யார் இந்த திமோதி........?

இன்றைய தினம் அரிச்சுவடிகளான ,பி,சி,டி அல்லது ,, ,ஈ (படம் அல்ல உயிரெழுத்துக்கள்) தெரிகிறதோ இல்லையோ சிறியவர் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் தெரிந்திருக்கும் அட்சரம் www என்றால் அது மிகையாகாது.

உலகம் அனைவரது கையிலும் என்ற எண்ணத்தை ஏற்படுத்தியவர் என்ற பெருமை திமோதி ஜான் பெர்னர்ஸ்-லீ-யையே சேரும்.

கடந்த 1990ம் ஆண்டில் இவர், தனது உடன் இருந்த ராபர்ட் கயிலியோ என்பவரின் துணையுடன் வேர்ல்ட் வைட் வெப் என்ற தகவல் சேகரிப்பு பிராஜக்டை ஏற்படுத்தியதன் விளைவாகவே இணைய தளம் என்ற உலகின் மிகவும் சக்தி வாய்ந்த ஊடகத்தை நம்மால் இப்போது பயன்படுத்த முடிகிறது.

திமோதியின் இந்த அரிய கண்டுபிடிப்புக்காக லண்டனைச் சேர்ந்த அவருக்கு, ராணி இரண்டாவது எலிசபெத் மிகப்பெரிய அந்தஸ்தை சுமார் 15 ஆண்டுகளுக்குப் பின் அளித்துள்ளார்.

லண்டனில் பிறந்த பெர்னர்ஸ்-லீ, ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தின் குயின்ஸ் கல்லூரியில் பயின்றார். பல்கலைக்கழகத்தின் கம்ப்யூட்டரை பயன்படுத்த லீ-க்குத் தடை விதிக்கப்பட்டதைத் தொடர்ந்து நண்பர்களுடன் இணைந்து அவர், தொலைக்காட்சி பெட்டி மற்றும் புதிய கம்ப்யூட்டரை வடிவமைத்தார்.

இதற்காக சால்டரிங் கருவியைப் பயன்படுத்தி போதுதான் கண்டுபிடிப்புகள் பற்றி யோசிக்கத் துவங்கினார்.

வேர்ல்டு வைடு வெப்- லீ உருவாக்கும் முன்பாக புரோகிராமர் ஆகவும், சாஃப்ட்வேர் டைப் செட்டிங்கிலும், ஆபரேட்டிங் சிஸ்டம் துறையிலும் கடந்த 1980-களில் அவர் பணி புரிந்துள்ளார்.

ஐரோப்பிய நிறுவனம் ஒன்றில் பெர்னர்ஸ்-லீ பணியாற்றும் போது ஹைபர் டெக்ஸ்ட் அடிப்படையிலான பிராஜக்ட்டின் போது வேர்ல்டு வைடு வெப்-க்கான ஐடியா கிடைத்தது.

தகவல்களை ஆராய்ச்சியாளர்கள் மத்தியில் பங்கீடு செய்து, அப்டேட் செய்யும் வகையிலான புரோட்டோ டைப் சிஸ்டம் என்குயர் என்ற பெயரில் ஏற்படுத்தப்பட்டது. இந்த புரோகிராம் வெளியிடப்படாவிட்டாலும் வேர்ல்டு வைடு வெப்-க்கான ஆதாரமாக அமைந்தது.

அதன் பிறகு உலகின் முதல் இணைய தளம் (வெப் சைட்) உருவாக்கப்பட்டு அடுத்த கட்டத்திற்குச் சென்றது, வெப் சர்வருக்கு http என அழைக்கப்பட்டு டிசம்பர் 1990ல் உருவாக்கப்பட்டது. ஆனால் இப்போது உள்ள வெப் கேமரா போன்ற நவீன வசதிகள் அப்போது அதில் இருந்திருக்கவில்லை.

அதிலிருந்த வேர்ல்டு வைடு வெப் வெற்றிகரமாகச் செயல்படத் துவங்கியது. முதல் பெர்னர்ஸ் லீ அட் இன்போ. செம். சிஎச் ஆகஸ்ட் 6-ம் தேதி 1991-ல் ஆன்லைனில் வந்தது.

அதன் பின்னரே வெப் சர்வர்கள் அதிகரிக்கத் துவங்கின. பெர்னர்ஸ் - லீ மற்ற வெப் சைட்களை நிர்வகிக்கத் துவங்கிய போதிலும் தனது வெப் சைட்டே உலகின் முதல் இணைய தளமாக பட்டியலில் இடம்பெற்றிருந்தது.

இந்த வெப் சைட் புரோகிராமை எந்தவித ராயல்டியும் இல்லாமல் இலவசமாக அவர் வழங்கினார். இதேபோன்ற முடிவை தற்போது பில்கேட்ஸ் எடுப்பாரா எனற கேள்வி எழுகிறது.

தவிர HTML, URL, HTTP போன்ற குறிகளையும் பெர்னர்ஸ்-லீ ஒருங்கிணைத்தார். கடந்த 1994-ல் வேர்ல்டு வைடு கூட்டமைப்பின் பின்னணியிலும், மாசாசூட்ஸ் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜியின் கம்ப்யூட்டர் சயின்ஸ் அமைப்பையும் ஏற்படுத்தினார்.

தொடர்ந்து முடிந்த, நடப்பு மற்றும் எதிர்கால விஷயங்களை பதிவு செய்யும் வகையில் வீவிங் தி வெப் என்பதன் ஒருங்கிணைப்பாளராக மார்க் பிஷட்டியுடன் சேர்ந்து செயல்பட்டார்.

49 வயதான பெர்னர்ஸ்-லீ வேர்ல்டு வைடு வெப் ஆன்லைனில் செயல்பட அனைத்து வகையிலும் தனது பங்களிப்பை அளித்தார்.

கடந்த 2004, ஜூலை 16ல் பெர்னர்ஸ்-லீ, லண்டனின் அதிதீவிர கமாண்டர் என்ற அந்தஸ்துக்காக தேர்ந்தெடுக்கப்பட்டார். பிரிட்டன் மன்னரின் உத்தரவுப்படி இரண்டாவது ராணி எலிசபெத், பெர்னர்ஸ்-லீ க்கு இந்த அந்தஸ்தை அளிப்பதாக அறிவிக்கப்பட்டது.

பிரிட்டன் மன்னருக்கு அடுத்தபடியான தகுதி இது. தவிர பிரிட்டன் இளவரசரால் ராயல் சொசைட்டி விருதும் லீக்கு அளிக்கப்பட்டு கௌரவிக்கப்பட்டது.

சர் திமோதி பெர்னர்ஸ்-லீ, Knight Commander என்ற நிலையில் அவரை அறிய முடியும்.

டைம் இதழ் வெளியிட்ட அதீத மூளை கொண்டவர்கள் பட்டியலில் பெர்னர்ஸ்-லீயின் பெயர் இடம்பெற்றுள்ளது. தவிர பல்வேறு நாடுகளின் ஏராளமான பெல்லோஷிப் விருதுகளும் அவருக்கு அளிக்கப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

ஒரு மணி நேரத்தில் மெட்ராஸ் பாஷை (சென்னைத் தமிழ்)
படிக்க விருப்பமா..? இந்த லிங்கை கிளிக் செயுங்கள்.

கருத்துரையிடுக

2 கருத்துகள்

  1. Hi

    உங்களுடைய வலைப்பதிவு இணைப்பை Tamil Blogs Directory - www.valaipookkal.com ல் தொடுத்துள்ளோம். அதை இங்கு சரி பார்த்து கொள்ளவும்.

    உங்களது புதிய வலைப்பதிவை உடனுக்குடன் பூர்த்தி செய்து, அதை உலகம் முழுவதுமாக பரவி உள்ள தமிழ் வாசகர்கள் முன் கொண்டு செல்ல இந்த வலைப்பூக்களிலும், வேகமாக வளர்ந்து வரும் தமிழ் இனத்தின் இணையத்திலும் தங்களை பதிவு செய்து கொள்ளவும்.

    நட்புடன்
    வலைப்பூக்கள்‌/தமிழ்ஜங்ஷன் குழுவிநர்

    பதிலளிநீக்கு
  2. Very Highly Informative article...about the origin of internet services, which has become our part and parcel of our day to day life...Good...Pl continue writing such informative article about various fields...

    பதிலளிநீக்கு