ஸ்டார்ட் அப் புரோகிராம்கள்

உங்கள் கம்ப்யூட்டர் வழக்கத்திற்கு மாறாக மெதுவாக இயங்குவதற்குப் பல காரணங்கள் உள்ளன. அவற்றில் ஒன்று, கம்ப்யூட்டர் ஸ்டார்ட் ஆகும் போது பல புரோகிராம்கள் இயக்கப்பட்டு, பின்னணியில் இயங்கி இருப்பதுதான். இந்த புரோகிராம்களை நீங்கள் இன்ஸ்டால் செய்திருக்கலாம்; அல்லது கம்ப்யூட்டரைத் தந்த நிறுவனம், தானே சில புரோகிராம்களை இன்ஸ்டால் செய்து அனுப்பியிருக்கலாம்.

எம்.எஸ்.கான்பிக் மூலம் தேவையற்றதை எல்லாம் நீக்கிவிட்டேனே என்று நீங்கள் கூறலாம். நீங்கள் அறியாமலேயே சில புரோகிராம்கள் ஸ்டார்ட் அப்பில் தொடங்கி ராம் மெமரியை நிரப்பலாம். நீங்கள் நீக்கிய சில புரோகிராம்கள், மீண்டும் ஸ்டார்ட் ஆகும் போது, இயங்கி பின்னணியில் இருக்கலாம்.

அப்படியானால் இதற்கு என்னதான் வழி என்று கேட்கிறீர்களா? ஸ்டார்ட் அப் ஆகும்போது என்ன என்ன புரோகிராம்கள் இயங்கி நிற்கின்றன என ஒன்றுவிடாமல் அறிய என்ன செய்யலாம்? என்று யோசிக்கிறீர்களா? WhatInStartup என்ற இலவச புரோகிராம் இதற்கானத் தீர்வினைத் தருகிறது. இதனை கீழே தந்துள்ள முகவரியில் உள்ள தளத்திலிருந்து இலவசமாக இறக்கி இன்ஸ்டால் செய்து கொள்ளலாம். மேற்படி தளத்திலிருந்து இது ஒரு ஸிப் பைலாகக் கிடைக்கிறது. இதனை விரித்துப் பதிந்து கொள்ளலாம்.

இதனை இயக்கினால் என்ன என்ன அப்ளிகேஷன் புரோகிராம்கள் ஸ்டார்ட் அப் சமயத்தில் இயங்கி நிற்கின்றன என்று பட்டியலிட்டு காட்டுகிறது. ஒவ்வொரு புரோகிராமும் இயங்கும் தன்மை, கட்டளை சொற்கள், புரோகிராமின் பெயர், பைல் உருவாக்கப்பட்ட நாள், மாற்றம் ஏற்படுத்தப்பட்ட நாள், அந்த புரோகிராம் குறித்து ரெஜிஸ்ட்ரியில் உள்ள வரிகள் ஆகியவை காட்டப்படுகின்றன. எனவே இந்த புரோகிராம்களை இயங்கும்படி வைக்கலாம்; தற்காலிகமாக நிறுத்தி வைக்கலாம்; மொத்தமாக நீக்கிவிடலாம்.

ஏற்கனவே அழித்த பைல், தற்போது மீண்டும் ஸ்டார்ட் அப்பில் இயங்கும் வகையில் உயிர்ப்பித்து வருகிறது என்றால், இந்த WhatInStartup மூலம் அதனை நிரந்தரமாக நீக்கிவிடலாம். இந்த புரோகிராமினை ஒரு யு.எஸ்.பி. பிளாஷ் டிரைவில் வைத்து இயக்கலாம். இந்த புரோகிராம் கிடைக்கும் தளத்தில் எப்படி பிளாஷ் டிரைவில் வைத்து இயக்கலாம் என்பதற்கான குறிப்புகள் தரப்பட்டுள்ளன.

தரவிறக்கம் செய்ய : இங்கே கிளிக் செய்யவும்

கருத்துரையிடுக

2 கருத்துகள்

  1. நண்பரே வணக்கம் ,ஒரு சின்ன யோசனை கூறுங்களேன் .நான் ஒரு lcd t.v வாங்கநினைக்கிறன் 42inch L.G OR SONY இதில் எது நல்ல இருக்கும் விபரம் தெரிந்த நீங்கள் கூறுங்களேன்.
    -- my blog is hamaragana/blogspot.com

    பதிலளிநீக்கு
  2. @ s.n.ganapathi

    வண‌க்கம் நண்பரே , முதலில் எனது கருத்தை கூறிவிடுகிரேன். நான் வாங்குவதாக இருந்த்தால் Sony தான் முதலாவதாக இருக்கும்.

    நான் உங்களுக்கு ஒரு இலகுவான வழி சொல்கிறேன். கீழே உள்ள தளம் இரண்டு டி.விக்களை ஒப்பிட்டு பார்ப்பதற்கு சிரந்த தளம். அங்கே சென்று உங்கள் இரண்டு தெரிவுகளையும் ஒப்பிட்டுபாருங்கள். ஒவ்வொரு டி.வியிலும் உள்ள வசதிகள் புதிய விடயங்களை ஒப்பிட்டு பார்த்து வாங்கிகொள்ளலாம்.

    http://www.plasma-lcd-crt.com/compares

    பதிலளிநீக்கு