
இமெயில் கடிதங்களை மிகவும் அழகாகவும் படங்கள் நிறைந்ததாகவும் அமைத்திட அவுட்லுக் மற்றும் தண்டர் பேர்ட் போன்ற இமெயில் கிளையண்ட் புரோகிராம்கள் பல வசதிகளை நமக்கு அளித்துள்ளன. இதைப் பார்த்து பயன்படுத் திய சிலர் ஏன் நாம் எடுத்த போட்டோக்களை அல்லது ரசித்த படங்களைப் பயன்படுத்தக் கூடாது என்ற வினாவினை எழுப்புகின்றனர்.
ஏனென்றால் அவ்வாறு நாம் விரும்பும் படங்களை அமைக்கும்போது மெயில்கள் இன்னும் பெர்சனலாகத் தோற்றம் அளிக்கும். எடுத்துக் காட்டாக அவுட்லுக் எக்ஸ்பிரஸ் புரோகிராமில் சூரிய காந்தி பூ ஒன்று அழகாகத் தரப்படுகிறது. எனக்கு வந்த இன்னொரு மெயிலில் என் நண்பன் அதே போன்ற மிக அழகான மலரின் படம் ஒன்றை ஸ்டேஷனரியில் அமைத்து அனுப்பி இருந்தான். வேறு ஒரு நண்பர் தன் மெயிலில் உள்ள செய்திகளுகேற்ப படங்களைத் தேடி எடுத்து எடிட் செய்து அனுப்புகிறார். இவர்களின் செயலைப் பார்க்கும் போது நாம் தயாரிக்கும் படங்களை அழகாக இணைக்கலாம் என்று தோன்றியது. அதற்கான வழிகளையும் பார்க்க நேரிட்டது. இதோ அவை உங்களுக்காக. முதலில் நீங்கள் விரும்பும் படத்தை ஒரு பைலாக கம்ப்யூட் டரில் வைத்திருக்க வேண்டும்.
இதனை நீங்கள் எடுத்த டிஜிட்டல் கேமரா விலிருந்தும் பிளாஷ் டிரைவிலிருந்தும் மாற்றலாம். எப்படி இருந்தாலும் அதனை ஒரு டிஜிட்டல் பைலாக உங்கள் கம்ப்யூட்டரில் பதிந்து வைத்திட வேண்டும். அப்போது தான் அதனை இமெயில் ஸ்டேஷனரியில் பயன்படுத்த முடியும். இதை முடித்த பின் உங்கள் இமெயில் புரோகிராமினைத் திறக்கவும். கீழே தரப்படும் குறிப்புகள் தண்டர்பேர்ட், அவுட்லுக் எக்ஸ்பிரஸ் மற்றும் எம் எஸ் அவுட்லுக் ஆகியவற்றிற் கானது. யாஹூ மற்றும் ஹாட் மெயில் போன்ற வெப் அடிப்படையிலான இமெயில் புரோகிராம் கள் இது போன்ற ஸ்டேஷனரி வசதிகளைத் தருவதில்லை. ஓகே! இங்கு குறிப்புகளைப் பார்ப்போம்.

அப்போது உங்களுடைய படங்களை நீங்கள் தேர்ந்தெடுக்கும் வாய்ப்பு கிடைக்கும். தேர்ந்தெடுத்து வைத்துக் கொள்ளுங்கள். ஒன்றுக்கு மேற்பட்ட படங்களைத் தேர்ந்தெடுக் கலாம். அப்போதுதான் நமக்கு வெரைட்டி கிடைக்கும். இப்போது Create Mail என்பதன் அருகே உள்ள சிறிய அம்புக் குறியினை அழுத்தக் கிடைக்கும் கட்டத்தில் Select Stationery என்பதில் கிளிக் செய்திடவும். பின் நீங்கள் விரும்பும் படத்தினை பட் டியலில் பார்க்கலாம். உடனே ஓகே கிளிக் செய்தால் அந்த படம் மெயிலில் பயன்படுத்தத் தயாராய் இருக்கும்.
தண்டர்பேர்ட் இமெயில் புரோகிராமில் Write பட்டனை அழுத்தினால் புதிய இமெயில் ஒன்றை தயாரிக்க நீங்கள் தயாராய் இருப்பீர்கள். இனி இமெயில் கடிதம் ஒன்றின் மெயின் பகுதியில் கிளிக் செய்திடுங்கள். பின் Format, Page Colors and Background அழுத்திடவும். பின் File மெனுவிற்குச் செல்லவும். அதன்பின் நீங்கள் பயன்படுத்த விரும்பும் படம் உள்ள பைலைத் தேர்ந்தெடுக்கவும்.

பின் Open மற்றும் OK இல் கிளிக் செய் திடவும். இப்போது அனைத்தும் தயாராகி விட்டது. நீங்கள் விரும்பும் படத்துடன் இமெயில் கடிதத்தினைத் தயாரிக்கலாம். ஒன்றல்ல ஒன்றுக்கு மேற்பட்ட படங்களைக் கூட இதில் ஒரே மெயிலில் பயன்படுத்தலாம். இதுவே எம்.எஸ். அவுட்லுக் புரோகிரா மாக இருந்தால் முதலில் நீங்கள் எச்.டி.எம். எல். பார்மட்டில் இமெயிலை அனுப்புவ தனை உறுதி செய்திட வேண்டும். பின் புதிய இமெயில் மெசேஜ் அனுப்பு வதற்கான வழி முறைகளை மேற்கொள்ள வேண்டும்.
அதன்பின் Format, Background, Fill Effects என்றபடி செல்லவும். இதில் கிடைக்கும் டேப்களில் Picture டேப் கிளிக் செய்திடவும். பின் கிடைப் பதில் Select Picture என்ப தனைத் தேர்ந்தெடுக்கவும். இதில் நீங்கள் பயன்படுத்த விரும்பும் பட பைலைத் தேர்ந் தெடுத்து இடைச் செருகலாச் செருகலாம். அதன்பின் ஓகே கிளிக் செய்து வெளியேறலாம். அவ்வளவுதான். வழிகளைக் கற்றுக் கொண்டீர்களா! இனி நீங்களாக உங்களுக்குப் பிடித்த போட்டோ மற்றும் படங்களை இமெயிலுடன் இணைத்து உங்கள் மெயிலுக்கு ஒரு தனித்துவம் தரலாம். ஆனால் இன்னொன்றையும் கவனிக்க வேண்டும்.

முழுப் படத்தையும் நீங்கள் உங்கள் மெயிலில் வைத்திடுகையில் அதன் வண்ணங்கள் உங்கள் மெயிலில் உள்ள எழுத்துக்களைப் படிக்க இயலாத வகையில் மறைக்கலாம். அதற்காக உங்கள் கடித டெக்ஸ்ட்டை மிகவும் அழுத்தமான எழுத்து வகையில் அமைக்க வேண்டியதிருக்கும். இதுவும் பார்ப்பதற்கும் படிப்பதற்கும் சிரமமாக இருக்கலாம். எனவே படத்தினை முன்னதாகவே இளம் வண்ணத்தில் பிரைட்னஸ் குறைத்து எடிட் செய்து வைக்கலாம்.
மேலும் அனைத்து இமெயில்களுக்கும் இது போல படத்தை இணைத்தால் அது படத்தின் சிறப்பினை குறைத்துவிடும். உங்கள் நண்பர்கள் இவனுக்கு வேறு வேலை இல்லையா? என்று எண்ணத் தொடங்கலாம். எனவே குறிப்பிட்ட சில வேளைகளில் மட்டும், உங்களுடைய மற்றும் உங்கள் நண்பர்களுடைய பிறந்த நாள், திருமண நாள் வாழ்த்துக்கள், உங்கள் வெற்றி அல்லது பதவி உயர்வு குறித்த கடிதங்கள் போன்ற சிலவற்றில் மட்டும் படங்களைப் பயன்படுத்துவது அதற்கு ஒரு பொருளைத் தரும்.
0 கருத்துகள்