டோனியின் காதலி, கல்லூரி மாணவி - திருமணம் செய்ய முடிவு

இந்திய கிரிக்கெட் அணியை புகழின் உச்சிக்கு அழைத்து சென்றவர் டோனி. அவர் கேப்டன் பதவியை ஏற்ற பிறகு இந்திய அணி வரலாற்று சிறப்புமிக்க வெற்றிகளை பெற்றுள்ளது.

கேப்டன் பதவியில் மட்டுமின்றி பேட்டிங்கிலும் அவர் தொடர்ந்து முத்திரை பதித்து வருகிறார். அதிரடியான ஆட்டம் மூலம் இளம் ரசிகைகளின் நெஞ்சில் நீங்கா இடம் பெற்றுள்ளார்.

இந்தியாவின் விலை மதிப்பு மிக்க அவரை திருமணம் செய்ய ஒவ்வொரும் போட்டி போடுகின்றனர். டோனி முதலில் நடிகை தீபிகா படுகோனேயுடன் சுற்றி திரிந்தார். பின்னர் நடிகை லட்சுமிராயுடன் இணைந்து சுற்றினார்.

இவர்களை எல்லாம் கைகழுவி விட்டு டோனி தற்போது புதிய காதலியை தேர்ந்தெடுத்துள்ளார். கல்லூரி மாணவியான சாக்சிசிங் ராவத்தை டோனி காதலிக்கிறார். இவர் அவுரங்காபாத்தில் உள்ள கல்லூரியில் ஹோட்டல் மானேஜ்மென்ட் படித்து வருகிறார். சமீபத்தில் தாஜ்பெங்கால் ஓட்டலில் அவர் தனது பயிற்சியை முடித்தார். அப்போதுதான் டோனியும், சாக்சியும் சந்தித்து கொண்டனர்.

பின்னர் நடிகை பிபாஷாபாசு அளித்த விருந்தில் இருவரும் பங்கேற்றனர். சாக்சி தனது 21-வது பிறந்த நாளை கடந்த சில மாதங்களுக்கு முன்பு கொண்டாடினார். அதில் டோனியும் கலந்து கொண்டனர். இருவரும் ஒன்றாக பல இடங்களுக்கு சுற்றி திரிந்தனர்.

சாக்சி சிங்கை திருமணம் செய்ய டோனி முடிவு செய் துள்ளார். 2010-ம் ஆண்டுக்கு பிறகு இருவரது திருமணம் நடைபெறும். இதை சாக்சி சிங்குக்கு நெருக்கமானவர்கள் தெரிவித்தனர்.

சாக்சி சிங்கின் சகோதரியும், உத்ராஞ்சல் போலீஸ் அதிகாரியுமான அபிலாசா டெலிவிஷன் பேட்டியில் கூறும் போது, இருவரும் நல்ல நண்பர்கள் சாக்சியின் படிப்பு முடிந்த பிறகுதான் அவரது திருமணம் என்றார்.

கருத்துரையிடுக

2 கருத்துகள்