TopBottom

thumbs.db என்றால் என்ன ?

எழுதியவர் : Unknown 24 February 2009

இதை கணணி பயன்படுத்துபவர்கள் ஒருதடவையேனும் உங்கள் கணனியில் கண்டிருப்பீர்கள். கம்ப்யூட்டரில் thumbs.db என்ற பைல் உள்ளதே, அழித்தாலும் போக மாட்டேன்கிறது, இது என்ன வைரஸா, இல்லை ஸ்பைவேரா? என்று குழம்பியிருப்பீர்கள்.

இரண்டும் இல்லை, விண்டோஸ் எக்ஸ்பி, விண்டோஸ் 2000 (SP4) விண்டோஸ் 2003 இவைகளில் சில டைரக்டரிகளில் இந்த பைல் தென்படும். இது அந்தந்த போல்டர்களில் படங்கள் இருந்தால் அதனை தம்ப்நெயிலாக(Thumbnail) கேச் செய்து வைத்து கொள்வதற்காக உருவாக்கப்பட்டவை.

இதன் மூலம் விண்டோஸ் அந்த போல்டரில் உள்ள பைலின் தம்ப்நெயில் வியூவை எக்ஸ்புளோரரில் ஒவ்வொருமுறையும் அந்த பைலை படித்து பின் காட்டுவதற்கு பதிலாக இந்த பைல் முலம் உடனே காட்டுகிறது. விஸ்டாவில் இப்படி தனித்தனியாக அந்தந்த போல்டரில் இல்லாமல் மொத்தமாக ஒரே பைலாக சிஸ்டம் போல்டரில் சேமித்து வைக்கப்படுகிறது.

இந்த பைலின் ஒரே பிரச்சினை வன்தட்டில் சிறிது இடத்தை எடுத்து கொள்வதே. இது மிகச்சிறிய அளவே ஆனாலும், நிறைய போல்டர்களில் இருப்பதை கணக்கிட்டால் ஒரளவு இடம் எடுத்திருப்பது தெரியவரும். இதனை குறைந்த வன்தட்டு இடம் கொண்டிருப்பவர்கள் நீக்க நினைத்தால் கீழே உள்ளதை செய்து பாருங்கள்.

முதலில் thumbs.db வருவதை தடுக்க

1) மை கம்ப்யூட்டடை கிளிக் செய்து அதில்

2) டூல்ஸ் என்பதை மெனுவில் தேர்ந்தெடுத்து

3) அதில் போல்டர் ஆப்சன் என்பதை சொடுக்கி

4) அதில் வியூ டேப் என்பதில்

5) "Do not cache thumbnails" என்பதை செக் செய்ய வேண்டும்.


6) பின்னர் ஒ.கே கொடுத்து

7) மை கம்ப்யூட்டரை கிளிக் செய்ய வேண்டும்.

ஏற்கெனவே உருவாக்கப்ப்ட்ட அனைத்தையும் நீக்க

1) ஸ்டார்ட் மெனு சென்று

2) அங்கு உள்ள சேர்ச் என்பதை கிளிக் செய்து

3) பின்வருவதில் All Files and Folders என்பதை தெரிவு செய்து

4) "all or part of the file name" என்பதில் thumbs.db என்று டைப் செய்து


5) Look in box, ல் Local Hard Drives என்பதை தேர்வு செய்ய வேண்டும்.

6) தேடலை ஆரம்பித்த பின் ஒரு பெரிய லிஸ்ட் வரும்

7) எடிட் மெனுவில் உள்ள செலக்ட் ஆல் பைல் என்பதை கிளிக் செய்து

8) பின்னர் பைல் என்பதில் டெலிட் கமண்ட்டை அழுத்தி, எல்லாவற்றையும் நீக்க வேண்டும்.

9) பின்னர் சேர்ச் விண்டோவை மூடி விடலாம்.

ஏதாவது தவறுகள் இருந்தால் பின்னூட்டத்தில் தெரிவிக்கவும். இந்தப்பதிவைப் பற்றிய உங்கள் கருத்தையும் பதிந்து செல்லுங்கள்.

17 Comments

 1. நல்ல பயனுள்ள தகவல்கள். பாராட்டுகள் !

   
 2. Reply To This Comment
 3. Anonymous Says,

  Thank U Very much...!!!

   
 4. Reply To This Comment
 5. தாங்கள் கூறியது போலவே செய்து பர்த்தேன், ஆனால் சர்ச்சில் வந்த பைல்கள் அழியவில்லை.

   
 6. Reply To This Comment
 7. தாங்கள் கூறியது போலவே செய்து பர்த்தேன், ஆனால் சர்ச்சில் வந்த பைல்கள் அழியவில்லை

   
 8. Reply To This Comment
 9. @ ajithsivaraja

  ஏன் Right Click செய்து delete செய்யவேண்டியதுதானே.மீண்டும் வராமலிருக்க முதாலாவது வழிமுறையை செய்யலாம். :)

   
 10. Reply To This Comment
 11. @ Anonymous

  @ கோவி.கண்ணன்

  தங்கள் கருத்துக்கு மிக்க நன்றி

   
 12. Reply To This Comment
 13. மிகவும் நல்ல பதிவு. எனக்கு சமீபத்தில் இந்தப் பிரச்சினை வந்தது. அதிகமான கொள்ளளவினை இந்தக் கோப்புக்கள் எடுத்துக்கொண்டிருந்தன. புதிதாக எதையும் சேமிக்கக் கணனி இடம்தரவில்லை. தேடித் தேடி அழித்தபின்னர் சரியானது.

  தொடரட்டும் உங்கள் சேவை !

   
 14. Reply To This Comment
 15. Anonymous Says,

  http://us.i1.yimg.com/us.yimg.com/i/mesg/emoticons7/77.gif

  thanxx for ur info

   
 16. Reply To This Comment
 17. Anonymous Says,

  நண்பரே,
  இந்த பதிவு இந்த வாரம் யூத் ஃபுல் விகடனில் குறிப்பிடபட்டுல்லது.
  வாழித்துக்கள்.

  விவேக்

   
 18. Reply To This Comment
 19. thanks vivek...!

   
 20. Reply To This Comment
 21. Prasad Says,

  பயனுள்ள செய்தி. பகிர்ந்து கொண்டதற்க்கு நன்றி.

   
 22. Reply To This Comment
 23. Prasad Says,

  பயனுள்ள செய்தி. பகிர்ந்து கொண்டதற்க்கு நன்றி.

   
 24. Reply To This Comment
 25. Logi Says,

  மிகவும் நல்ல பதிவு

   
 26. Reply To This Comment
 27. டெலிட் பண்ண முயற்சிக்கும்போது என் கணினியில் "டோய்ங்" என்ற சத்தத்துடன் கீழ்க்கண்ட வரிகளுடன் ஒரு பாப் அப் செய்தி வருகிறது :-)


  Cannot delete file : Cannot read from the source file or disk


  ரொம்ப நாளாகவே இந்த "Thumbs.db" கொசு தொல்லை தாங்க முடியல ..ஹெல்ப் ப்ளீஸ் !

   
 28. Reply To This Comment
 29. SUBBU Says,

  :-t அருமை ;))

   
 30. Reply To This Comment
 31. @ யூர்கன் க்ருகியர்.....

  ஆம். இந்த இரண்டு மென்பொருட்களில் ஏதாவது ஒன்றைப் பயன்படுத்தி அவற்றை அழியுங்கள். இரண்டில் ஏதாவது ஒன்றில் அவை கட்டாயம் அழியும்.

  1. Trend Micro™ HijackThis™

  2. ADS Spy

   
 32. Reply To This Comment
 33. Anonymous Says,

  Thanks Karthik for sharing the info...

   
 34. Reply To This Comment
:a   :b   :c   :d   :e   :f   :g   :h   :i   :j   :k   :l   :m   :n   :o   :p   :q   :r   :s   :t

Twitter

  Twitter Updates

   follow me on Twitter

   Recent Comments