விண்டோஸ் விஸ்டா சிஸ்டம் : சில டிப்ஸ்

விஸ்டாவில் ஏரோ கிளாஸ்

விஸ்டா இயக்கம் வந்த போது ஊடுருவிப் பார்க்கும் வசதியான ஏரோ கிளாஸ் ட்ரான்ஸ்பரன்சி (Aero Glass Transparency) அதிகப் பாராட்டுதலைப் பெற்றது. ஆனால் பலர் பின் நாளில் இது எதுக்கு என்று எண்ணத் தொடங்கினார் கள். மேலும் கம்ப்யூட்டர் ப்ராசசரின் சக்தியை அதிக அளவில் எடுத்துக் கொண்டதனால் இந்த வசதி இருக்கையில் கம்ப்யூட்டர் செயல்படும் வேகம் சிறிது குறைந்தது. இதனை நீக்கினால் நல்லது என எண்ணுபவர்களுக்கு இதோ ஒரு வழி காட்டுதல். டெஸ்க்டாப்பில் ரைட் கிளிக் செய்திடவும். அதில் வரும் மெனுவில் Personalise என்பதைத் தேர்ந்தெடுக்கவும்.

பின் இது சார்ந்த டயலாக் பாக்ஸ் கிடைக்கும். இதில் ‘Windows Color and Appearance’ என இருக்கும் இடத்தைக் காணவும். இது மேலாக இருக்கும். இந்த லிங்க்கைக் கிளிக் செய்து கிடைக்கும் விண்டோவில் ‘Enable Transparency’ என்று இருப்பதில் உள்ள டிக் அடையாளத்தை எடுத்துவிடவும். பின் ஓகே கிளிக் செய்தால் விஸ்டாவில் ஏரோ கிளாஸ் ட்ரான்ஸ்பரன்சி எபக்ட் இருக்காது.

ஹார்ட்
டிஸ்க் பிரித்தல்

விஸ்டா இயக்கம் ஹார்ட் டிஸ்க்கை இரண்டு அல்லது கூடுதலான பிரிவில் அமைக்க உதவிடுகிறது. இதனால் விஸ்டா ஒவ்வொரு பிரிவினையும் தனித்தனி ஹார்ட் டிஸ்க்காகக் கருதிச் செயல்படும். இதன் மூலம் டாகுமெண்ட்களையும், புரோகிராம்களையும் மற்றும் சில பைல்களையும் நம்மால் பிரித்து வைத்து சேவ் செய்து பயன்படுத்த முடியும். ஹார்ட் டிஸ்க்கில் புதிய பிரிவு ஒன்று உருவாக்க வேண்டும் என்றால் Start கிளிக் செய்து My computer என்பதில் ரைட் கிளிக் செய்திடவும். கிடைக் கும் விண்டோவில் Manage என்ற ஆப்ஷனைத் தேர்ந்தெடுக்கவும்.

இடது பக்கம் உள்ள பிரிவில் (Left Pane) எந்த டிஸ்க்கில் புதிய பிரிவு ஏற்படுத்த வேண்டும் என எண்ணுகிறீர்களோ அந்த பிரிவினைத் தேர்ந்தெடுக்கவும். பின் Shrink Volume என்பதனைத் தேர்ந்தெடுக்கவும். அடுத்து சிறிய அளவில் பிரிவினை ஏற்படுத்தும் வகையில் அளவினை உருவாக்கவும். பின் Shrink என்ற பிரிவில் கிளிக் செய்திடவும். இனி டிரைவ் ஸ்பேஸில் Unallocated என்று இருப்பதில் ரைட் கிளிக் செய்திடவும். கிடைக்கும் மெனுவில் New Simple Volume என்பதில் கிளிக் செய்திடவும். அதன் பின் கிடைக்கும் விஸார்டில் கேட்கும் கேள்விகளுக்கான உங்கள் ஆப்ஷன்களை அமைக்கவும்.

முடிவில் தேர்ந்தெடுத்த டிரைவில் பயன்படுத்தாத இடத்தைப் பிரித்து நீங்கள் குறிப் பிட்ட அளவில் புதிய டிஸ்க் பிரிவு ஒன்று கிடைக்கும்.

அழிந்த ரீசைக்கிள் பின்னை மீட்க

விஸ்டாவில் ரீ சைக்கிள் பின் ஐகானில் ரைட் கிளிக் செய்தால் கிடைக்கும் மெனுவில் அதனை அழித்துவிட Delete என்று ஒரு ஆப்ஷன் கிடைக்கும். சிலர் இதனை அறியாமல் கிளிக் செய்து அழித்துவிடுகிறார்கள். எப்படி அழிப் பது எளிதாக உள்ளதோ அதே போல் இதனை மீண்டும் பெறுவது விஸ்டாவில் எளிதான ஒரு செயல்பாடாக உள்ளது. அழித் ததை மீண்டும் பெற டெஸ்க்டாப்பில் ரைட் கிளிக் செய்திடவும். மெனுவில் Personalise என்பதைத் தேர்ந்தெடுக்கவும்.

பின் கிடைக்கும் விண்டோவில் இடது பக்கம் Change Desktop Icons என்பதில் கிளிக் செய்து தேர்ந்தெடுக்கவும். அதில் Recycle Bin என்னும் ஆப்ஷனில் கிளிக் செய்தால் மீண்டும் ரீசைக்கிள் பின் ஐகான் திரையில் தோன்றும்.

விஸ்டாவில் ரன்

விண்டோஸ் எக்ஸ்பி ஸ்டார்ட் பட்டனை இயக்கினால் கிடைக்கும் மெனுவில் கீதண என்று ஒரு பிரிவு இருக்கும். இதனை இயக்கினால் புரோகிராம்களின் பெயரை நேரடியாக டைப் செய்து இயக்கலாம். ஆனால் விஸ்டாவில் இந்த செயல்பாட்டிற்கான கீதண கட்டம் இல்லை. இருப்பினும் இதனை உருவாக்கி வைத்துக் கொள்ளலாம். Start பட்டனில் ரைட் கிளிக் செய்திடவும். கிடைக்கும் மெனுவில் Properties என்பதைக் கிளிக் செய்திடவும். பின் ஸ்டார்ட் மெனு செல்லவும். இங்கு ஸ்குரோல் செய்து கீழே சென்றால் Run Command என்று ஒரு பாக்ஸ் கிடைக்கும். இதில் ஓகே கிளிக் செய்தால் ரன் பாக்ஸ் உங்களுக்கு ஸ்டார்ட் பட்டன் மெனுவில் கிடைக்கும்.

பைல்களை எளிமையாகத் தேர்ந்தெடுக்க

பைல் டைரக்டரியில் இருந்து பைல்களைத் தேர்ந்தெடுக்க பல வழிகள் உள்ளன. தொடர்ந்து இருக்கும் பைல்களைத் தேர்ந்தெடுக்க முதல் பைலைத் தேர்ந்தெடுத்துவிட்டு பின் இறுதி பைலை ஷிப்ட் கீ அழுத்தித் தேர்ந்தெடுத்தால் இரண்டிற்கும் இடையே உள்ள பைல்கள் அனைத்தும் தேர்ந்தெடுக்கப்படும்.

பைல்களை விட்டு விட்டு குறிப்பிட்டவற்றை மட்டும் தேர்ந்தெடுக்க வேண்டும் எனில் கண்ட்ரோல் கீயினை அழுத்தியவாறு பைல்களைத் தேர்ந்தெடுத்தால் தேர்ந்தெடுக்கும் பைல்கள் வரிசையாக இல்லாதபோதும் மொத்தமாகத் தேர்ந்தெடுக்கப்படும்.

பின் இவற்றை என்ன செய்திட வேண்டுமோ செய்து கொள்ளலாம்.இது போல ஷிப்ட் மற்றும் கண்ட்ரோல் கீகளை அழுத்தி பைல்களைத் தேர்ந்தெடுக்காமல் அந்த பைல்களுக்குப் பக்கத்தில் சிறிய கட்டங்களை ஏற்படுத்தி அந்த கட்டங்களில் டிக் அடையாளம் ஏற்படுத்தி பைல்களை செலக்ட் செய்யக் கூடிய வசதி கிடைத்தால் சிறப்பாக இருக்கும் அல்லவா?

இதற்கான வசதியை விஸ்டா கொண்டுள்ளது. ஏதேனும் ஒரு போல்டரைக் கிளிக் செய்து Organize என்பதில் கிளிக் செய்திடவும். பின் அதில் Folder and search Options’ என்பதைத் தேர்ந்தெடுக்கவும். இங்கு View டேப்பிற்குச் செல்லவும். அங்கு ‘Use check boxes to select item’ என்பதில் டிக் ஏற்படுத்தி ஓகே கிளிக் செய்திடவும். பின் போல்டரைத் திறந்தால் பைல்களின் பெயருக்கு எதிரே சிறிய கட்டங் கள் கிடைக்கும். இதில் கிளிக் செய்து பைல்களைத் தேர்ந்தெடுக்கலாம்.

சென்ட் டூ மெனுவை நீட்டலாம்

Send To மெனுவில் கூடுதலாக பைல்களை பதிப்பதில், விஸ்டா இயக்கம் எக்ஸ்பி இயக்கத்தில் இருந்து சற்று மாறுபட்டுள்ளது. விஸ்டாவில் Control Panel ஐத் திறக்கவும். அதன்பின் Folder Options பிரிவைத்தேர்ந்தெடுக்கவும். கிடைக்கும் விண்டோவில் View டேப்பினைத் திறக்கவும். இங்கு தரப்படும் ஆப்ஷன்களில் Show hidden Files and Folders என்பதைத் தேர்ந்தெடுத்து ஓகே கிளிக் செய்திடவும். இனி ஸ்டார்ட் – கம்ப்யூட்டர் எனக் கிளிக் செய்து சி டிரைவினைத் திறக்கவும். இதில் யூசர்ஸ் என்னும் போல்டரைத் திறக்கவும்.

இதில் உங்களுடைய பெயரை யூசர் நேமாக உள்ளதைத் தேர்தெடுக்கவும். அடுத்து App Data, Roaming, Microsoft Windows, Send To என வரிசையாகச் செல்லவும். போல்டரைக் காண முடியாவிட்டால் %AppData%\ Microsoft Windows\Send To என அட்ரஸ் பாரில் டைப் செய்திடவும். அடுத்து என்டர் செய்த பின் Send To மெனுவில் நீங்கள் உங்களுக்குத் தேவையானதை இணைக்கலாம்.

குயிக் லாஞ்ச் கீ போர்ட் ஷார்ட் கட்

அடிக்கடி பயன்படுத்தும் புரோகிராம்களை உடனுக்குடன் விரைவாக இயக்க நமக்கு Quick Launch பார் பயன்படுகிறது. இந்த பாரில் உள்ள புரோகிராம்களை ஷார்ட் கட் கீகளைக் கொண்டும் இயக்கலாம். இதற்கு விண் டோஸ் கீ அழுத்தவும்.

அதன் பின் குயிக் லாஞ்ச் பாரில் உள்ள ஐகான் எத்தனாவதாக உள்ளதோ அந்த எண்ணை அழுத்தவும். எடுத்துக் காட்டாக குயிக் லாஞ்ச் பாரில் இன்டர்நெட் எக்ஸ்புளோரர் மூன்றாவதாக அமைக்கப்பட்டிருந் தால் விண்டோஸ் கீயுடன் 3 என்ற எண்ணை அழுத்தினால் இன்டர்நெட் எக்ஸ்புளோரர் இயக்கப்படும். இரண்டு கீகளையும் சேர்த்து இயக்க வேண்டும்.

நிரந்தரமாக மெனு பார்

விஸ்டாவில் போல்டர்களைக் காண்கையில் மெனு பார் மறைக்கப்படும். அப்போதைக்கு இந்த மெனு தேவை எனில் அடூt கீயை அழுத்த கிடைக்கும். பின் மீண்டும் மறையும். இதற்குப் பதிலாக எப்போதும் மெனு கிடைக்கும்படியும் இதனை அமைக்கலாம்.

போல்டர் ஒன்றைத் தேர்ந்தெடுத்துப் பின் Organize பட்டனை அழுத்தவும். இதில் ‘Folder and search options’ என்பதனைத் தேர்ந்தெடுக்கவும். பின் வியூ டேப்பிற்குச் செல்லவும். அங்கு ‘Always show menus’ என்று இருக்கும் இடத்தில் உள்ள பாக்ஸில் டிக் அடையாளத்தை ஏற்படுத்தவும். பின் ஓகே கிளிக் செய்து வெளியேறவும்.

விண்டோஸ் பார்டர்களைக் குறைக்க: விஸ்டாவின் ஏரோ கிராபிக்ஸ் புரோகிராம்களுக்கும் போல்டர்களுக்கும் நல்ல திட்டையான பார்டர்களைத் தருகிறது. இமேஜ் எடிட்டிங் சாப்ட்வேர் போன்ற புரோகிராம்களைக் கையாள்கையில் இந்த பார்டர்கள் அதிகம் இடத்தை எடுத்துக் கொள்கின்றன. இடம் எடுத்துக் கொள்வது மட்டுமின்றி நாம் பணியாற்ற இடம் தராமல் எரிச்சலூட்டுகின்றன. இந்த பார்டர்களின் அளவைக் குறைக்க முடியாதா என்ற ஆசை நமக்கு எழும். இதற்கு வழிகளைத் தருகிறது விஸ்டா. இந்த பார்டர்களை அளவோடு வைத்திட டெஸ்க்டாப்பில் கிளிக் செய்திடவும்.

பின் பெர்சனலைஸ் என் பதைத் தேர்ந்தெடுக்கவும். கிடைக்கும் விண் டோவில் Windows Color and Appearance என்ற இடத்தில் கிளிக் செய்திடவும். இப்போது செட் செய்வதற்கான டயலாக் பாக்ஸ் கிடைக்க வேண்டும். இது கிடைக்காவிட்டால் ‘Open classic appearance properties for more color options’ என்பதில் கிளிக் செய்திடவும். அதில் Advanced என்ற பட்டனில் கிளிக் செய்திடுக. பின் கிடைக்கும் மெனுவில் Border Padding என்பதைத் தேர்ந்தெடுக்கவும். இங்கு சைஸ் செட்டிங் அளவை 4 க்கும் குறைவாக அமைக்கவும். அதன்பின் ஓகே இருமுறை கிளிக் செய்து வெளியேறவும். இனி எத்தனை விண்டோக்கள் திறந்தாலும் பார்டர்கள் எடுக்கும் இடம் குறைவாகவே இருக்கும்.

கருத்துரையிடுக

1 கருத்துகள்

  1. எனது லேப்டாப்பில் 'C" drive இல் 60 GB free space உள்ளது. நான் partition செய்ய விரும்பி, நீங்கள் சொன்னவற்றை செய்தேன், அதாவது shrink செய்கையில் available space இல் 2 GB மட்டுமே காட்டுகிறது. நான் 30 GB க்கு partition பண்ண வேண்டும். உதவ முடியுமா?

    பதிலளிநீக்கு