Blogger Widget: அதிகம் பின்னூட்டமிட்டவர்களை உங்கள் வலைப்பூவில் காண்பித்தல்.

நாம் சிலருடைய வலைப்பூக்களுக்கு செல்லும் போது தங்கள் வலைப்பூவில் அதிகம் பின்னூட்டமிட்டவர்களை வரிசைப்படுத்தி சைட்பாரில் (Sidebar) இல் காண்பித்திருப்பார்கள். இதை அதிகமாக வோர்ட்பிரஸ் இல் எழுதுபவர்களே பயன்படுத்துவார்கள். இதை பிளாக்கர் இல எழுதுபவர்களும் பயன்படுத்தும்படி மாற்றியமைத்திருக்கிறேன்.

இதை பயன்படுத்துவதால் என்ன பயன் என்றால் , இதன்மூலம் உங்கள் வலைப்பூவுக்கு யார் அதிகம் கருத்துரையிட்டிருக்கிறார்கள் ,எத்தனை பின்னூட்டம் எழுதியிருக்கிறார்கள் என்று அறித்துகொள்ளலாம். இந்த விட்ஜெட் உங்கள் வலைப்பூவின் முன்பக்கத்தில் காண்பிப்பதால் அவர்களின் வலைப்பூவுக்கும் லிங்க் கொடுத்தமாதிரி இருக்கும் இதானால் அவர்களையும் வாசகர்கள் எளிதில் இனங்காண கூடியதாக இருக்கும்.

1.முதலில் உங்கள் பிளாக்கர் கணக்கினுள் உள்நுழையுங்கள்.

2. Layout என்பதை கிளிக் செய்யுங்கள்.

3.Page Elements என்பதில் எந்த இடத்தில் விட்ஜெட் கான்பிக்கப்போகிறீர்களோ அந்த இடத்தில் add a Gadget என்பதை கிளிக் செய்யுங்கள்.

4.அடுத்ததாக HTML/JavaScript கிளிக் செய்யவும்.

5. புதிதாக தோன்றும் பெட்டியில் கீழுள்ள ஜாவாஸ்கிரிப்ட் கோட்களை சேர்க்கவும் .

மேலே உள்ள கோட்களில் பின்வருவனவற்றை மாற்றியமைக்கவும்.

• filter=nickname : இதில் உங்கள் பிளாக்கர் Profile இல் நீங்கள் பயன்படுத்தும் பெயரை nickname என்ற இடத்தில் மாற்றியமைக்கவும்.
• BlogName.blogspot.com : இதில் உங்களுடைய வலைபூவினுடைய முகவரியை மாற்றவும்.
• num=10 : இதில் உங்களுக்கு எத்தனைபேருடைய பெயர்கள் தெரிய வேண்டுமோ விரும்பியபடி மாற்றிக்கொள்ளலாம்.
சிவப்பு நிறத்தில் காட்டப்பட்டவையை மாத்திரமே மாற்றவும்.

6. save செய்து சரிபார்த்துக்கொள்ளவும்.

மேலே உள்ள கோட்கள் வேலைசெய்யவிட்டால கீழே உள்ள கோட்களை பயன்படுத்திப்பார்க்கவும். இவையே இறுதியாக திருத்தியமைக்கப்பட்டவையாகும்

மேலே சிவப்பு நிறத்தில் காட்டப்பட்ட இடத்தில் மட்டும் உங்கள் வலைப்பூவின் முகவரியை இடவும். உதாரணமாக www.honey-tamil.blogspot.com என்று உங்களுடைய முகவரி இருந்தால்...... honey-tamil.blogspot.com என்று மாத்திரமே மாற்றவும்.

இந்த்தப்பதிவு உங்களுக்கு உதவியானதாக இருந்தால் உங்கள் கருத்துரையை இடவும் .ஏதாவது பிரச்சினை இருந்ததாலும் தெரிவிக்கவும்....

கருத்துரையிடுக

19 கருத்துகள்

1. என்னுடைய பதிவில் வேலை செய்யவில்லை ஸார்..

http%3A%2F%2FBlogName.blogspot.com&num=10" - இதில் பிளாக்நேமை டெலீட் செய்துவிட்டு எனது பதிவின் முகவரியைக் கொடுத்தேன். http:// என்று கொடுத்தும், கொடுக்காமலும் முயற்சி செய்தேன். பின்பு பிளாக் நேமிற்கு முன்பாக உள்ள F என்கிற வார்த்தையிலிருந்து ஒரு ஸ்பேஸ் தள்ளியும் வைத்துப் பார்த்தேன். அப்படியும் வரவில்லை. தளம் விரிந்தாலும் அந்த இடம் காலியாகத்தான் இருந்தது..

என்ன செய்ய..?

பதிலளிநீக்கு
2. o http://us.i1.yimg.com/us.yimg.com/i/mesg/emoticons7/77.gifhttp://us.i1.yimg.com/us.yimg.com/i/mesg/emoticons7/21.gif

பதிலளிநீக்கு
3. @உண்மைத் தமிழன்(15270788164745573644)

http:// போன்ற ஒன்றுமே கொடுக்க தேவையில்லை.
Blog Name என்று உள்ள இடத்தில் மட்டும் மாற்றியமைக்கவும்.
உதாரணமாக‌ http://truetamilans.blogspot.com/ என்று உங்கள் வலைப்பூவின் முகவரி இருந்த்தால்
BlogName என்பதை மட்டும் அழித்துவிட்டு truetamilans என்று மாற்றிக்கொள்ளவும்.

பதிலளிநீக்கு
4. நன்றி என்னுடைய பதிவில் சரியாக வேலை செய்கிறது

பதிலளிநீக்கு
5. @உண்மைத் தமிழன்(15270788164745573644)
//என்னுடைய பதிவில் வேலை செய்யவில்லை ஸார்..//

என்னங்க என்னைபோய் சார் என்னு சொல்றீங்க எனக்கு இப்பதான் 19 வயசு ஆகுது.

பதிலளிநீக்கு
6. @உண்மைத் தமிழன்(15270788164745573644)

@காதல் இனிதே

@Suresh Kumar

தங்கள் பின்னூட்டத்திற்கும் கருத்துரைக்கும் எனது நன்றி.

பதிலளிநீக்கு
7. நண்பரே,

வணக்கம். வகுப்பறை வாத்தியார் மூலம் தங்களைபற்றி ஏற்கனவே அறிந்திருந்தும் தங்கள் வலைத்தளம் பற்றி தெரியாமல் இருந்தேன். தாங்கள் எனது வலைத்தளம் வந்து தங்கள் மேலான ஆலோசனை வழங்க வேண்டுகின்றேன்.

தள முகவரி:-
http://velang.blogspot.com/

வாழ்க வளமுடன்,
வேலன்.

பதிலளிநீக்கு
8. மிக்க நன்றி.

அருமையாய்ருக்கு ...

பதிலளிநீக்கு
9. எத்தனையோ தடவை yahoo pipes எல்லாம் உபயோகித்து முயற்சி செய்தாலும் வரவேயில்லை...இப்போ அழகா வந்துருச்சு ஆனால் என் பெயரில் உள்ள comment வருதே filter பண்ணிருக்கேன் ஆனாலும் வருது.help out
அன்புடன் அருணா

பதிலளிநீக்கு
10. தங்கள் பதிவுகள் மிகவும் பயன் உள்ளவை.நன்றி.
அதிக பின்னூட்டமிட்டவர்கள்
என்னால் பொருத்திக்கொள்ள இயலவில்லை .என்னுடையது blaagger கணக்கு ஆகும்

பதிலளிநீக்கு
11. @ ஆர்.கே.சதீஷ்குமார்
இந்தப்பதிவை பார்க்கவும்..

http://honey-tamil.blogspot.com/2009/01/blogger-widget_27.html

பதிலளிநீக்கு
12. தமிலிஷ் மூலமாக உங்கள் பிளாக்கை பார்க்கிறேன்.மிகவும் பயனுள்ளதாக இருக்கு.அதிக பின்னூட்டமிட்டவர்கள் நீங்கள் சொல்லிய படி என் ப்ளாகில் வைத்துயிருக்கேன். ரொம்ப நன்றி

பதிலளிநீக்கு
13. ரொம்ப நன்றி, அழகாக வேலை செய்கிறது.

பதிலளிநீக்கு
14. வாஜாரே !!! நா தான் டவுசரு பாண்டி, ரொம்ப நாளச்சிபா உன்ன பாத்து, அப்பால நம்ப பிளாக்குல, இந்த மேரி , கர்த்து சொல்றவங்கோ பத்தி வர மாட்டுன்னுது இன்னாபா பண்றது ?

பதிலளிநீக்கு
15. @ வால்பையன்

கீழே உங்களுக்காக மாற்றம் செய்து தந்திருக்கிறேன்.பழையதிற்குப் பதிலாக இந்த கோட்களை சேருங்கள்.

பதிலளிநீக்கு
16. கார்த்திக், உங்கள் யாஹு பைப்பில் ப்ளாக்கர் அனுமதிக்கும் 500 பிண்ணூட்டங்கள் என்ற கட்டுப்பாடை தாண்டி மொத்தத்தையும் வரவழைத்தது எப்படி என்று கூற முடியுமா... என்னுடைய பைப்பில் அதை நிறுவிக் கொள்ள வகையாக இருக்கும். நன்றி.

பதிலளிநீக்கு