மொபைல் போனில் வைரஸ் - எச்சரிக்கை.....!

முன்பெல்லாம் கணணியை பதம் பார்த்தன வைரஸ்கள்.அதற்கெல்லாம் அண்டி வைரஸ் புரோகிராம்கள் கண்டுபிடித்து கொஞ்சம் வைரசின் தாக்கத்தை கட்டுப்படுத்தினார்கள். விடுவார்களா வைரஸ் ஆசாமிகள் , மொபைல் போனிலும் வைரசை பரப்பினார்கள்.மொபைல் போனில் தற்போது புதிய வைரஸ்கள் பரவத் தொடங்கி உள்ளன.

நோக்கியா போன்களில் சிம்பியன் 60 இயக்கத் தொகுப்பு உள்ள சிரீஸ் வகை சாதனங்களில் இது ஏற்படத் தொடங்கி உள்ளது. இது "Curse of Silence," எனத் தன்னைத் தானே அழைத்துக் கொள்கிறது.

1.மொபைல் ஒன்றில் வைரஸ் வந்துவிட்டால் என்னவெல்லாம் செய்யும் தெரியுமா....?

2.உங்களுக்கு தெரியாமலேயே எம்.எம்.எஸ் மற்றும் புளுடூத் என்பவற்றை இயக்கும்.

3.உங்களுக்கு தெரியாமலேயே எஸ்.எம்.எஸ் களை அனுப்பும்.

4.நீங்கள் சேமித்து வைத்துள்ள பைல்களை பாதிக்கும்.

5.உங்களுடைய ஐகான்கள் மற்றும் பைல்களை அழிக்கும்.

6.பாண்ட்களை மாற்றும் அல்லது புதிய பாண்ட்களை(Fonts) இன்ஸ்டால் செய்யும்.

7.உங்கள் மொபைலின் ஆண்டிவைரஸ் புரோகிராம்களை செயலிழக்க செய்யும்.

8.தேவையற்ற புரோகிராம்களை இன்ஸ்டால் செய்யும்.

9.உங்களுடைய டேட்டாகளை திருடும்.

10.மேமரிகாட்டை பிளாக் செய்யும்.

இது பெரும்பாலும் இந்த சிரீஸில் 2.6, 2.8, 3.0 அல்லது 3.1 ஆகிய பதிப்புகள் இயங்கும் மொபைல் போன்களையே பாதிக்கிறது. இது பாதித்த பின்னர் எஸ்.எம்.எஸ்., செய்திகளை பெறுவதும் அனுப்புவதும் தடைபடுகிறது. அதே போல எம்.எம்.எஸ். செய்திகளுக்கும் தடை ஏற்படுகிறது. இதுவரை கிடைத்த செய்திகளின் படி இந்த வைரஸ் கீழே குறித்தபடி செயல்படுகிறது. குறைந்தது 32 கேரக்டர்கள் கொண்ட எஸ்.எம்.எஸ். செய்தி கிடைக்கப்பெறுகிறது. இதன் முடிவில் ஒரு ஸ்பேஸ் கொடுக் கப்பட்டு ஒரு இமெயில் முகவரி இருக்கும். இது போல எஸ்.எம்.எஸ். கிடைக்கப் பெற்று போன் லாக் ஆவதிலிருந்து தப்பிக்க அடிக்கடி உங்கள் போன் டேட்டாவினை சிங்க் செய்திட வேண்டும்.


உங்கள் டேட்டாவினையும் பேக் அப் செய்திட வேண்டும். இதனை எப்படி மேற்கொள்வது என்று தெரியாதவர்கள் கீ பேட் மூலம் *#7370# என டைப் செய்திடவும். அல்லது இன்னொரு வழியும் உள்ளது. பச்சை நிறத்தில் உள்ள கால் கீயையும் ஸ்டார் கீயையும் மற்றும் 3 எண் கீயையும் ஒரு சேர அழுத்தவும். மொபைல் போன் மீண்டும் ரீ ஸ்டார்ட் ஆகும் வரை அழுத்தவும்.

இது குறித்து குறிப்பாக சோதனை நடத்தியதில் இது போல மெசேஜ் 11 முறை கிடைத்தவுடன் 2.8 மற்றும் 3.1 பதிப்புகளில் இயங்கும் போன்கள் லாக் ஆகிவிடுகின்றன. குறைந்த அளவே கால்களைப் பெறும் வசதி கொண்டதாக மாறுகின்றன. 2.6 மற்றும் 3.0 பதிப்பு கொண்டுள்ள மொபைல் போன்கள் அடுத்ததாக ஒரு செய்தியை அனுப்பியவுடன் லாக் ஆகின்றன. இதனை எப்–செக் யூர் நிறுவனம் சோதனை செய்து பார்த்து உறுதி செய்துள்ளது.

மேலும் தகவல்களுக்கு இங்கே கிளிக்கவும்.

கருத்துரையிடுக

2 கருத்துகள்

  1. aiyoo enoda phonula symbian 960 irukke.... neenga kodutha link clik pannum pothu ennoda phone photo thane kattirukanunga........ avvvvvvv

    பதிலளிநீக்கு
  2. Hi

    உங்களுடைய வலைப்பதிவு இணைப்பை Tamil Blogs Directory - www.valaipookkal.com. ல் தொடுத்துள்ளோம்.

    உங்களுடைய வலைப்பதிவு இணைப்பை இப்பூக்களில் சரி பார்த்து கொள்ளவும்.

    இதுவரை இந்த வலைப்பூக்கள் இணையதளத்தில் நீங்கள் பதிவு செய்யவில்லை எனில், உங்களை உடனே பதிவு செய்து, உங்களது புதிய வலைப்பதிவை உடனுக்குடன் பூர்த்தி செய்து, உங்கள் வலைப்பதிவை, உலகம் முழுவதுமாக பரவி உள்ள தமிழ் வாசகர்கள் முன் கொண்டு செல்லுங்கள்.

    நட்புடன்
    வலைபூக்கள் குழுவிநர்

    பதிலளிநீக்கு