புதிய தமிழ் மென்பொருள்

உண்மையிலேயே அசத்தியிருக்கிறார்கள்.தமிழில் தட்டச்சுவது சுலபமாகவே இருக்கிறது. தங்கிலீஷில் தட்டச்சினால் கூட மற்ற சாப்ட்வேர்களுக்கும், பாண்டுகளுக்கும் மிக சுலபமாக கன்வெர்ட்டு செய்யமுடிகிறது.

* மொத்த மென்பொருளுமே 850 KBக்குள் இருப்பதால் தடாலடியாக டவுன்லோடு ஆகிறது. ஓரிரு நொடிகளில் கணினியில் நிறுவப்படுகிறது.

* வேகம், வேகம், அதிரடி வேகம் - இதுவே இந்த மென்பொருளின் சிறப்பம்சம். ஒரு பெரிய கட்டுரையை பாண்டு கன்வெர்ட்டு செய்ய இனிமேல் தாவூ தீர்ந்துப் போய் உட்காரவேண்டியதில்லை. டவுசர் அவுக்கும் வேகத்தில் NHM Converter மூலமாக பைபிளை கூட கன்வெர்டு செய்யமுடியும்.

* பெரிதாக தொழில்நுட்ப அறிவு Regional Language Support (பிராந்திய மொழிகள்) போன்ற வார்த்தைகளை கண்டதுமே காண்டு ஆகிவிடும். யாராவது தொழில்நுட்பம் தெரிந்தவரை வரவழைத்து ஒரிஜினல் (?) சிடி கொண்டு Install செய்யவேண்டும். அதுபோன்ற தொல்லைகள் எதுவுமில்லாமல் இந்த மென்பொருளை நிறுவினால் அதுவே இந்த கச்சடா வேலைகளை கவனித்துக் கொள்ளுகிறது.

* தமிழ்99, தங்கிலீஷு, டைப்ரைட்டிங் தமிழ், பாமினி என்று ஐந்துமுறைகளிலும் மிக சுலபமாக தட்டச்சலாம். அதுமட்டுமில்லாமல் Bamini, Diacritic, Shreelipi, Softview, Tab, Tam, TSCII, Vanavil and Unicode ஆகிய கும்மிகளின் எழுத்துருக்களையும் பயன்படுத்த முடியும் என்பதால் DTP தொழில் மற்றும் பதிப்பகத் தொழிலில் இருப்பவர்களுக்கு இது ஒரு வரப்பிரசாதம்.

* Key Preview வசதி இருப்பதால் செம தூளாக இருக்கிறது.

* இது மிக விரைவில் ஓபன் சோர்ஸோ என்னவோ, ஏதோ ஒரு டெக்னிக்கல் டெர்ம் சொன்னார்கள். அந்த முறையில் வெளிவர இருப்பதால் உலகத்தில் இருக்கும் எந்த மொழியையும் மிக சுலபமாக உள்ளீடு செய்து தட்டச்சலாம் என்றார்கள்.

* எல்லாவற்றையும் விட மிகப்பெரிய விஷயம். இதை இலவசமாகவே பயனாளிகளுக்கு வழங்க இருக்கிறார்கள். New Horizon Media நிறுவனத்தின் பதிப்பக வேலைகளுக்காக துட்டு செலவு செய்து தயார் செய்யப்பட்ட இந்த மென்பொருளை இலவசமாக எல்லோருக்கும் வழங்கும் முடிவு எடுத்த திரு. பத்ரி அவர்களுக்கும், இரவு-பகலாக உழைத்து அட்டகாசமான மென்பொருளை உருவாக்கிய திரு. நாகராஜ் அவர்களுக்கு நன்றி கூற தமிழ்தட்டச்சும் நல்லுலகம் கடமைப்பட்டிருக்கிறது.

இதை தரவிறக்கம் செய்ய : NHM Writer

NHMWriter யை எவ்வாறு பயன் படுத்துவது? என்று அறிய இந்த வலைப்பதிவுக்கு சென்று பார்க்கவும்.

கருத்துரையிடுக

12 கருத்துகள்

  1. hi,
    i like your blog. it look like nice.
    how do you put google ads.? plese tell me

    பதிலளிநீக்கு
  2. நான் கடந்த வருடத்திலேயே இதை பயன்படுத்தி வருகிறேன் ... இப்பவும் கூட ,

    பதிலளிநீக்கு
  3. என்ன முயற்சி செய்தும் எனக்கு என் ஹெச் எம் ல் வேலை செய்யத் தெரியவில்லை நண்பரே.Any how I have downloaded file. Thank you.

    பதிலளிநீக்கு
  4. I too same as above man, dont know work this softwerar, anyhow i alos downlaod as your told.

    thanks and reagrds

    பதிலளிநீக்கு
  5. Hi

    உங்களுடைய வலைப்பதிவு இணைப்பை Tamil Blogs Directory - www.valaipookkal.com ல் தொடுத்துள்ளோம். அதை இங்கு சரி பார்த்து கொள்ளவும்.

    உங்களது புதிய வலைப்பதிவை உடனுக்குடன் பூர்த்தி செய்து, அதை உலகம் முழுவதுமாக பரவி உள்ள தமிழ் வாசகர்கள் முன் கொண்டு செல்ல இந்த வலைப்பூக்களிலும், வேகமாக வளர்ந்து வரும் தமிழ் இனத்தின் இணையத்திலும் தங்களை பதிவு செய்து கொள்ளவும்.

    நட்புடன்
    வலைப்பூக்கள்‌/தமிழ்ஜங்ஷன் குழுவிநர்

    பதிலளிநீக்கு
  6. இந்த புதிய மென்பொருளை தரவிரக்கம் செய்துவிட்டேன்...பயன்பாட்டிற்கு பிற்கு கருத்துரை இடுகிறேன்....

    பதிலளிநீக்கு
  7. பயனுள்ள பதிவு. ஆயினும் எனக்கு பாமினையை விட்டுவிட இன்னமும் மனம் வரவில்லை

    பதிலளிநீக்கு
  8. இந்த மென்பொருள் மிகவும் நன்றாக உள்ளது. நன்றி.

    பதிலளிநீக்கு
  9. Hai I came across your blog . I have recommended to add your blog in www.thakaval.info, a tamil aggregator site.... Keep up ur good work :q

    பதிலளிநீக்கு
  10. இந்த மென்பொருள் மிகவும் நன்றாக உள்ளது. நன்றி. இந்த மென்பொருள் நான் இப்பொழுதுதான் கேள்விபட்டேன் உடனே தரவிறக்கம் செய்து அதன் மூலம் நிறைய பயன் அடைந்தேன். நன்றி.

    என்னுடைய எதிர் காலத்தை நான் ஒரு இணையம் மூலமாக தெரிந்து கொண்டேன், அதன் மூலம் எனக்கு உண்மையான மற்றும் சரியான கருத்துகள் கிடைத்தது, அந்த இணையத்தின் முகவரியை உங்களுக்கு கொடுப்பதன் மூலம் நீங்களும் அதனால் பெரிதும் பயனடைய வேண்டும் என்ற நல்ல நோக்கத்தில் உங்களுக்கு தருகிறேன். www.yourastrology.co.in

    பதிலளிநீக்கு
  11. நான் இரண்டாண்டுகளுக்கும் மேலாக NHM Writer பயன்படுத்தி வருகிறேன். மிக எளிதாக இருக்கிறது. மிகவும் பயனுள்ளது. என் நண்பர்கள் அனைவருக்கும் இதை பரிந்துரை செய்கிறேன்.

    பதிலளிநீக்கு