ஆப்பரேட்டிங் சிஸ்டம், பிரவுசர் மற்றும் பல அப்ளிகேசன் சாப்ட்வேர் தொகுப்புகளின் சோதனைத் தொகுப்புகள் முதலில் வெளியிடப்படுகின்றன. சோதனைத் தொகுப்புகளைப் பதிந்து ஆய்வு செய்வதற்கென சில வல்லுநர்கள் இந்த நிறுவனங்களுக்காக செயல்படுகின்றனர். அதே நேரத்தில் கம்ப்யூட்டர் ஆர்வலர்கள் பலர் இந்த பீட்டா பதிப்பை டவுண்லோட் செய்து சோதனை செய்கின்றனர்.
இவர்களில் பலர் ஆர்வத்தின் காரணமாகவே இதனைச் செய்கின்றனர். எது புதியதாக வந்தாலும் முதலில் பயன்படுத்திப் பார்த்துவிட வேண்டும் என்ற துடிப்பே காரணம். அதில் தவறில்லை. ஆனால் இத்தகைய சோதனை பதிப்புகளைப் பதிந்து இயக்குவதில் உள்ள பிரச்சினைகளையும் இவர்கள் அறிந்திருக்க வேண்டும். சோதனைத் தொகுப்பினைப் பதிந்து பின் சிரமப்படுவதனைக் காட்டிலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் சிலவற்றை மேற்கொள்ள வேண்டும். அவை குறித்து இங்கு காணலாம்.
1. சில சாதனங்கள் இயங்காது
உங்களிடம் பழைய ஆனால் நன்றாக இயங்கும் ஸ்கேனர், டிஜிட்டல் வீடியோ கேமரா அல்லது வேறு ஏதேனும் டிஜிட்டல் மீடியா வைத்து அதனை உங்கள் கம்ப்யூட்டருடன் இணைத்து தினந்தோறும் பயன்படுத்துகிறீர்களா! இந்த சாதனங்களைத் தயாரித்த நிறுவனங்கள் இவற்றுக்கான உதவி தருவதனைக் கைவிட்டு விட்டனவா? அப்படியானால் புதிய ஆப்பரேட்டிங் சிஸ்டத்தின் பீட்டா பதிப்பைப் பதிய வேண்டாம். ஏனென்றால் இந்த சாதனங்கள் பழையவை என்பதால் அந்த நிறுவனங்கள் புதியதாய் வரும் ஆப்பரேட்டிங் சிஸ்டங்களுக்கேற்ப இந்த சாதனங்களுக்கான டிரைவர்களை அப்டேட் செய்திருக்கப்போவதில்லை. எனவே புதிய சிஸ்டங்களுடன் இவை இணைந்து செயல்படாது. சோதனைப் பதிப்பை பயன்படுத்தி பார்க்கும் முயற்சியைக் கை விடுவதே நல்லது.
2. சாப்ட்வேர் சப்போர்ட்
ஹார்ட்வேர் சாதனங்கள் எப்படி புதிய சோதனைத் தொகுப்புகளுக்கேற்ப அப்டேட் செய்யப்படுவது இல்லையோ அதே போல சாப்ட்வேர் அப்ளிகேசன்களும் மாற்றப்படுவதில்லை. எப்படியும் சில மாறுதல்களை இந்த புதிய ஆப்பரேட்டிங் சிஸ்டங்கள் கொண்டு வரப்போகின்றன. அப்போது பார்த்துக் கொள்ளலாம் என்று சாப்ட்வேர் நிறுவனங்கள் காத்திருக்கும். நீங்கள் சோதனைத் தொகுப்பினை நிறுவி பயன்படுத்தினால் இந்த அப்ளிகேஷன் சாப்ட்வேர் தொகுப்புகள் இயங்கும். ஆனால் பாதுகாப்பில்லாமல் இயங்கும். எனவே இத்கைய அப்ளிகேஷன் சாப்ட்வேர் தொகுப்புகளைத் தினந்தோறும் பயன்படுத்துவதாக இருந்தால் பீட்டா தொகுப்பினைத் தொடாமல் இருப்பது நல்லது.
3. பிழைகள் நிச்சயம் இருக்கலாம்
சரியான பதிப்பிற்கு முந்தைய சோதனை பதிப்பாக இருந்தாலும் நிறைய கோடிங் பிழைகள் ஒரு சோதனைப் பதிப்பில் இருக்கும். இந்த பிழைகளால் உங்கள் நெட்வொர்க் இணைப்பு கிடைக்கப் பெறாமல் போகலாம்; போல்டர்கள் திறக்கப்படாமல் இருக்கலாம்; இதுவரை பெறாத புதிய பிழைச் செய்திகள் கிடைக்கலாம். சில பிழைகள் உங்கள் மல்ட்டி மீடியா பைல்களைச் சிதைக்கலாம்; வேர்ட் டாகுமெண்ட்களில் பதியப்பட்டுள்ள படங்களை நீக்கலாம். எனவே இது போன்ற எதிர்பாராத விபத்துக்களைச் சந்திக்கும் நிலை இருப்பதால் சோதனைத் தொகுப்பினைப் பதிவதை நன்கு யோசித்து செய்திடவும்.
அப்படியானால் சோதனைத் தொகுப்பினை சோதித்துப் பார்க்கவே கூடாதா? என நீங்கள் கேட்கலாம். உங்கள் ஆர்வத்திற்கு தடை போட வேண்டியதே இல்லை. நீங்கள் பயன்படுத்திப் பார்த்து அது குறித்த கருத்துக்களை அதனை வெளியிட்ட நிறுவனத்திற்கு அனுப்பலாம். அதற்கு முன் சில முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.
4. பேக் அப்
உங்களுடைய அனைத்து டேட்டா பைல்களுக்கும் பேக் அப் எடுங்கள். உங்களுடைய தனிப்பட்ட மற்றும் வர்த்தகம் சம்பந் தப்பட்ட பைல்கள் அனைத்தையும் எடுத்துவிடுங்கள். ஏனென்றால் சோதனைத் தொகுப்புகள் டிஸ்க் முழுவதையும் கரப்ட் செய்யாது. ஆனால் சில வகை பைல்களை முழுமையாகச் சேதப்படுத்தும். இந்த சேதம் கூட முழுமையாக உங்கள் கவனத்திற்கு வராது. தொடர்ந்து பயன்படுத்தும் போதுதான் தெரிய வரும். அப்போது மீண்டும் அவற்றை அமைப்பது பெரிய சிக்கலான விஷயமாகிவிடும்.
5. கம்ப்யூட்டர் பேக் அப்
உங்களுடைய கம்ப்யூட்டர் ஏற்கனவே நல்லதொரு ஆப்பரேட்டிங் சிஸ்டத்தில் இயங்கிக் கொண்டிருக்கும். அத்தகைய நிலையில் உங்கள் கம்ப்யூட்டர் ஹார்ட் டிஸ்க்கினை அப்படியே முழுமையாக பேக் அப் செய்திடவும். இதற்கு டிஸ்க் குளோனிங் டூல் என சில புரோகிராம்கள் உள்ளன. இவற்றில் சிறந்தவையாக Norton Ghost Clonezilla கருதப்படுகின்றன. இதில் இரண்டாவதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது ஓர் இலவச புரோகிராம். அதனையே பயன்படுத்தலாம். இந்த புரோகிராம்கள் உங்கள் ஹார்ட் டிஸ்க்கின் காப்பி ஒன்றை அப்படியே எடுத்து வைத்துவிடும். சோதனைப் பதிப்பினால் பிரச்சினை ஏற்பட்டு அதனை நீக்கிவிட்டு பின் மீண்டும் பழைய ஆப்பரேட்டிங் சிஸ்டத்தினை அமைக்க வேண்டுமானால் நேரமும் உங்கள் உழைப்பும் அதிகம் தேவைப்படும். அந்த நேரத்தில் இது போன்ற குளோனிங் செய்யப்பட்ட டிஸ்க்கினை எளிதாக சில நிமிடங்களில் பதித்துவிடலாம். உடனே பழையபடி இயங்கவும் தொடங்கிவிடலாம். இந்த குளோன் டிஸ்க் இமேஜ் கூட இரண்டு நகல் எடுத்து வைப்பது நல்லது.
6. அவர்கள் வரமாட்டார்கள்
ஒன்றை மனதில் வைத்துக் கொள்ள வேண்டும். இந்த சோதனை பதிப்புகளினால் உங்கள் கம்ப்யூட்டரில் பிரச்சினை ஏற்பட்டு உங்கள் கம்ப்யூட்டர் பயன்பாடு பாதிக்கப்பட்டால் அந்த சோதனை பதிப்பினை வழங்கிய நிறுவனம் நிச்சயமாய் உதவாது. நீங்கள் இந்த சோதனை பதிப்பை இன்ஸ்டால் செய்திடும் முன், இது போல இழப்பு அல்லது பிரச்சினை ஏற்பட்டால் நாங்கள் பொறுப்பு ஏற்க மாட்டோம் என்ற கண்டிஷன் போட்டு அதற்கு நீங்கள் ஒத்துக் கொண்ட பின்னர் தான் உங்களால் அதனைப் பதிய முடியும். எனவே எந்த விளைவினையும் நீங்களே சமாளிக்க முடியும் என்ற நம்பிக்கை இருந் தால் மட்டுமே இந்த முயற்சியில் ஈடுபடுங்கள்.
7. எந்த கம்ப்யூட்டரில் சோதனை?
இப்போதெல்லாம் வீடுகளில் கூட ஒன்றுக்கும் மேற்பட்ட கம்ப்யூட்டர்களை வைத்து இயக்குகிறோம். ஆனால் ஒரு கம்ப்யூட்டரில் தான் முக்கிய பணிகளைத் தொடர்ந்து மேற்கொள்கிறோம். இது போன்ற சோதனைகளை எல்லாம் இந்த முக்கிய கம்ப்யூட்டரில் வைத்துக் கொள்ளக் கூடாது. அப்போதுதான் ஏதேனும் பிரச்சினை ஏற்பட்டால் நம்முடைய அன்றாட கம்ப்யூட்டர் பணி பாதிக்காது. பீட்டா பதிப்புகளைப் பதிந்து இயக்கிப் பார்த்து அந்த புதிய அனுபவத்தில் மகிழ்ச்சி கொள்வது நமக்கு உற்சாகம் தரும் செயல்தான். இருப்பினும் மேலே சொன்னபடி ஒரு பாதுகாப்பு வலையை ஏற்படுத்திக் கொண்டால் இன்னும் உற்சாகமாக இருக்கலாம் அல்லவா!

0 கருத்துகள்