இன்டர்நெட் எக்ஸ்புளோரர் 6 ம் கூகிளும்..!!!

கூகுள், இன்டர்நெட் எக்ஸ்புளோரர் பதிப்பு 6 க்கு இனி இணைந்து இயங்காது என்று சென்ற ஜனவரி மாதம் தனது பிளாக்கில் செய்தி வெளியிட்டுள்ளது.

மார்ச் 1, 2010 முதல் கூகுள் இன்டர்நெட் எக்ஸ்புளோரர் பதிப்பு 6 பிரவுசருக்குத் தரும் இணைய அனுமதியை தராது. எனவே இந்த பிரவுசரையே இன்னும் பயன்படுத்தி வருபவர்கள், மேம்படுத்தப்பட்ட பதிப்பிற்கு மாறிக் கொள்ள வேண்டும். இல்லை என்றால் கூகுள் டாக்ஸ், கூகுள் சைட்ஸ் போன்ற கூகுள் தளங்கள் இதில் இயங்காது.

இது குறித்து கூகுள் அப்ளிகேஷன் மேனேஜர் ராஜன் ஷேத் தன் பிளாக்கில் எழுதுகையில் வேறு பல நிறுவனங்களும் இது போல இன்டர்நெட் எக்ஸ்புளோரர் பதிப்பு 6 னுடனான தங்கள் உறவினை முறித்துக் கொண்டனர். கூகுள் இப்போதுதான் இந்த முடிவினை அமல்படுத்துகிறது என்றார். எனவே மார்ச் 1 தொடங்கி கூகுள் டாக்ஸ் மற்றும் கூகுள் சைட்ஸ் சரியாக இந்த பிரவுசரில் இயங்காது என்றார்.

இதனைத்
தவிர்க்க, இன்டர்நெட் எக்ஸ்புளோரர் பதிப்பு 8, பயர்பாக்ஸ் 3, கூகுள் குரோம் 4 அல்லது சபாரி 3க்கு மாறிக் கொள்ள வேண்டும் என்றார். இன்டர்நெட் எக்ஸ்புளோரர் பதிப்பு 6க்குப் பிறகு எத்தனையோ பிரவுசர்கள் வந்துவிட்டன. இலவச மாகவும் கிடைக்கின்றன. பின் ஏன் தயங்குகிறீர்கள், பயப்படுகிறீர்கள். நவீன வசதிகளைப் பயன்படுத்தப் பழகிக் கொள்ளுங்கள்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்