நீங்கள் அனுப்பிய ஈ-மெயில் போய்ச் சேர்ந்ததா....?


நாம் அனுப்பிய இமெயில் சேர்ந்ததா? பெற்றவர் படித்தாரா என்பது கூட வேண்டாம். மெயில் அவருக்கு போய்ச் சேர்ந்ததா என்று பலருக்குக் கவலை இருக்கும்.

பொதுவாக அனுப்பப்படும் இமெயில்கள் நிச்சயம்யாருக்கு அனுப்புகிறோமோ அவருக்குப் போய் சேர்ந்து விடும். தொழில் நுட்ப கோளாறின் காரணமாக அவ்வாறு அனுப்பப் பட முடியவில்லை என்றால் நமக்கு இந்த மெயில் இன்ன காரணங்களுக்காக அனுப்ப இயலவில்லை என்றோ அல்லது இரண்டு நாட்களாக இந்த மெயிலை அனுப்ப முயற்சித்தோம், முடியவில்லை என்றோ செய்தி வரும். ஆனால் போய்ச் சேர்ந்தது என்பதற்கான உறுதி செய்தி நமக்கு வந்தால் நன்றாக இருக்கும் அல்லவா? இதற்காகவே Read Receipt என்ற வசதியினை இமெயில் கிளையண்ட் புரோகிராம்கள் வைத்துள்ளன. இந்த வசதியை ஒவ்வொரு இமெயிலுக்கும் செட் செய்து விட்டால் இமெயில் போய்ச் சேர்ந்தவுடன் அதனைப் பெறுபவருக்கு இதுபோல பெற்றுக் கொண்டதற்கான ரசீதினை அவர் கேட்கிறார். அனுப்பவா? என்று ஒரு செய்தி தரப்படும். அவர் ஓகே டிக் செய்தால் தானாக ரசீது நமக்குத் தயாராகி அனுப்பப்படும். இதனை எப்படி அவுட்லுக் எக்ஸ்பிரஸ்ஸில் செட் செய்வது என்று பார்ப்போம்.

  1. முதலில் மெயில் எழுத Create Mail அல்லது Compose Mail என்பதில் கிளிக் செய்திடவும்.
  2. பின் இமெயில் பெறுபவரின் முகவரி மற்றும் செய்தியை டைப் செய்திடவும்.
  3. இணைக்க வேண்டிய பைல்களை இணைக்கவும்.
  4. எல்லாம் முடிந்தவுடன் Tools மெனு செல்லவும். அங்கே Request Read Receipt என்பதில் கிளிக் செய்திடவும்.
  5. மெயிலை அனுப்பி விட்டால் அந்த மெயில் போய்ச் சேர்ந்தவுடன் பெற்றவர் பெற்றதற்கான செய்தியை அவுட்லுக் எக்ஸ்பிரஸ் உங்களுக்கு அனுப்பி வைக்கும்.
  6. மொத்தமாக நீங்கள் அனுப்பும் அனைத்து இமெயில்களுக்கும் ரசீது தேவை என்றால் Tools மெனு சென்று Options என்பதைத் தேர்ந்தெடுக்கவும்.
  7. பின் கிடைக்கும் விண்டோவில் Receipts என்ற டேபினைக் கிளிக் செய்திடவும். இதில் “Request a return receipt for all sent messages” என்ற ஆப்ஷனுக்கு முன்னால் உள்ள சிறிய பாக்ஸில் டிக் அடையாளத்தை ஏற்படுத்தவும். பின் ஓகே கிளிக் செய்து வெளியேறவும்.

இதன் பின் அவுட்லுக் எக்ஸ்பிரஸ் நீங்கள் அனுப்பும் ஒவ்வொரு மெயிலும் திறந்து படிக்கப்பட்டதா என உங்களுக்கு செய்தி அனுப்பிக் கொண்டே இருக்கும்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்