பைல்களை வேகமாக காப்பி செய்ய டெரா காப்பி (TeraCopy)

பெரிய பைல்களைக் காப்பி செய்திடுகையில் விண்டோஸ் சில வேளைகளில் இடையே நின்றுவிடும். பைல்கள் அடங்கிய முழு போல்டர்களைக் காப்பி செய்திடுகையில் இந்த பிரச்னை ஏற்பட்டால் எந்த பைல் வரை சரியாகக் காப்பி ஆனது என்று தெரியாது. இந்தக் குறையை நீக்கவும், காப்பி செய்வதனை எளிதாகவும் விரைவாகவும் அமைக்க டெரா காப்பி (TeraCopy) புரோகிராம் உள்ளது.

இதனை கீழே உள்ள தளத்திலிருந்து தரவிறக்கம் செய்து உங்கள் கம்ப்யூட்டரில் பதிந்து கொள்ளவும். அதன்பின் நீங்கள் எப்போது காப்பி மற்றும் பேஸ்ட் செய்கிறீர்களோ, அப்போதெல்லாம் இது தானாக இயங்க ஆரம்பிக்கும். இது காப்பி வேலையை மிக எளிதாகவும் வேகமாகவும் மேற்கொள்ளும். ஒரு பைலைக் காப்பி செய்கையில் இடையே நிறுத்திப் பின் மீண்டும் தொடரலாம். பல பைல்களைக் காப்பி செய்திடக் கட்டளை கொடுத்து, காப்பி செய்திடுகையில் ஒரு பைலைக் காப்பி செய்வதில் பிரச்னை ஏற்பட்டால், அதனை விடுத்து அடுத்த பைலுக்குச் செல்லும். பிரச்னை ஏற்பட்ட பைலைக் காட்டும். பின் பிரச்னையைச் சரி செய்து காப்பியைத் தொடரலாம்.

ஒரு பைலைத் தேர்ந்தெடுத்து ரைட் கிளிக் செய்தால் ஏற்படும் மெனுவில் டெரா காப்பி என்றொரு வரியும் ஆப்ஷனாகத் தென்படும். இதனுடன் வழக்கமான காப்பி பிரிவும் கிடைக்கும். இந்த டெரா காப்பி தேவை இல்லை என்றால் உடனே அதனை அன் இன்ஸ்டால் செய்துவிடலாம்.

தரவிறக்கம் செய்ய : இங்கே கிளிக் செய்யவும்

கருத்துரையிடுக

2 கருத்துகள்