நமக்கு உயிரைக் கொடுத்ததோடு மட்டும் அல்லாமல், நம்மை உயிருக்குயிராய் வளர்க்கும் நமது அன்னையை, இந்த அன்னையர் தினத்தில் கொண்டாட வேண்டாமா?
வருடம் முழுவதும் நமக்காக உழைக்கும் அம்மாவுக்கு அன்னையர் தினத்தன்று ஓய்வு கொடுக்கலாமே!
ஒரு நாளாவது அம்மாவுக்கு முன் எழுந்து, அம்மா காலையில் எழுந்து செய்ய வேண்டிய வேலைகள், அதாவது வாசலில் கோலம் போடுதல், பால் காய்ச்சுதல் போன்றவற்றை செய்துவிட்டு அம்மாவை பூக்களோடு அல்லது பரிசுப் பொருளோடு எழுப்புங்கள்.
"வேண்டாம், வேண்டாம்", என்று அம்மா சொல்லச் சொல்ல, அவரை உட்கார வைத்து விட்டு வேலைகளை செய்யலாம். அவர் மிகவும் விரும்பும் உணவை சமைத்து பரிமாறலாம்.
சமைக்க முடியவில்லை என்றாலும் கவலை இல்லை. அவரை இரவு உணவுக்கு வெளியே அழைத்துச் சென்று அல்லது அவர் விரும்பி உண்ணும் உணவுகளை வரவழைத்து அவரை மகிழ்ச்சிக்குள்ளாக்கலாம்.
இன்று அம்மாவுக்கு பரிசாக அவர் விரும்பும் ஒன்றை அளித்து மகிழலாம்.
எந்த பரிசை கொடுக்கலாம் என்ற குழப்பமா? உங்களுக்காக சில ஆலோசனைகள்.
அன்னையர் தினத்தைக் கொண்டாட அதிகமாக செலவழிக்க வேண்டும் என்றில்லை. அம்மா பார்ப்பது உங்கள் அன்பைத்தான் நீங்கள் எவ்வளவு செலவு செய்தீர்கள் என்பதல்ல.
பூக்கள் : பூக்களை விட சிறந்த அன்பின் சின்னம் வேறேதுமில்லை! பூக்களே உங்கள் பரிசாக இருக்கலாம். அல்லது உங்கள் பரிசோடு சேர்த்து பூக்களையும் தரலாம்.
அம்மாவின் விருப்பம் : வெகு நாட்களாக அம்மா ஏதாவது ஒரு பொருளை வாங்க வேண்டும் என்று நினைத்துக் கொண்டே இருக்கிறாரா? உங்களால் முடிந்தால் அதை வாங்கித் தரலாமே!
வாசனைப் பொருட்கள் : எவ்வளவு இருந்தாலும் வாசனை பொருட்கள் பெற அனைவரும் விரும்புவர். நல்ல வாசனைப் பொருட்களின் விலை ரூபாய் ஐம்பதிலிருந்து ஆரம்பிக்கின்றது.
வீட்டிற்கு தேவையானவை : அம்மா விரும்பும் வீட்டிற்கு தேவையான மின் சாதனம், அலங்காரப் பொருள் போன்றவற்றை பரிசாகத் தரலாம். இவ்வாறு கொடுக்கும் போது அம்மாவுக்கு மட்டும் என்று பூக்கள், வாழ்த்து அட்டை ஆகியவற்றையும் சேர்த்து தருவது முக்கியமாகும்.
உடைகள் : அன்னையர் தினத்தன்று அணிந்து மகிழ அம்மா விரும்பும் நிறத்தில் அவருக்கு ஒரு அழகான புடவை, சல்வார் கமீஸ் என்று ஒரு உடையை பரிசளிக்கலாம்.
நகைகள் : அம்மாவுக்கு ஒரு அழகான நகை வாங்கியும் அவரை அசத்தலாம். அது தங்க நகையாகத்தான் இருக்க வேண்டும் என்றில்லை, குறைந்த விலையில் கண்ணை கவரும் பலவகையான நகைகள் இப்போது கடைகளில் கிடைக்கின்றன.
வாழ்த்து அட்டைகள் : எந்த பரிசு தந்தாலும் உங்கள் எண்ணங்களை வெளிப்படுத்த உதவுவது ஒரு வாழ்த்து அட்டை தான். தனியாகவும் அல்லது பரிசோடும் கொடுக்கலாம்.
வெகு நாட்களாக அம்மா பார்க்க விரும்பும் சினிமாவுக்கு அல்லது போக வேண்டும் என்று விரும்பிய கோயிலுக்கு அழைத்துச் செல்லலாம்.
மேலே உள்ளவற்றை செய்வதற்கு அப்பாவின் உதவியை தவறாமல் பெற்றுக் கொள்ளவும்! நீங்கள் என்ன செய்யலாம் என்று திட்டமிட்டுள்ளீர்கள் என்பது குறித்து அப்பாவிடம் தெரிவித்து விடவும். அவரிடமும் யோசனைப் பெறலாம்.

1 கருத்துகள்
புட்டி பால் கொடுக்கும் அன்னையரை வெறுப்போம்
பதிலளிநீக்கு