நாம் ஏற்கனவே கூகிள் டாக்கில் (Google Talk) ஒரே நேரத்தில் பல கணக்குகளில் இருந்து இயக்குவதை பற்றி பார்த்தோம். அந்த பதிவை படிக்காதவர்கள் இங்கே சென்று படித்துக்கொள்ளலாம்.
நம்மில் பலர் யாஹூவின் சேவையான யாஹூ மெசஞ்சரை பயன்படுத்துகிறோம். ஆனால் அதில் சில தேவைகளுக்காக பல கணக்குகள் (Account) வைத்திருப்போம் . அவற்றை எல்லாம் ஒரே நேரத்தில் மெசஞ்சரில் இல் லாக் இன் (Sign In) செய்ய முடியாது .
கீழே உள்ள வழிமுறைகளை செய்வதன் மூலம் நீங்கள் ஒரே நேரத்தில் பல கணக்குகளில் இருந்து இயங்க முடியும்.
முதலில் Yahoo messenger ஐ இங்கே தரவிறக்கம் செய்து உங்கள் கணனியில் நிறுவிக் கொள்ளுங்கள்.
1. முதலில் Start மெனுவுக்கு சென்று "Run" என்பதனை கிளிக் செய்யவும். அதில் regedit என்று டைப் செய்து OK செய்யவும்.
2.உங்கள் கணித்திரையில் Registry Editor விண்டோ தோன்றியிருக்கும். அதில் HKEY CURRENT USER க்கு பக்கத்தில் உள்ள "+" குறியை அழுத்துங்கள். அதன் வழியே Software->Yahoo->Pager->Test க்கு செல்லவும்.
3.இனி Registry Editor இல் உள்ள வலதுபக்க பெட்டியில் வெளியே வைத்து Right Click செய்யவும். நீங்கள் கிளிக் செய்தவுடனேயே "New" என்ற Option தோன்றும். அதில் DWORD Value என்பதனை கிளிக் செய்யுங்கள்.
4. நீங்கள் உருவாக்கிய "New Value #1" என்பதனை "Plural" என்று பெயர் மாற்றம் செய்து கொள்ளுங்கள் . ( கீழே படத்தை பார்க்கவும்)
5. நீங்கள் அதனை பெயர் மாற்றம் செய்த பின்பு அதனை "Double Click" செய்யுங்கள் . Value Data என்ற Column இல் "0" ஆக இருப்பதை "1" ஆக மாற்றிக் கொள்ளுங்கள். இனி OK செய்து வெளியேறுங்கள்.
இனி வேலை செய்கிறதா என்று பாருங்கள் , இல்லாவிட்டால் ஒருமுறை உங்கள் கணணியை ரீ-ஸ்டார்ட் செய்து பயன்படுத்துங்கள். மறக்காமல் ஒரு பின்னூட்டத்தையும் எழுதுங்கள்.
12 கருத்துகள்
DigSby - இதையும் பயன்படுத்திப் பாருங்களேன் : மேலதிக விபரங்களுக்கு :
பதிலளிநீக்குஇணைய அரட்டை அடிக்க Digsby - (பலவும் ஒன்றில்)
super & excellent
பதிலளிநீக்கு@ தமிழ்நெஞ்சம்
பதிலளிநீக்கு@ தர்ஷன் ' in ' DSHAN2009 NETWORK
நன்றி தமிழ்நெஞ்சம் & தர்ஷன் ' in ' DSHAN2009 NETWORK
பதிவு நன்று!
பதிலளிநீக்குபதிவுலகம் மத்தியில் தனித்து நிற்க்கின்றீர்கள்!!
நம் பதிவுகளையும் கொஞ்சம் ஏர்ரெடுத்து பாருங்கள்.
உங்கள் கருத்துக்களை சொல்லுங்கள்!
www.kalakalkalai.blogspot.com
@ தமிழ்நெஞ்சம்
பதிலளிநீக்குஆனால் Digsby இல் இரண்டு கணக்குகள் வைத்திருந்தால் அதை இரண்டையும் ஒரே நேரத்தில் இயக்க முடியுமா?
@ கலையரசன்
பதிலளிநீக்குநன்றி கலையரசன். உங்கள் பதிவை பார்த்தேன் பின்னூட்டமும் இட்டுவிட்டேன்.
முடியும். we can.
பதிலளிநீக்கு//ஆனால் Digsby இல் இரண்டு கணக்குகள் வைத்திருந்தால் அதை இரண்டையும் ஒரே நேரத்தில் இயக்க முடியுமா?
Please see here :
பதிலளிநீக்குUse multiple Google Talk accounts at the same time with Digsby
நன்றி நண்பரே பயன்படுத்திக்கொண்டேன், மிகவும் பயனுள்ளதாக இருந்தது
பதிலளிநீக்குமிகவும் பயனுள்ளது. பணிகள் சிறக்க வாழ்த்துக்கள்....
பதிலளிநீக்குthnx
பதிலளிநீக்குமிக்க நன்றி நண்பரே
பதிலளிநீக்கு