மொபைல் தேடலில் முதலிடத்தை பெறுமா கூகிள் ???

இன்டர்நெட்டில் தகவல்களைத் தேடுவதில் நமக்குப் பயன்படும் சர்ச் இஞ்சினை யார் முதலில் வடிவமைத்தார்கள்? என்று ஒரு கேள்வி கேட்டால் உடனே பெரும்பாலான வர்கள் கூகுள் நிறுவனம் என்றுதான் பதில் அளிப்பார்கள். ஆனால் அது உண்மையல்ல. கூகுள் நிறுவனம் தன் சர்ச் இஞ்சினை வழங்கு முன்பே சர்ச் இஞ்சின் வேறு நிறுவனங்களால் இயக்கப்பட்டுக் கொண்டிருந்தது. ஆனால் கூகுளின் வேகம், தேடல் வகை அதற்கு ஒரு தனி இடத்தைக் கொடுத்துள்ளது.

இப்போது ஸ்மார்ட் போனில் மேற்கொள்ளப்படும் தேடலிலும் தான் முதல் இடம் பெற வேண்டும் என்ற எண்ணத்துடன் கூகுள் காய் நகர்த்துகிறது. அட்மாப் மற்றும் டெராசென்ட் (AdMob and Teracent) என்ற இரு நிறுவனங்களை அண்மையில் கூகுள் வாங்கியதன் மூலம் ஸ்மார்ட் போன் தேடலிலும் தன் இடத்தை வலுவாக கூகுள் அமைத்துள்ளது.

இன்டர்நெட் தேடலைப் பொறுத்தவரை கூகுள், சென்ற டிசம்பர் மாதம் மொத்த தேடலில் 70 சதவீதம் கொண்டிருந்தது. மொத்தம் மேற்கொள்ளப்பட்ட 13 கோடியே 10 லட்சம் தேடலில், 8 கோடியே 80 லட்சம் தேடல்கள் கூகுள் வழியே மேற்கொள்ளப்பட்டன. இது முந்தைய ஆண்டைக் காட்டிலும் 58 சதவீதம் கூடுதலாகும். இது கூகுள் பெரிய அளவிலான இடத்தைக் கொண்டிருப்பது மட்டுமின்றி, இந்த பிரிவில் வேகமாகவும் வளர்ந்து வருகிறது என்பதுதான். தன் நிலையை இன்னும் வலுவாக்க சோஷியல் நெட்வொர்க்கிங் தளங்களுடன் கூகுள் ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது. இதனால் ட்விட்டர் மற்றும் பேஸ்புக் போன்ற சமுதாய இணைய தளங்களில் தேட விரும்புவர்கள், நேரடியாக கூகுள் தளத்திலேயே தங்கள் தேடலை மேற்கொள்ளலாம் என்பதுதான்.

கூகுள் தளத்திற்கு சவால் விடும் அளவிற்கு உள்ள ஒரு தேடுதளம் மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் பிங் தான். ஆனால் இது பெயரளவில் தான் உள்ளது. ஏனென்றால் இந்த தேடல் சந்தையில் பிங் இஞ்சினின் பங்கு வெறும் 4 சதவீதம் மட்டுமே.

கருத்துரையிடுக

1 கருத்துகள்

  1. இலகு வழியில் இணையத்தினூடு பணம் தேடுங்கள்

    http://www.trekpay.com/?ref=169994

    பதிலளிநீக்கு