TopBottom

உடல் எடை குறைய ஓர் இணைய தளம்

எழுதியவர் : Karthikan Karunakaran 29 July 2009

முப்பது அல்லது 35 வயதைத் தாண்டினாலே அனைவருக்கும் வரும் கவலை உடல் எடையைகுறைப்பதுதான். இந்தக் கவலையைக் காட்டிலும் சுற்றி இருப்பவர்கள் கொடுக்கும் அறிவுரையே நம்மை அதிர்ச்சியடைய வைக்கும். ஒரு சிலர் தண்ணீர் நிறைய குடி என்பார்கள். ஒரு சிலரோ நமக்குப் பிடித்த உணவு வகை அனைத்தையும் சாப்பிடாதே என்பார்கள். ஒரு சிலரோ சமைக்காமல் பச்சையாக காய்கறிகளையும் அரிசியையும் சாப்பிடு என்பார்கள். இப்படி எல்லாம் இல்லாமல் உடல் எடையைக் குறைப்பதில் உருப்படியான தகவல்களையும் அறிவுரைகளையும் கூறும் ஒரு தளத்தை இங்கு காணலாம்.இதில் பல பிரிவுகள் உள்ளன.

Diet and Weight Loss Tips

உணவு முறைக்கும் எடைக் குறைப்பிற்குமாக உருப்படியான டிப்ஸ்களை இந்தப் பிரிவில் காணலாம். ஒவ்வொரு டிப்ஸும் வெவ்வேறு பழக்கம் குறித்து தகவல்களை அளிக்கின்றன. அத்துடன் அந்த பொருள் குறித்த கட்டுரை ஒன்றுக்கு உங்களை வழி நடத்துகின்றன.

Tutorial

இந்த தளத்தில் உங்கள் உணவுப் பழக்கம் குறித்த முழுமையான தகவல்கள் தரப்படுகின்றன. உணவுக் கட்டுப்பாடு பழக்கம் குறித்து உண்மைத் தகவல்களைக் கூறி உங்களை இயல்பாக இருக்கச் சொல்லி அழைக்கிறது.

Calories Burned Calculator

இங்கு ஐந்து வகையான கால்குலேட்டர்கள் தரப்பட்டுள்ளன. இவற்றின் மூலம் உங்கள் உடம்பின் சக்தி எவ்வாறு செலவழிக்கப்படுகிறது என்பதனை அறியலாம். ஒவ்வொரு கால்குலேட்டர்களின் கீழாகவும் அதன் தொடர்பான ஒரு கட்டுரை தரப்பட்டுள்ளது. அதில் அந்த கால்குலேட்டர் கையாளும் பொருள் குறித்துத் தெளிவான கருத்துக்களும் செயல்முறைகளும் தரப்பட்டுள்ளன.

Food Calories & Nutrition Calculator

இந்த கால்குலேட்டர் நீங்கள் எடுத்துக் கொள்ளும் உணவினால் உடம்பில் சேரும் சக்தி கலோரிகளில் தரப்படுகிறது. குறிப்பாக பாஸ்ட் புட் வகைகள் மற்றும் உறைய வைத்து பின் சூடாக்கிச் சாப்பிடும் வகைகள் குறித்த தகவல்கள் நமக்கு மிகவும் உபயோகமானவை.

Weight Loss Calculator

இந்த பிரிவில் உள்ள கால்குலேட்டர் எடையைக் குறைப்பதில் உங்கள் இலக்கு மற்றும் எடையைக் குறைப்பதற்கான கால அட்டவணையைத் தயாரித்து அளிக்கிறது. தொடர்ந்து ஒவ்வொரு நாளும் நீங்கள் இழக்கும் எடை மற்றும் அதனை ஈடுகட்ட நீங்கள் மேற்கொள்ள வேண்டிய செயல்பாடுகளையும் சுட்டிக் காட்டுகிறது.

Weights & Measures Converter

உடம்பின் எடை, உயரம் மற்றும் உணவின் அளவுகளை பழைய முறையிலிருந்து புதிய மெட்ரிக் முறைக்கு மாறுவதற்குத் தேவையான வசதியைத் தருகிறது.நமக்கு இது தேவையில்லை. ஏனென்றால் நாம் மெட்ரிக் முறையான கிலோ மற்றும் மீட்டர் அளவினைத்தான் பயன்படுத்தி வருகிறோம்.

Weight Loss Forums

இங்கு உங்களைப் போல உடல் குறைவதற்கு முயற்சிகளை எடுக்கும் நபர்கள் சார்ந்த குழுக்களைச் சந்திக்கலாம். உங்கள் சந்தேகங்கள் மற்றும் கேள்விகளை இவர்களுடன் பகிர்ந்து கொண்டு அனுபவத்தின் அடிப்படையில் கிடைக்கும் பதில்களைப் பெறலாம். நல்ல உடல் நலத்தோடு வாழ்வாங்கு வாழ விருப்பமா! தினந்தோறும் இந்த இணைய தளம் சென்று தேவையானதைக் கற்றுக் கொள்ளுங்கள்.

தள முகவரி : இங்கே கிளிக் செய்யவும்

1 Comment

 1. Ram Says,

  நம்முடைய இணைய பக்கத்திற்கு அல்லது பதிவிற்கு அதிக ஹிட்ஸ் கொண்டு வருவதில் திரட்டிகளுக்கு முக்கிய பங்கு உண்டு. உங்கள் பதிவுகளை அல்லது இனைய பக்கத்தை அனைத்து தமிழ் திரட்டிகளிலும் வெளியிட ஒரு பட்டன் மட்டுமே போதும்.

  தமிழ் பக்கங்களை Reedit.com, Digg.com என்று submit செயும்போது கிடைக்கும் ஹிட்ஸ்கலை விட தமிழ் திரட்டிகளில் submit செயும்போது அதிக ஹிட்ஸ் கிடைக்கும். அதுவே இந்தியா சார்ந்த ஆங்கில தளங்கள் என்றால் Hotkilix, Humsuffer போன்ற இந்திய ஆங்கில திரட்டிகளில் இருந்து அதிக ஹிட்ஸ் கிடைக்கும் .

  தற்போது FindIndia.net என்ற இணையத்தளம் இந்த சேவையை வழங்குகிறது . இந்த பட்டனை முற்றிலும் இலவசமாக இந்திய மொழி தளங்களுக்கு மட்டுமே பயன்படுத்தலாம் . இதை நாம் நம் பிளாக்கர் ப்ளாகிலோ அல்லது நமது இணையத்தளத்தில் இன்ஸ்டால் செய்து கொள்ளலாம் ( எனது ப்ளாகின் Sidbarல் காண்க). இதன் மூலம் அதிக பார்வையாளர்களை நம் தளத்திற்கு வர செய்யலாம்.


  தற்போது BETA பதிப்பில் உள்ள இத்தளம் தற்போது தமிழ் , இந்திய ஆங்கில
  Social Bookmarking தளங்களுக்கு பதிவுகளை submit செய்வதற்கான பட்டங்களை
  வழங்குகிறது. இது தமிளிஷ், தமிழ்மணம், தமிழர்ஸ் என்று பல பட்டன்கள் நம்
  தளத்தில் add செய்வதற்கு பதில் ஒரு Buttonலையே எல்லா திரட்டிகளிலும் பதிவுகளை submit செய்ய எளியதாக இருக்கும் .


  Add-தமிழ் பட்டன் குறித்த மேல் அதிக தகவல்களுக்கு http://www.findindia.net

   
 2. Reply To This Comment
:a   :b   :c   :d   :e   :f   :g   :h   :i   :j   :k   :l   :m   :n   :o   :p   :q   :r   :s   :t

About Me

My Photo
Karthikan Karunakaran
View my complete profile

Twitter

  Twitter Updates

   follow me on Twitter

   Recent Comments