள்ளது. இங்கு நீங்கள் சேர்ந்து தகவல்களைப் பரிமாறிக் கொள்ளலாம்.

தள முகவரி : இங்கே கிளிக் செய்யவும்

கருத்துரையிடுக

6 கருத்துகள்

  1. http://www.youtube.com/watch?v=CCiuMFXS0og

    Type kiss front of youtube, like below
    http://www.kissyoutube.com/watch?v=CCiuMFXS0og

    If will display another page with download button.
    Your browser's javascript should enabled for this.

    - Kiri

    பதிலளிநீக்கு
  2. எதுக்கு சார் இவ்வளவு கஷ்டப்பட்றீங்க ? ஃபயர்ஃபாக்ஸ் ல போயி இந்த ஆட்டோன் போட்டுக்கொங்க. அவ்வளவு தான். உங்களுக்கு என்ன ஃபார்மட் வேணுமோ அந்த ஃபார்மட் கிளிக் பன்னாலே டவுண்லோட் ஸ்டார்ட் ஆயிடும்.

    https://addons.mozilla.org/en-US/firefox/addon/13990?src=api

    பதிலளிநீக்கு
  3. ithu ondumay theva illa enka poi unka firefoxila soruvi viddal pothum ....download all kind of video ...http://www.downloadhelper.net/

    பதிலளிநீக்கு
  4. http://video3gp.doremixy.com/

    Check this site,, Easy. Also download file size is very less and same quality..

    Try once

    பதிலளிநீக்கு