ஆப்பிள் சபாரி பதிப்பு 5

ஆப்பிள் நிறுவனம் தன்னுடைய சபாரி பிரவுசரின் பதிப்பு 5 னை அண்மையில் வெளியிட்டுள்ளது. விண்டோஸ் மற்றும் மேக் சிஸ்டங்களுக்கான பதிப்புகள் வெளியாகியுள்ளன. எந்தவிதமான முன் அறிவிப்பும் இன்றி இது வந்துள்ளது. இதில் தரப்பட்டுள்ள புதிய சிறப்புகளைப் பார்க்கலாம்.

சபாரி ரீடர்

இந்த புதிய பதிப்பில் விளம்பரங்கள் நீக்கப்பட்டுள்ளன. இணைய தளங்கள் தரும் தேவையற்ற பாப் அப்கள்விலக்கப்படுகின்றன. இணைய தளங்களைப் பார்வையிடுகையில் ரீடர் பட்டன் என்பதனை அழுத்தி விட்டால், மேலே சொன்னபடி நாம் எந்த இடையூறும் இன்றிப் பார்க்கலாம்.

எச்.டி.எம்.எல். சப்போர்ட்

எச்.டி.எம்.எல்.5 ஜியோ லொகேஷன் உட்பட பல எச்.டி.எம்.எல். 5 சார்ந்த தொழில் நுட்பங்களை, இந்த பிரவுசர் சப்போர்ட் செய்கிறது.

அதிக வேகம்

இந்த பிரவுசரில் நிட்ரோ இஞ்சின் பயன்படுத்தப்படுகிறது. இதனால் இதுவரை உள்ள பிரவுசிங் வேகத்தைக் காட்டிலும் இது கூடுதல் வேகம் கொண்டதாக உள்ளது. ஓர் இணைய தளத்தில் உள்ள லிங்க்குகளுக்கான, இணைய முகவரிகளைக் கண்டு தளங்களை மிக வேகமாகத் தருகிறது.

பிங் சர்ச்

ஐ போனில் உள்ளதைப் போல, சபாரியில் பிங் சர்ச் பார் இணைக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே உள்ள யாஹூ மற்றும் கூகுள் உடன் இவை தரப்பட்டுள்ளன.

சபாரி பிரவுசர் இயக்க, விண்டோஸ் எக்ஸ்பி (எஸ்.பி.2) குறைந்த பட்சம் தேவை. மெமரி 250 எம்பியாவது இருக்க வேண்டும். ப்ராசசர் குறைந்தது 500 மெஹா ஹெர்ட்ஸ் வேகத்தில் இயங்க வேண்டும். மேக் சிஸ்டத்தில் இயங்க Mac OS X Leopard 10.5.8 அல்லது Mac OS X Snow Leopard® 10.6.2 தேவை.

ஆப்பிள் நிறுவனம் இந்த பிரவுசர் தான் அதிக வேகத்தில் இயங்கும் முதன்மை பிரவுசர் என்று அறிவித்துள்ளது. இந்த பிரவுசரை மேக் கம்ப்யூட்டரில் பயன்படுத்தி, அதன் மூலம் இந்த தகவலைத் தந்துள்ளது ஆப்பிள் நிறுவனம். விண்டோஸ் இயக்கத்தில் இதனை இயக்கி, கிடைத்த வேக முடிவுகளை ஆப்பிள் தந்திருந்தால், இதனை ஏற்றுக் கொள்ளலாம் எனப் பலரும் கருத்து தெரிவித்துள்ளனர்.

தரவிறக்கம் செய்ய : இங்கே கிளிக் செய்யவும்

கருத்துரையிடுக

2 கருத்துகள்

  1. ஐயா வணக்கம், தங்களின் வலைப்பூ பயன்மிக்க பல தகவல்களை செறிந்து தருவதால், தங்களின் வலைத்தளத்தை தமிழி திரட்டியில் இணைத்துள்ளோம். இதனால் பலவாறு தமிழ் வாசகர்கள் தங்களின் வலைத்தளத்தை படித்து பயனுறுவர். தங்களின் வலைத்தள இணைப்பினால் அறிவு சொத்துரிமை மீறல் இருப்பின் தயைகூர்ந்து எமக்கு அறியத்தரவும். மேன்மேலும் தமிழில் எழுதி தமிழுக்கும், தமிழ் மக்களுக்கும் பயன் தர எமது வாழ்த்துக்கள்.
    நன்றி
    தமிழி நிர்வாகம் , கனடா

    பதிலளிநீக்கு
  2. ஐயா வணக்கம், தங்களின் வலைப்பூ பயன்மிக்க பல தகவல்களை செறிந்து தருவதால், தங்களின் வலைத்தளத்தை தமிழி திரட்டியில் இணைத்துள்ளோம். இதனால் பலவாறு தமிழ் வாசகர்கள் தங்களின் வலைத்தளத்தை படித்து பயனுறுவர். தங்களின் வலைத்தள இணைப்பினால் அறிவு சொத்துரிமை மீறல் இருப்பின் தயைகூர்ந்து எமக்கு அறியத்தரவும். மேன்மேலும் தமிழில் எழுதி தமிழுக்கும், தமிழ் மக்களுக்கும் பயன் தர எமது வாழ்த்துக்கள்.
    நன்றி
    தமிழி நிர்வாகம் , கனடா

    பதிலளிநீக்கு