
நோக்கியா 5800 என்ற இந்த மாடல்தான் இப்போது இந்திய மொபைல் உலகின் லேட்டஸ்ட் சென்சேஷன். எக்ஸ்பிரஸ் மியூசிக் பிரிவில் இந்த செல்போன்களை அறிமுகம் செய்துள்ளது நோக்கியா நிறுவனம்.
ஏ.ஆர்.ரஹ்மான் தனது பிறந்த நாளான செவ்வாய்க்கிழமை இந்த நோக்கியா 5800 செல்போனை அறிமுகம் செய்தார்.


இந்த செல்போன்களில், ஏ.ஆர்.ரஹ்மான் நோக்கியாவுக்கென்றே ஸ்பெஷலாக உருவாக்கிய கனெக்ஷன்ஸ் என்ற முழு ஆல்பமும் இடம்பெற்றுள்ளது இதன் சிறப்பம்சமாகும்.
தொடுதிரை வசதி கொண்ட இந்த செல்போன்களில் கிராபிக் ஈக்வலைசர், 6 ஆயிரம் பாடல்களை சேமிக்க வசதியாக 8 ஜிபி மெமரி கார்ட், சரவுண்ட் சவுண்ட் ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள் இடம்பெற்றுள்ளன.
சென்னையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ள இந்த நோக்கியா 5800 மாடலின் விலை 21 ஆயிரத்து 839 ரூபாய்!
அப்படியே... இதையெல்லாம் வாங்குற ரேஞ்சுக்கு இப்போ சம்பளம் இருக்குதான்னும் பார்த்துக்கிடுங்க!
0 கருத்துகள்