Blogger trix:பின்னூட்டம் இடும் பெட்டியை பதிவுகளுக்கு கீழே காண்பித்தல்.

பதிவுகளுக்கு வாசகர்கள் பின்னூட்டம் இடும் போது Post a comment என்ற லிங்கை கிளிக் செய்தே பின்னூட்டம் இட்டுருப்பீர்கள். ஆனால் இதன் மூலம் உங்கள் பதிவுகளுக்கு கீழேயே பின்னூட்டம் இடும் பெட்டியை தோன்ற வைக்கலாம். இதன் காரணமாக வாசகர்கள் இலகுவாக பின்னூட்டம் இட கூடியதாக இருக்கும்.
உதாரணத்திற்கு என்னுடைய வலைப்பதிவிலேயே பார்க்கவும்.

பிளாக்கர் தரும் டெம்பிளேட் பாவிப்பவர்கள் கீழே உள்ள நடைமுறையை பின்பற்றவும்...

1.முதலில் உங்கள் Dasboard இற்கு சென்று Settings என்பதை கிளிக் செய்யவும்.
2. பின்பு Comments கிளிக் செய்து கீழே படத்தில் காட்டப்பட்டவாறு Embedded below post என்பதை கிளிக் செய்து save செய்யவும்.




இந்த செயல் முறையை வேறு டெம்பிளேட் பயன்படுத்துபவர்களும் செய்து பார்க்கவும். Eambedded below post என்ற பகுதி காணப்படாவிட்டால் Blogger in Draft இற்கு சென்று உங்கள் கணக்கினுள் உள்நுளைந்து மேற்கூறியவற்றை செய்யலாம். உள்னுளைத்தவுடன் தோன்றுகின்ற நீல நிறபெட்டியில் சரி அடையாளமிடவும்.

இதற்கு மேலும் உங்கள் பதிவுகளுக்கு கீழே பின்னூட்டமிடும் பெட்டி வராவிட்டால் கீழே உள்ள வழிமுறைகளை செய்யவும்.

Step 1. உங்கள் Layout இற்கு Edit HTML ஐ கிளிக் செய்யவும் .

Step 2. முக்கியமாக "Expand widget templates" என்பதை சரி அடையாளமிடவும். Ctrl+F ஐ பயன்படுத்தி கீழே சிவப்பு நிறத்தில் உள்ள கோட்களை தேடிக்கண்டுபிடிக்கவும்.

<b:include data='post' name='comments'/>

Step 3. நீங்கள் தேடி கண்டுபிடித்த கோட்களுக்கு கீழே நீல நிறத்தில் உள்ள கோட்களை சேர்க்கவும்.

<b:include data='post' name='comment-form'/>

இனி உங்கள் டெம்பிளேட்டை save செய்து சரிபார்க்கவும்.

Updated

மேற்கூறிய எந்த வழிகளிலும் பயன் ஏற்படாவிட்டால் கீழே உள்ள வழிமுறையை செய்துபார்க்கவும்.

Step 1. உங்கள் Layout இற்கு Edit HTML ஐ கிளிக் செய்யவும் .

Step 2. முக்கியமாக "Expand widget templates" என்பதை சரி அடையாளமிடவும். Ctrl+F ஐ பயன்படுத்தி கீழே சிவப்பு நிறத்தில் உள்ள கோட்களை தேடிக்கண்டுபிடிக்கவும்.

<p class='comment-footer'>
<b:if cond='data:post.allowComments'>
<a expr:href='data:post.addCommentUrl' expr:onclick='data:post.addCommentOnclick'>
<data:postCommentMsg/></a></b:if></p>

Step 3. நீங்கள் தேடி கண்டுபிடித்த மேலே உள்ள கோட்களை அகற்றிவிட்டு கீழே நீல நிறத்தில் உள்ள கோட்களை சேர்க்கவும்.

<p class='comment-footer'>
<b:if cond='data:post.embedCommentForm'>
<b:include data='post' name='comment-form'/>
<b:else/> <b:if cond='data:post.allowComments'>
<a expr:href='data:post.addCommentUrl' expr:onclick='data:post.addCommentOnclick'><data:postCommentMsg/></a>
</b:if> </b:if> </p>

தங்களுக்கு ஏதாவது பிரச்சினை ஏற்பட்டால் கூறவும். இந்த கோட்களை சரி செய்ய உதவியாக இருக்கும்.

கருத்துரையிடுக

10 கருத்துகள்

  1. நிறைய பயன் தரும் வகையில் தருகிறீர்கள்....தொடரட்டும் உங்கள் பணி...
    நன்றி..
    shiva--datashiva@gmail.com

    பதிலளிநீக்கு
  2. மிகவும் பயனுள்ள நல்ல தகவல். நன்றி!

    பதிலளிநீக்கு
  3. மூணுமே செஞ்சி பார்த்துட்டேன்!

    ம்ஹூம்! சரியா வரலை!

    பதிலளிநீக்கு
  4. தங்கள் பதிவுகள் மிகவும் பயன் உள்ளவை.நன்றி.
    அதிக பின்னூட்டமிட்டவர்கள்
    என்னால் பொருத்திக்கொள்ள இயலவில்லை .என்னுடையது blaagger கணக்கு ஆகும்

    பதிலளிநீக்கு
  5. நீங்கள் சொன்ன அத்தனை வழிகளிலும் முயற்சி செய்து பார்த்து விட்டேன். ஒர்க் -அவுட் ஆகல...

    பதிலளிநீக்கு
  6. தங்கள் பதிவுகள் மிகவும் பயன் உள்ளவை.நன்றி.

    பதிலளிநீக்கு
  7. மிக மிக பயனுள்ள பதிவு. உங்கள மேன்மையான பணிக்கு எனது வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  8. இதத்தான் இம்புட்டு நாளும் தேடிட்டிருந்மேன்..
    நன்றி தலைவா...

    பதிலளிநீக்கு