TopBottom

ஸ்டார்ட் அப் டிலேயர் (Startup Delayer)

எழுதியவர் : Karthikan Karunakaran 12 February 2010

விண்டோஸ் , என்னதான் வேகமாக இயங்கும் ஆப்பரேட்டிங் சிஸ்டமாக இருந்தாலும், சில வேலைகளை மேற்கொள்கையில் தொடர்ந்து எந்த மாற்றமும் இன்றி அதே பாணியில் தான் இயங்கும். எடுத்துக் காட்டாக வெல்கம் ஸ்கிரீன், ஸ்டார்ட் அப் புரோகிராம்களைக் கொண்டு வருதல், சிஸ்டம் ஷட் டவுண் செய்தல் ஆகியவற்றைக் கூறலாம்.

இந்த வேலைகளில் சிஸ்டம் பைல்களைக் கட்டுப்பாட்டில் கொண்டு வந்து வேகம் தரும் சில புரோகிராம்கள் இணையத்தில் கிடைக்கின்றன.

அடிக்கடி புரோகிராம்களை இன்ஸ்டால் செய்கையில், பல வேளைகளில் என்ன செய்கிறோம் என்று அறியாமல், அவற்றை ஸ்டார்ட் அப் லிஸ்ட்டில் வைத்து விடுகிறோம். இதனால் ஸ்டார்ட் அப் புரோகிராம் எண்ணிக்கை அதிகமாகிறது. விண்டோஸ் இயக்கம் நிலைக்கு வர நேரமாகிறது. ஸ்டார்ட் அப் டிலேயர் என்னும் இந்த புரோகிராம், ஸ்டார்ட் அப் லிஸ்ட்டில் உள்ள புரோகிராம்களை, ""நீங்கள் எல்லாம் கொஞ்சம் பொறுமையா இருங்க, அப்புறமா வாங்க'' என்று சொல்லி விண்டோஸ் இயக்கத்தினை அமல்படுத்து கிறது. இதனால் உங்கள் பெர்சனல் கம்ப்யூட்டர் வேகமாக இயங்கி மேலும் பணிகளை எடுத்துக் கொள்ள தயாராகிறது. இந்த நிலை வந்த பின்னர், ஸ்டார்ட் அப் புரோகிராம்கள் ஏற்றப்படும்.

ஸ்டார்ட் அப் டிலேயரை இன்ஸ்டால் செய்து இயக்கியவுடன், உங்கள் சிஸ்டத்தில் உள்ள அனைத்து ஸ்டார்ட் அப் புரோகிராம்கள் அனைத்தையும் இது பட்டியலிட்டுக் காட்டுகிறது. இவற்றில் எதனை எல்லாம் தாமதமாகக் கொண்டு வரலாம் என்று கருதுகிறீர்களோ, அவற்றை இழுத்து வந்து கீழாக உள்ள வெள்ளை பாரில் விட்டுவிட வேண்டும். குறிப்பிட்ட அப்ளிகேஷனைக் காட்டும் கோடு ஒன்று அங்கு காணப்படும். தாமதம் அதிகமாக இருக்க வேண்டுமா அல்லது குறைவாக இருக்க வேண்டுமா என முடிவு செய்து, அதற்கேற்ப அந்த கோட்டை இழுத்துவிடலாம்.இது விண்டோஸ் 7 தொகுப்பிலும் இயங்கும்.

தரவிறக்கம் செய்ய : இங்கே கிளிக் செய்யவும்

1 Comment

  1. உங்கள் ஆக்கங்களை தொடர்ந்து வழங்குவதில் உங்களுக்கு நிகர் நீங்களே!. நன்றி

     
  2. Reply To This Comment
:a   :b   :c   :d   :e   :f   :g   :h   :i   :j   :k   :l   :m   :n   :o   :p   :q   :r   :s   :t

About Me

My Photo
Karthikan Karunakaran
View my complete profile

Twitter

    Twitter Updates

      follow me on Twitter

      Recent Comments